கெட்ட ஜின்கள் தான் பேய்களா? பேய்கள் – விஞ்ஞான விளக்கம்!
பேய்கள் போல் காட்சி தருவது கெட்ட ஜின்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா?
“இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்; இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இந்த நம்பிக்கை குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானது. பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)
இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23: 99, 100)
நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது. நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப்படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.
உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1290, 3001, 6034)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து) “இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்” என்று அந்த மனிதர் கூறுவார்.
“உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்னர் அவரை நோக்கி, “உறங்குவீராக” என்று கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், “நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக” என்று கூறுவார்கள்.
இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், “இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், “நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, “இவனை நெருக்குவாயாக” என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 991)
இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.
பேய்கள் – விஞ்ஞான விளக்கம்
இந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி செய்கின்றனர் .
இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே .
பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம்.
ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் .
பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிறோம் அல்லவா சரியான விளக்கம் வரும் வரை அலசுவோம் .
சிலரின் கருத்து இந்த மின்காந்த அலைகள் மனித மூளையினுள் ஊடறுக்கின்றன என்பதே . ஆனா படியால் தானே எந்த வித உடல் பாதிப்பும் இல்லாமல் உணர மட்டும் முடிகிறது . Hallucinations ,Dizziness அல்லது வேறு பல நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகள் போன்றன இதனால் தான் ஏற்ப்படுகிறது .
இந்த Hallucinations என்றால் நேரில் நடக்கும் விஷயம் போல உணர்வுகள் ,புலன்கள் இருக்கும் ஆனால் மனத்தால் தோற்றுவிக்கப்படுவது .
உதாரணமாக அண்மையில் நீங்கள் விரும்பிய ஒருவர் இறந்திருந்தால் அவரின் குரல் கேட்டல் ,அல்லது தெளிவாக அவரை பார்க்க கூடியதாக இருக்கும் .
இந்த Dizziness என்பது மயக்கம் ,அல்லது உறுதியற்ற தன்மை, அறை சுழல்வது போல உணர்தல் போன்றன .
ஆனால் ஏன் இரவில் மட்டும் பேயின் தாக்கம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இதிலேயே இருக்கிறது .
இந்த சூரிய காற்று பூமியின் மின்காந்த அலைகளுடன் குறுக்கிடுகிறது .பூமியின் மின்காந்த சக்தி இரவில் வெளியில் விரிகிறது .மேலே உள்ள படம் தெளிவாக விளக்கும் .
இது தான் மனிதர்களுடைய மூளையில் மிகப்பெரும் தாக்கத்தை செலுத்துவன.
மேலும் பல பரிசோதனைகளில் Infrasound எனப்படும் 20 Hz இலும் குறைந்த ஒலி அலைகள் தான் இப்படி பிகளுடனான மனித தொடர்ப்புக்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . இந்த சத்தங்கள் தான் கண்களினூடு அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இல்லாத ஒரு விடயத்தை பார்க்க வைக்கிறது என்கிறது ஒரு ஆய்வு .
உண்மையில் சாதாரண மனித காதுக்கு 20 Hz க்கு கீழே உள்ள ஒலிகள் கேட்பதில்லை . அதனால் தான் கேட்பதை விட அதன் விளைவுகள் சாதராண மக்களை பாதிக்கின்றன .
ஆனாலும் ஒரு இடத்தில் ஆய்வாளர்கள் இந்த சிறிய ஒலி உருவான இடத்தையும் கண்டுபிடித்தார்கள். அது மின் விசிறியில் இருந்து வந்தது .அந்த மின்விசிறியை திருத்தியவுடன் அந்த சிறிய ஒளியும் இல்லாமல் போனது .அதன் பின்னர் அந்த அறையில் இருந்தவர்களுக்கு பேய் அறிகுறிகள் தென்படவில்லை .(“The Ghost in the Machine” by Vic Tandy and Tony Lawrence )