இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள நாடியுள்ளேன்…
நண்பன் என்றால் மனம் விட்டு பேசுவது இயல்புதானே. என் நண்பன் அவசரமாக என்னை நாடி வந்து தன் மனதில் கொண்டிருக்கும் ஆசையினை சொல்ல வந்தான். “நான் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள நாடியுள்ளேன் உனக்கு தெறித்த பெண் இருந்தால் சொல்” என்றான்.
நான் அதிர்சியடைத்து “என்ன விளையாடுகிறாயா? அருமையான, அழகான குணமான செல்வந்தர் வீட்டுப் பெண்ணை மனைவியாக பெற்றுள்ள உனக்கு ஏன் இந்த தவறான எண்ணம் வந்தது?” என வியப்புடன் கேட்டேன்.
அதற்கு அவன் சொன்ன பதில் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது!
அவன் சொன்னது; “என் மனைவி அனைத்து வகையிலும் உயர்ந்தவள் தான். நான் அவளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் அவள் எப்பொழுதும் என்னிடம் வீண் சண்டையிட்டு என் மனைதை நோகச் செய்து எனக்கு மன அமைதி இல்லாமல் ஆக்கி விடுகின்றாள். அதற்கு மாற்று வழி எனக்கு தோன்றியது. நான் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால் அவளது சண்டை அந்த இன்னொரு மனைவியுடன் திரும்பிவிட நான் அமைதியாக இருப்பேனல்லவா!” என்றான்!
அவனுக்கு நான் சொன்ன பதில் இதுதான்.
“ஓர் இறை நம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, .நூல்: முஸ்லிம்)
“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத், திர்மிதீ)
அவனுக்கு அறிவுரை கூறிய பின்பு வீட்டுக்கு சென்று என் மனைவியின் ஊடலுடன் ஒரு செய்தியை சொன்னேன்.
“இரண்டாம் திருமணம் பற்றி ஒரு பெரியவர் பேசுவதனைக் கேட்க நேர்ந்தது. ‘ஆண்களில் பலருக்கு அந்த எண்ணம் இருந்தாலும் மனைவிக்கு பயந்து அதனை செய்வதில்லை மற்றும் ஒரு மனைவியை வைத்து குடும்பம் நடத்துவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் பற்றி நாம் எப்படி இந்த கால கட்டத்தில் யோசிக்க முடியும்?’ எனக் கூறினார்'”.
ஆகா! நல்ல செய்தி கிடைத்து விட்டது என்ற ஆர்வத்துடன் அந்த பெரியவர் சொன்ன இரண்டாம் திருமணம் பற்றி எனது மனைவியிடம் சொன்னேன். அவள் சொன்ன ஒரே பதில் “இத்தனை நாட்கள் அவர் செய்த பல நல்ல பிரசங்கங்களைப் பற்றி சொல்லாமல் இதனைப் பற்றி மட்டும் ஏன் சொல்கின்றீர்கள்?” என வினவினாள். நான் வாய் அடைத்துப் போய் அமைதியானேன்.
source: http://nidurseasons.blogspot.in/2012/02/blog-post_04.html