Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உடலுறவின்போது விலகிக் கொள்ளுதல் அப்பட்டமான மோசடியாகும்!

Posted on February 2, 2012 by admin

உடலுறவின்போது விலகிக்கொள்ளுதல் அப்பட்டமான மோசடியாகும்

[ நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும்.

மேலும் சரீர இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் மனைவிக்கு ஆவேசத்தையும், ஆர்வத்தையும் ஊட்டிவிட்டு, அவள் திருப்தி அடையக்கூடிய ஆனந்தநிலையை அடையவிடாமல் தடுத்துவிட்டால் இந்த ஏமாற்றம் அவளுடைய தேகநலனை மட்டுமல்ல ஆன்மாவுக்கே தீங்கிழைத்துவிடும்.

ஆணின் பசியைத் தீர்த்துக்கொள்ள மனைவியின் உடம்பு ஓசியில் கிடைப்பதால் அதன் அருமை பெருமை சில மண்டுகளுக்குப் புரிவதில்லை.]

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க கையாளப்படும் பல முறைகளில் ஆணின் ‘உயிரணு’ வெளியாகும் அந்த உச்ச நேரத்தில் விளகிக்கொள்வது! இந்த உபாயத்தை அதிகமாக பின்பற்றக்கூடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று ஒரு குறிப்பு உண்டு. அதனாலேயே இதை பிரெஞ்சு முறை என்று கூட அழைப்பார்கள். இது சரியான முறைதானா? பார்ப்போம்!

 அப்பட்டமான மோசடியாகும் 

ஆண் பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் ஓங்கியிருக்கும் நேரம் ஆணின் உயிரணு வெளியாகும் நேரம்தான். ஆண்மகனுக்கு உணர்வு கலங்கும் நேரமும் இதுவே! ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆண் விலகிக்கொள்வது என்பது சாத்தியமல்ல. அவ்வாறு விலகிக் கொண்டாலும் இரண்டொரு துளி பெண்ணுறுப்புக்குள் விழுந்து விடக்கூடும். இதிலுள்ள உயிரணுக்கள் மூலம் கர்ப்பம் ஏற்படக்கூடும்.

ஆணும் பெண்ணும் இன்பநிலையில் மெய்மறந்து இன்பத்தில் இருக்க வேண்டியதற்குப் பதிலாக திடீரென்று விலகிக் கொள்வதால், தான் ஏதோ அசிங்கமான விஷயத்தையே செய்வதாக ஆணுக்கு தோன்றும். பெண்ணுக்கும் சந்தோஷத்தின் உச்சியை எட்டிப்பிடிக்கும் நிலையில் ஆண்மகன் விலகிக்கொள்வது கொடுமையாகும். மறுநாள் காலை மனைவியின் முகத்தைப் பார்க்கும் கணவனுக்கு இயற்கையாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனைவி தன்னை சாதாரணமாக பார்க்கும் பார்வை – பேச்சு கூட தன்னை நக்கலடிப்பது போலத் தோன்றும்.

இதைப்பற்றி பேராசிரியர் வான்டிவெல்டி கூறும்போது, கணவன் மூலம் மனைவி இன்பத்தை எதிர்பார்க்கிறாள். உச்சநிலை இன்பத்தை அவள் அனுபவித்து அவள் மெயமறந்த ஆனந்தநிலை அடையும் நேரத்தில், கணவன் திடீரென்று விலகிக்கொள்வது வடிகட்டிய மோசடியாகும். இந்த மோசடியால் பெண்ணின் உள்மனம் எவ்வாறு துடிதுடிக்கும் என்பதை வர்ணிக்க முடியாது.

நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும்.

மேலும் சரீர இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் மனைவிக்கு ஆவேசத்தையும், ஆர்வத்தையும் ஊட்டிவிட்டு, அவள் திருப்தி அடையக்கூடிய ஆனந்தநிலையை அடையவிடாமல் தடுத்துவிட்டால் இந்த ஏமாற்றம் அவளுடைய தேகநலனை மட்டுமல்ல ஆன்மாவுக்கே தீங்கிழைத்துவிடும்.

ஆணின் பசியைத் தீர்த்துக்கொள்ள மனைவியின் உடம்பு ஓசியில் கிடைப்பதால் அதன் அருமை பெருமை சில மண்டுகளுக்குப் புரிவதில்லை என்றுகூட சொல்லலாம்.

மனைவியின் உச்சஸ்தான இன்பத்தைக் கவனிக்காமல், அவள் திருப்தியடைவதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சுயதிருப்தியை மட்டும் சுயநலத்துடன் கவனித்து மனைவியை அந்த முக்கியமான சமயத்தில் விட்டு விலகிக்கொள்வதென்றால் இதை ‘முட்டாள்தனம் மட்டுமல்ல, கொடுமையிலும் கொடுமை’ என்று அறிஞர் வான்டி வெல்டி கூறுகிறார்.

பெண்ணுக்கு சாதாரண ஏமாற்றம் மட்டுமல்ல, கலவரப்பட்ட மனம் அடங்காது. என்னமோ ஒருநாள் என்று இருவரும் ஒருவகையாகச் சமாளித்துக்கொண்டாலும், மறுநாள் காலையில் பெண்ணுக்கு தலைவலி, உடம்புவலி இருந்துகொண்டே இருக்கும். மனம் பூரண திருப்தியடையாத காரணத்தால் பலவாறு அலைபாயவே செய்யும்.

இது அவள் மற்ற ஆண்மகனிடம் வழிதவறிப்போகும்; மோசமான நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடலாம்!

மனைவியானவள் கணவனுக்கு அளிக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் குறைந்துபோகும். தாம்பத்ய வாழ்க்கைக்கு இதைவிடக் கேவலம் வேறு ஒன்றும் வேண்டியதில்லை. எனவே இந்த முறை தம்பதிகள் வெறுத்து ஒதுக்க வேண்டிய முறையாகும். -கே.வெங்கட்ராவ், ‘குடும்ப நலம்’

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 − = 49

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb