முருங்கை ஓர் இயற்கை வயாகரா
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர்.
இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.
வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை. முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை.
ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.
64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை.
மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
(நன்றி: மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)