நீங்க டீன் ஏஜ் ‘ஆ’ ஒழுங்காகத் தூங்குங்கள்!
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை (டீன் ஏஜர்) ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது.
போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் (டீன் ஏஜர்) அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
பதின் வயதினரை (டீன் ஏஜர்) மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை தந்துள்னது.
சரியான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு கூறியது நினைவிருக்கலாம். இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முழுக்க முழுக்க பதின் வயதினரின் (டீன் ஏஜர்) உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19 க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.
அந்த பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கை முறை டீன் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது.
கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும் என்றார்.
தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் :
1. தேநீர், காபி மதுபானங்கள், போதை பொருட்கள், புகை பிடிபோர் மற்றும் புகையிலையை வாயில் மென்று கொண்டிருப்போர் அவர்களுக்கெல்லாம் தூக்கம் என்பது குறைபாடாகவே இருக்கும். பாதிப்பை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டாக்கும். குறிப்பாக நரம்பு தளர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துகிறது. ஆகவே மேற்கண்டவற்றை தவிர்க்கவும்.
2. நல்ல காற்றோட்டமில்லாத படுக்கையறை அதிக வெளிச்சம் உள்ள படுக்கை அறை, அதிக சத்தம் உள்ள படுக்கை அறைகளில் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்பும். உதாரணமாக டேப்ரிக்கார்டர், தொலைக்காட்சிப் பெட்டி தொலைபேசி மற்றும் அலைபேசி படுக்கையறையில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். அவைகள் தூக்கத்தை கெடுக்கும்
3. இரவில் அதிகமான உணவு உண்பதாலும் குறிப்பாக 11 மணிக்கு மேல் உணவு அருந்தி விட்டு உடனடியாக உறங்கபோவது அல்லது உணவு உண்ணாமல் பட்டினியாக தூங்குவது தூக்கத்தை கெடுக்கும். பயத்தின் காரணமாகவும், தூக்கத்தை கெடுக்கும் அல்லது நாளைந்து நபர்களுடன் படுக்கையில் படுத்தாலும் சிலருக்கு தூக்கத்தை சிதறடிக்கும். நபர்களுக்கும் , அதிக உடல உழைப்பு உள நபர்களுக்கும் அதனால் ஏற்படும் அசதி உடல்வலி காரணமாக தூக்கம் சிரமப்படும்.
நல்ல சுகாதாரமற்ற படுக்கை, கடுமையான குளிர், கடுமையான வெயில் காணமாக தூக்கமின்மை ஏற்டும். பகலில் தூங்குபவர்களுக்கும் இரவு வேளை பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும்.
தூக்கமின்மை மனநிலை காரணமாக
தேர்வுக்கு போகும் மாணவ மாணவிகளுக்கும்,தேர்வில் தோல்வியுற்றமாண மாணவிகளுகும்தூக்கம் தடைபடும்.
காதலில் ஈடுபட்டிருப்பவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள், நல்ல நண்பர்களை இழந்தவர்களுக்கும் தூக்கம் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
இரவில் மர்ம நாவல் படித்தவர்களுக்கும், திகலூட்டும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கும் பயம் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். பெண்ணின் திருமணத்தை நடத்தவிருக்கும் பெற்றோகளுக்கும், புதிதாக புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.
பெற்றோர்களால், ஆசிரியர்களால் மற்றும் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட அல்லது பேச்சால் அவமானத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு தூக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.