பயன் தரும் யூனானி
நமது இந்திய நாட்டில் 7,30,000 டாக்டகள், 9,30,000 நர்சுகள் மருத்துவத் துறையில் பெரும் சேவையாற்றுகின்றனர். இன்றைய விலைவாசி நிலவரப்படி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவழிக்காமல் ஒரு டாக்டரை உருவாக்க முடியாது. பெரிய முதலீட்டில் பட்டம் வாங்கி வெளியேறும் டாக்டர்களிடம் எளிய சிக்கன மருத்துவத்தை எதிர்பார்க்க முடியாது.
10,000 மக்களுக்கு ஒரு யூனானி மருத்துவரை உருவாக்கலாம். குறைந்த செலவில், பக்கவாட்டு உபத்திரவமின்றி மருந்து, வேர், தேன், மூலிகை பயன்படும். நமது மண்ணில் கிடைக்கும் இயற்கைத் தாவரங்களை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
டாக்டர் பி.சி.ராய், இந்திய மருத்துவக் கவுன்சில் நிறுவனர்களில் ஒருவர். மேற்கு வங்க முதலமைச்சரானார். தினமும் சில மணி நேரம் எளியவர்களுக்கு சிகிச்சையளிப்பதை பழக்கமாகவே கொண்டிருந்தார். தனது வீட்டையும் அன்பளிப்பு செய்தார். இன்று 1,78,000 டாக்டர்கள், 1,700 கிளைகளாக அவரது இயக்கம் வளர்ந்துள்ளது.
யூனானி மருத்துவத்திற்கும் தியாகிகள் தேவைப்படுகின்றனர். 12,000 முஹல்லாக்களிலும் யூனானி கிளினிக்குகள் திறக்கப்பட வேண்டும். அரசை நம்பிப் பயனில்லை. 1917 பிரிட்டிஷ் அரசு யூனானி எதிப்பு சட்டமியற்றியது. ஹக்கீம் அஜ்மல் கான் காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவர். அரசாங்கத்தை எதிர்த்து மாநாடு போட்டார். இன்றுவரை நிலையில் பெரிய மாற்றமில்லை.
யூனானி மருத்துவத்துக்கு பெரிய அளவு அரசு ஆதரவு இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை நிலவுகிறது. என்றாலும் யூனானி ஆர்வலர்களின் தொடர் முயற்சி, 40 கல்லூரிகள், 150 மருத்துவமனைகள், 1,500 கிளினிக்குகள், 50,000 பட்டதாரிகள் யூனானி ஆலமரமாய் வளர்கிறது.
1206 முதல் 1527 வரை இந்தியாவை ஆண்ட சுல்தான்கள் யூனானிக்கு மதிப்பளித்தனர், வளர்த்தனர். 1971 ல் மத்திய சுகாதாரத்துறை ஆர்வம் காட்டியது. 2001 ல் துவக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ நூலகம் 98,700 வகை நிவாரணங்களை தக்கவைத்துள்ளது. 22 தேசிய ஆய்வகங்கள். ஹைதராபாத், லக்னோ நகரங்களில் மத்திய ஆய்வகங்கள் உள்ளன.
1906 ல் ஹக்கீம் ஹாஃபிஸ் அப்துல் மஜீத் துவக்கிய ஹம்தாத் நிறுவனம் 450 யூனானி மருந்துகளைத் தயாரிக்கிறது. 150 கோடி ரூபாய் வணிக லாபத்துடன் 20 நாடுகளின் யூனானி தேவைகளை அது பூர்த்தி செய்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் யூனானி மருத்துவத்தை தமிழக முஸ்லிம்கள் நம்ப மறுக்கின்றனர். பள்ளிவாசல் வளாக வாடகை கடைகளில் ஒரு கடையை யூனானி மருத்துவச் சிகிச்சைக்கு ஒதுக்கித்தர வேண்டும்.
ஆங்கில மருத்துவம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாப வெறியில் பேயாட்டம் போடுகிறது. போலி மருந்துகள், தரமற்ற மருந்துகள் விற்கப்படுகின்றன. தடுப்பதற்கு வழியில்லை. பொதுமக்களுக்கு மருந்துகளை விற்கும் இடைத்தரகர்களாக பல டாக்டர்கள் செயல்படுகின்றனர். ஃபார்மஸி கடைகளில் கொழுத்த லாபம். சுற்றுப்புறத்தை குறை கூறுவதால் பயனில்லை.
யூனானி மாநாடு மாவட்ட அளவில் ஏர்பாடு செய்து சாதை, தத்துவம், எளிய சிகிச்சை, வேர் மூலிகை பயன் குறித்து விளக்கக்லாம்.மக்களுக்கும் நம்பிக்கை வரும்.
முஸ்லிம் புரவலர்கள் (வசதிபடைத்த பணக்காரகள்), பள்ளிவாசல் நிர்வாகிகள் யூனானி பரவலுக்கு துணை நிற்க வேண்டும். இன்றைய ஆங்கில அலோபதி மருத்துவத்தின் கொடூர பிடியிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும். அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
-ஆரெம், முஸ்லிம் முரசு, ஜனவரி 2011
[ யூனானி மருத்துவத்தைப்பற்றி விக்கிபீடியாவில்… யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா என்பவரால் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யூனானி மருத்துவர்கள் இந்தியாவில் சட்டப்படி மருத்துவப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.]
சென்னையிலுள்ள யூனானி மருத்துவக் கல்லூரி முகவரி:
Government Unani Medical College,
Address: Government Unani Medical College,
Arumbakkam,
Chennai-600 106
Landmark: Near Anna Arch, Chennai, Tamil Nadu