கருவுற்ற பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!
A. வலி நிவாரணிகள்
1. அமிடோபைரின் (அனால்ஜின்) Amidopyrine / Analgin
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இது. ஆனல், இந்தியாவில் இன்னும் கிடைக்கிறது. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை இது பாதிக்கிறது. அக்ரான்யூலோசைட்டோஸிஸ் ( Agranulocytosis ) என்ற பாதிப்பு ஏற்பட்டு கருவிலிருக்கும் உயிர் பாதிக்கப்படலாம். இதை பயன்படுத்தாதீர்கள்.
2. ஆஸ்ப்ரின் (Asprin)
அதிக அளவில் ஆஸ்ப்பிரின் சாப்பிடுவது முதல் மூன்று மாதங்களில் கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைக்கு மஞ்சள் காமாலை வர இது காரணமாகலாம்.
3. ஃபெனைல்புடாஸோன் (Phenylbutazone)
இது வாத நோய்க்காகத் தரப்படுகிறது. ஆனால், இதைவிட பாதுகாப்பான மருந்துகள் உள்ளன. சில நாடுகள் இதைத் தடை செய்துள்ளன. இதை உட்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
4. இண்டோமென்தாஸின் Indomenthacin)
இதைக் கருவுற்ற ஆரம்ப நாட்களில் உபயோகப்படுத்தினால் கருவின் உடலில் பாதிப்புகள் உண்டாகும்.
5. குளோம்ஃபெனிகால் (Chloramphenicol)
டைபாய்டு காய்ச்சலுக்கு இது உபயோகப்படுத்தப்படுகிறது. கடைசி சில வாரங்களில் சாப்பிட்டால் குழந்தை இறக்கக் காரணமாகும்.. எச்சரிக்கை.
6. குளோரோக்குவின் (Chloroquine)
மலேரியா பாதிப்பு கடுமையாக இருந்தால் இந்த மருந்து தரப்படும். கருவுற்ற ஆரம்ப நாட்களில் இதைச் சாப்பிட்டால் குழந்தைக்கு நிரந்தர் செவிட்டுத்தன்மை எற்படும்.
7. நைட்ரோரான்டாய்ன் (Nitrourantoin)
சிறுநீரகத் தொற்றுக்கு இந்த மருந்து தரப்படுகிறது. குழந்தைப் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தரப்பட்டால் இரத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டு குழந்தைக்கு மஞ்சல் காமாலை வரும்.
8. ப்ரைமாக்வின் (Primaquine)
மலேரியாவுக்கான இந்த மருந்தை கர்ப்பமான ஆரம்ப நாட்களில் சாப்பிட்டால் இரத்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தி குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.
9. குவினைன் (Quinine)
கர்ப்பமான ஆரம்ப மாதங்களில் இதை உபயோகித்தால் கரு கலைந்துவிடலாம். குழந்தைக்கு பார்வைக் கோளாறும் ஏற்படலாம்.
10. ஸ்ட்ரெப்டோமைஸின் (Streptomycin)
காச நோய்க்காகத் தரப்படும் இந்த மருந்து, காது கேளாமைக்கும், தசைகள் பலவீனமடையவும் காரணமாகின்றன.
11. ஸல்ஃபானமைட் (Sulfonamides)
பிரசவத்துக்கு முந்திய காலக் கட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய மருந்துகளில் இதுவும் ஒன்று. இவற்றால் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரலாம்.
12. டெட்ராஸைக்ளின் (Tetracyclines)
கட்டாயம் தவிர்க்கப்படவேன்டிய மருந்து இது. கருவின் எலும்புகள் மற்றும் பற்களில் இது படிந்துவிடும்.
B. இயக்குநீர்கள் :
13. கார்ட்டிஸோன், ப்ரெட்னிஸோன் மற்றும் ப்ரெட்னிஸோலோன் (Cortisone, Prednisone and Prednisolone – Corticosteriods)
இந்த மருந்துகளின் காரணமாக குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. சிலருக்கு இவற்றால் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
14. டை ஹைடிரோஜெஸ்ட்ரோன், எதிஸ்ட்ரோன், நாரெதிஸ்ட்ரோன் Dihydrogesterone, Ethisterone, Noretheisterone)
கருச்சிதைவு நடந்துவிடும். அபாயத்தைத் தவிர்க்க அதிக அளவில் இந்த மருந்துகள் தரப்பட்டால் ஆண் தன்மையுடன் கூடிய பெண் குழந்தை பிறக்கும். ஆகவே, இதை மிக மிக அளவாகச் சாப்பிட வேண்டும்.
15. எஸ்ட்ரோஜன், ஸ்டில்போஸ்ட்ரால் (Estrogen, Stilboestrol)
இந்த மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் பருவமடையும்போது பெண் உறுப்பில் புற்று ஏற்படலாம்.
C. வைட்டமின்கள் :
16. வைட்டமின் ஏ
அதிக அளவில் இதை உட்கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படலாம்.
17. வைட்டமின் கே
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தவோ, தவிர்க்கவோ சிறு குழந்தைகளுக்கு இது தரப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு இது தரப்படுவதில்லை.
18. கருத்தடை மாத்திரைகள், ஊசி மருந்துகள்
இதைப் பயன்படுத்தும்போது கரு வளர்ந்தால், மருத்துவரைக் கலந்தாலோசித்து கரு வளரலாமா என்பது பற்றி உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் கருத்தடை சாதனங்களை உபயோகிக்க விரும்பினால், நீங்கள் கருவுற்றிருக்கிறீர்கள என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம்.
– டாக்டர். மு. குமரேசன்