ங்கொய்யால…! யார ஏமாத்தப்பாக்குறே…?
மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி, அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து….
“இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க”ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க…
அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க….
காலம் வேகமாக நகர்ந்தது.
பேரன் வளர்ந்து பெரியவனானதும்,
“எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்” என்று கேட்டான்.
அதற்கு அந்த உறவினர் “இந்தாப்பா…உன் தாத்தா கொடுத்த பணம்”ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொடுத்தார்.
உடனே பேரன் “இது அநியாயம் எங்க தாத்தா கொடுத்தது அஞ்சு கோடிரூபா, ஆனா நீங்க எனக்கு கொடுத்தது ரொம்ப கம்மி, எனக்கு அஞ்சு கோடிரூபாயும் வேணும்… இல்லாட்டி நான் வழக்கு போடுவேன்”னு சொன்னான்…
அசராத உறவினர் “நீ என்ன வேண்ணாலும் போட்டுக்க…உங்க தத்தா சாகும்போது என்ன சொல்லிட்டு செத்தாருன்னு தெரியுமா? உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு சொல்லிட்டுத்தான் செத்தாரு… அதை எழுதியும் கொடுத்துருக்காருன்னு” சொல்லிட்டாரு.
உடனே பேரன் ‘நம்மள இந்தாளு ஏமாத்திட்டாரு இவரை வேற மாதிரி சந்திக்கனும்’ன்னு நினைச்சுக்கு நேரா போயி அந்த ஊர்ல இருக்க பெரிய மனுசன்ட்ட விஷயத்த சொன்னான்.
அந்த பெரிய மனுஷன் ரொம்ப நேர்மையான ஆளு….இந்த பையனுக்கு எப்படியாச்சும் பணத்தை வாங்கி கொடுத்திடனும்ன்னு நினைச்சுக்கு யோசிச்சாரு… யோசிச்சாரு…. ராத்திரி முழுக்க யோசிச்சு ஒரு ஐடியா பண்ணாரு….காலையில அந்த உறவினரை வரச்சொன்னாரு…. உறவினரும் ரொம்ப தைரியமா போனாரு…
எல்லா விவரத்தையும் கேட்ட பெரிய மனுஷன் “இந்த பையனுக்கு நீங்க வச்சுருக்க நாலு கோடியே தொண்ணூறு லச்சரூபாய கொடுத்துட்டு, இவனுக்கு நீங்க கொடுத்த பத்து லச்சரூபாய வாங்கி நீங்களே வச்சுக்கங்க”ன்னாரு….
உடனே அந்த உறவினர் “அதெப்படிங்க முடியும்…இவனோட தாத்தா உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு எழுதியே கொடுத்துட்டாரே….அப்படி இருக்கையில…எனக்கு எவ்வளவு விருப்பமோ அதைத்தான் கொடுத்துருக்கேன்”னு வாதம் பண்ணினாரு….
பெரிய மனுஷன் விடாமே….
“இவனோட தாத்தா உங்கட்ட அஞ்சு கோடிரூபா கொடுத்தாரு… அதில உங்களுக்கு விருப்பமானத கொடுங்கன்னும் சொல்லிருக்காரு…
இப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க அந்த பணத்துலேர்ந்து பத்து லச்ச ரூபாய மட்டும் கொடுத்துட்டு மீதிய நீங்க வச்சுக்க விருப்பபட்டுருக்கீங்க…….
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா… மீதி பணத்த நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்டீங்க….
இவனோட தாத்தா சொன்னபடி உங்களுக்கு விருப்பமான பணத்தை அதாவது நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்ட மீதி பணத்த இவன்கிட்ட கொடுங்க… அவனுக்கு கொடுத்த பணத்த நீங்க வச்சுக்கங்க…
நீங்க விரும்பறத கொடுத்துடுங்கன்னுதான் இவனோட தாத்தா சொல்லிருகாரு…. உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை கொடுங்கன்னு சொல்லலியே…. ங்கொய்யால யார ஏமாத்த பாக்குறே”
என்று பேசி உறவினரின் வாயை அடைத்து அந்த பணத்தை பேரனிடம் வாங்கி கொடுத்தார்.
source: http://www.rahimgazzali.com/