கம்பம் கே. சாதிக் அலீ
[ உறவு என்று சொல்லும்போது நாம் நம்மையே உறவு கொள்ள வேண்டும். தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் நாம் தவற்றை செய்கிறோம். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்தும் செய்கிறோம், ஏன்? நம்மை நாமே உறவு கொள்ளவில்லை. என்றே அர்த்தம். செயலோடு நாம் உறவு கொள்ள வேண்டும். ஆன்மாவோடு உறவு கொள்ள வேண்டும்.
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பெரும் குழப்பத்திற்குக் காரணம் அவர்கள் தங்களை உறவு கொள்ளவில்லை என்பதே காரணம். உடல் உறுப்புகள் எப்படி பிண்ணிப் பிணைந்து உறவுகளாகக் கணப்படுகின்றன. ஒன்று செயல் இழந்தால் நம் நிலை என்னவாகும்? உன்னை நீ தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி மற்றவர்களைப் புரிந்து கொள்வாய்?
முதலில் உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் பல விஷயங்களில் தெளிவு பெற முடியும். இதற்காக நாம் ஒன்றும் ஞானியாக வேண்டியதில்லை. நாம் ஏன், எதை செய்கிறோம் என்று புரியாமல் செய்தால் விலங்கினத்திற்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.]
உறவுகளைப் பெருக்கித் தருவதற்கு அடிப்படை அன்பு
நிரந்தரமற்ற இந்த உலகில் என்றாவது ஒருநாள் நம்மை மரணம் அழைக்கும் என்ற மனநிலையில் வாழும் நாம் சொற்பகாலங்கள் வாழ்ந்தாலும் உறவுகளுடன் பிணைந்து வாழ முற்படுகிறோம். குறிப்பிட்ட காலத்தில் என்னால் மரணிக்க முடியும் என்று எவராலும் சொல்ல முடியாது.
100 வருடங்கள் வாழக்கூடியவர்களும் இருக்கின்றன்னர். அதே போல் 100 நிமிஷம் வாழக்கூடியவர்களும் இருக்கின்றன்னர். வாழ்க்கை நிச்சயமில்லாத நாம்; உறவுகளோடு வாழ்கின்றோம். ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பை வைத்துத்தான் உறவுகள் ஏற்படுகின்றன. இரத்தத்தால் ஏற்படக் கூடிய உறவுகள் நம்மைத் தெரியாமலே உருவாகும் உறவுகள்.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து நாம் பிறக்கின்றோம். அதனால் தாய், தந்தை சார்ந்த அனைவரும் நம்க்கு உறவுகள். பல சூழ்நிலையில் பலரோடு பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நட்பு கூட ஒருவகை உறவுதான். இதற்கெல்லாம் அப்பார்பட்ட ஓர் உறவு மனைவி. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நம்மிடம் உறவு கொள்ள வருகிறாள். அன்பு என்ற பாலம் உறவுகளை உருவாக்குகின்றன. மரணம் ஒன்றுதான் உறவைப் பிரிக்கின்றனவா? இல்லை; மனித குணங்கள்தான். மரணம் என்பது இயற்கை; எவராலும் தடுக்க முடியாது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் உறவுகள் பலம் இழந்து ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உண்மையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பக்குவமடையாமை கூட ஒரு வகையில் உறவுகளைப் பிரிக்கின்றன.
உறவு என்று சொல்லும்போது நாம் நம்மையே உறவு கொள்ள வேண்டும். தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் நாம் தவற்றை செய்கிறோம். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்தும் செய்கிறோம், ஏன்? நம்மை நாமே உறவு கொள்ளவில்லை. என்றே அர்த்தம். செயலோடு நாம் உறவு கொள்ள வேண்டும். ஆன்மாவோடு உறவு கொள்ள வேண்டும். இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பெரும் குழப்பத்திற்குக் காரணம் அவர்கள் தங்களை உறவு கொள்ளவில்லை என்பதே காரணம். உடல் உறுப்புகள் எப்படி பிண்ணிப் பிணைந்து உறவுகளாகக் கணப்படுகின்றன. ஒன்று செயல் இழந்தால் நம் நிலை என்னவாகும்? உன்னை நீ தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி மற்றவர்களைப் புரிந்து கொள்வாய்?
தொப்புள்கொடி அறுக்கப்பட்டால்தான், உறவு ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று. இழப்பு என்பது இன்பமாக இருக்க வேண்டும். துன்பத்தை மற்றவ்ர்களுக்குக் கொடுத்து விடக் கூடாது. சில நேரம் இன்பம் என்ற அன்பை இழந்தால்தான் உறவு என்ற பாலம் உருவாகும்.
ஒரு காரை நாம் ஓட்டக் கற்றுக்கொண்டால், அனைத்து வகைக் கார்களையும் ஓட்டி விடலாம். ஒவ்வொருவித கார்களுக்கு வெவ்வேறு லைசன்ஸ் தேவையில்லை. அதுபோல்தான் மனிதர்களின் மனநிலையும். எல்லா மனிதர்களுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை இருக்கத்தான் செய்யும். நம்மை முழுமையாகத் தெரிந்து கொண்டால் மற்றவர்களை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது ஒருமுறை. அதில் நம்முடைய பலம், பலகீனம் எது என்று அறிந்தால் நம் வாழ்க்கை வெற்றியை நோக்கிச் செல்லும்.
ஒருவரை நாம் ஏமாற்ற நினைக்கும்போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. ஒன்றை நாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எல்லாமே நன்றாக நடக்கும். இன்றைய காலக்கட்டத்தில் உறவுகள் உண்மையாக இருப்பது இல்லை. ஒன்றை எதிர்பார்த்தே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
முதல்வராக அறியணை ஏறும் ஒருவரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருக்கும். இந்த கூட்டம் உண்மையில் தொண்டு செய்வதற்காக இல்லை. முதல்வரால் தங்களுக்கு எதையாவது பெற்றுவிடலாம் என்று எதிர்பார்ப்பதால்தான். எதிர்பார்த்தது கிடைக்காதபோது அங்கு பிரச்சனைகள் உருவாகின்றன. அதனால் நாம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இழக்கின்றோம்.
நல்ல மனம், உள்ளம், உறவுகள் கொண்டவர்கள் உயர்ந்த பதவிக்கும், உயர்ந்த நிலைக்கும் செல்கின்றனர். குறுகிய மனநிலையில் வாழ்க்கை நடத்துபவரின் வாழ்க்கை குறுகிவிடுகிறது.
மனிதர்களே! நீங்கள் வட்டம்போட்டு அதில் வாழ்க்கை நடத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் வட்டம் போடுங்கள். உங்கள் கர்வத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அன்பைச் செலுத்துங்கள். அற்புதங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. பல உறவுகளைப் பெருக்கித் தருவதற்கு அடிப்படை, அன்பு என்பதை முழுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்.
முதலில் உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் பல விஷயங்களில் தெளிவு பெற முடியும். இதற்காக நாம் ஒன்றும் ஞானியாக வேண்டியதில்லை. நாம் ஏன், எதை செய்கிறோம் என்று புரியாமல் செய்தால் விலங்கினத்திற்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு பிறப்பிற்கும் இந்த உலகத்தில் நிறைவேற்ற சில கடமைகள் உள்ளது. அதை உணரும்போதுதான் மனிதன் முழுமை பெறுகிறான். அப்போது புரியும் இந்த உலகில் உறவுகளுக்கு அர்த்தம்.