பேச்சு – உயிர் மூச்சு!
o ‘(நபியே!) விவேகமான சொற்களும் அழகிய போதனைகளும் கொண்டு உம் இறைவன் பாதையில் (மக்களை) அழைப்பீராக!’ -அல்குர்ஆன்
o எல்லா சொத்தையும்விட தன் நாவிடம் தான் அதற்குரியவன் பெரிதும் அஞ்ச வேண்டும். -நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
o எவனுடைய இதயம் ரோஜா மலராக இருக்கிறதோ, அவனுயை வாய் நறுமணங் கமழும் வார்த்தைகளைப் பேசுகிறது. -ரஷ்யப் பழமொழி
o பத்து மரக்கால் அளவு பேச்சு இந்த பூமிக்கு வந்தது. பெண்கள் ஒன்பது மரக்கால் பேச்சை எடுத்துக்கொண்டனர். ஆண்கள் ஒரு மரக்கால் பேச்சை எடுத்துக்கொண்டனர். -பாபிலோனிய தல்மூது
o நாக்கு மூன்றங்குல நீளம்தான் உள்ளது. ஆனால் அது ஆறுடி உயரம் உள்ள மனிதனையும் வீழ்த்தி விடும். -ஜப்பானியப் பழமொழி
o ஒரு சொட்டுத் தேன் பல ஈக்களை இழுப்பது போல், உன் பேச்சுத்திறமையால் பலர் மனங்களை இழுத்து, நல்வழிப்படுத்தக் கற்றுக்கொள். -ஆப்ரஹாம் லிங்கன்
o சிந்தித்துப் பார்க்காமல் பேசுவது, குறி பார்க்காமல் சுடுவதற்கு ஒப்பாகும். -ஹாஸ்லிட்
o பேசும் பொருள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பேசும் விதம். -செஸ்ர் ஃபீல்டு
o இன்சொல் இரும்புக் கதவையும் திறக்கும் -துருக்கிய பழமொழி