ஆணும் பெண்ணும்… 20/20
1. ஒரு பெண், ஒரு கணவனை அடையும் வரையில், தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாள். ஆண், ஒரு மனைவியை அடையும் வரையில், எதிர்காலத்தைப் பற்றி ஒரு போதும் கவலைப்படுவதில்லை.
2. ஒரு பெண், ஒரு ஆணைப் பொது இடத்தில் வைத்துக் கன்னத்தில் அறைந்தால், அவன் தான் ஏதோ தவறு செய்து விட்டான் என்றே அனைவரும் எண்ணிவிடுகிறார்கள்.
3. ஆண்களின் மூளை தீர்வை மையம் கொண்டவை. பெண்களின் மூளை செயல்பாட்டை மையம் கொண்டவை.
4. ஆண்கள் சாதனையை மதிக்கிறார்கள். பெண்கள் உறவுகளை மதிக்கிறார்கள்.
5. ஒரு பெண் உடையுடுத்தும்போது, தட்பவெப்பநிலை, பருவகாலம், அப்போதைய ஃபேஷன், தனது உடலின் நிறம், தான் போகுமிடம், அன்று தன்னைப்பற்றிய தனது சொந்த மனநிலை, சந்திக்கப்போகும் நபர் மற்றும் செய்யப்போகும் செயல் இவற்றைப் பொறுத்து உடையணிவாள். ஒரு ஆண், தான் ஒரு நாற்காலியின் மீது போட்டுவைத்துள்ள உடையை முகர்ந்து பார்த்துவிட்டு உடுத்திக்கொள்வான்.
6. ஒரு பெண்ணுக்கு ஒரே ஆணை மட்டும் நன்றாகத் அறிந்திருந்தால் போதும் – எல்லா ஆண்களையும் புரிந்துகொள்ள அது போதுமானது. ஆனால், ஒரு ஆணுக்குப் பல பெண்களைத் தெரிந்திருக்கக்கூடும். அவர்களில் ஒருத்தியைக்கூட அவன் புரிந்து கொண்டிருக்கமாட்டான்.
7. எவ்வளவு அதிகமாக ஒரு பெண் தொணதொணக்கிறாளோ, அவ்வளவு அதிகமாக அவள் தனிமைப் படுத்தப்படுகிறாள்.
8. திருமணமான ஆண்கள், திருமணம் ஆகாத ஆண்களை விடவும் அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆண்களோ, திருமண வாழ்க்கை சலிப்பின் காரணமாக மேலும் நீண்டதாக உள்ளது போலத் தோன்றுகிறது என்று கூறுகின்றனர்.
9. நன்றாக உடை உடுத்தியுள்ள ஒரு ஆணைப்பார்க்கும் போது அவன் மனைவி அவனுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமைசாலியாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
10. தாம் விரும்புவதைப் பெறுவதற்கு ஆண்கள் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நேரடி அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். பெண்கள் உணர்ச்சிரீதியான மிரட்டலை விரும்புகிறார்கள்.
11. ஒரு பெண் தனக்கு அறிவுறை வழங்குவது என்பது அவன் ஒரு வேலையைத் தவறாகச் செய்து கொண்டிருக்கிறான் என்றும் தான் அவனை நம்பவில்லை என்றும் சொல்வதற்குச் சமம் என்று ஒரு ஆண் நினைக்கிறான்.
12. ஒரு மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது கார் விபத்தில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு, ஒரு பெண்ணைவிடவும் ஒரு ஆணுக்குத்தான் இருமடங்கு உள்ளது.
13. ஒரு பெண் ஒரு ஆணைத் தண்டிக்க விரும்பினால், அதற்கு மிகச் சுலபமான வழி, அவனுடன் நிறுத்தாமல் பேசியவாறு, அடிக்கடி விஷயத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுதான்.
14. ஒரு பெண்ணின் இறுதியான உச்சக்கட்ட கற்பனை, கனவு, ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களைக் கொண்டிருப்பது என்று ஒரு சமூகவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தக் கனவில், ஒரு ஆண் சமைத்துக் கொண்டும், மற்றொருவன் சுத்தம் செய்து கொண்டும் இருக்கிறான்.
15. ஒரு பெண்ணின் தொழில் பேச்சு தனக்குப் புரியவில்லையென்றால், ஒரு ஆண் பெரும்பாலும் புரிந்துகொண்டது போலப் பாவனை செய்வது வழக்கம்.
16. வயதில் மூத்த ஆண்கள் கூடுதல் அனுபவமும், அதிகமான ஆதார வளங்களும் கொண்டிருப்பதால் பெண்கள் அவர்களை, விரும்புகிறார்கள்.
17. ஆண்களுக்கு மூளையைவிட அழகு விருப்பமானதாக உள்ளது. ஏனெனில், அவர்களால் சிந்திக்க முடிவதை விட, நன்றாகப் பார்க்க முடிகிறது.
18. மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் குழந்தை முகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
19. ஆண் தன்னை நன்றாக உணர வேண்டி ஒரு பெண் பொய் சொல்கிறாள். தான் நன்றாகத் தோன்ற வேண்டி ஒரு ஆண் பொய் சொல்கிறான்.
20. ஆண்கள் பெண்களை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். பெண்கள் ஆண்களை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த ஒரு விஷயத்தை ஆண்களும், பெண்களும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.