ஆசிரியர் வேறு! புத்தகம் வேறு!
“வலா தல்பி ஸ§ல் ஹக்க பில்பாதிலிவதக்துமுல¢ ஹக்க வஅன்தும் தஃலமூன்” (நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்)
நூல் வேறு. எழுதிய நூலாசிரியர் வேறு. நூலுக்கு உரிமை கொண்டாடும் ஆசிரியர் வேறு. மூன்றுவகை ஆட்கள் சமூகத்தில் உள்ளனர். நூலிலுள்ள எழுத்து, கருத்துக்குச் சொந்தக் காரர் யாரோ ஒருவர். அதனை ஸ்கிரிப்டாகத் தருபவர் வேறொருவர். விலைக்குப் பெற்றதை தன் பெயரில் போட்டு நூலாசிரியர், பன்னூலாசிரியர் பட்டம் பெறுபவர் மற்றொருவர்.
சமுகத்திற்காகத் தம்மை அர்ப்பணித்து, சிந்தித்து எழுதும் எழுத்தாளர்கள் பணியின், தளத்தின் ஊடாக போலி வாதிகளும் எழுத்தாளர், நூலாசிரியர், பன்னூலாசிரியர் போர்வையில் பகடக்காரர்களாக வலம் வருகின்றனர். இலக்கியவாதிகளுடன் மேடைகளில் அமர்கின்றனர். எழுத்தாளர்களுக்கு நல்லது செய்ய எண்ணும் நல்லாத்மாக்களுக்கும், ஆட்சியாளர்க்கும் பிரித்துணரா முடியா நிலை ஏற்பட்டு முழுக்கவும் விலக்கி வைக்கும் நிலை ஏற்படுகிறது.
நான் எழுதியது மார்தட்டி புத்தகம் தருகின¢றனர். அந்நூலில் இடம் பெற்ற எழுத்து கருத்துக்கள் மீது விவாதம் நடத்தினால், அதைப்பற்றி பேச மறுத்து பேச்சை திசை மாற்றும் போக்கெடுக்கின்றனர். உண்மையான எழுத்தாளர். போலி எழுத்தாளர் பகுத்தறிய, நூலின் அட்டையில் பதியப் பெற்றுள்ள பெயருக்குரிய நபர் முன் அமர்ந்து நூல் பற்றி விவாதிக்கணும். பொய்முகம் கழன்று விழும¢. சாயம் வெளுக்கும் ஒவ்வொருவரும் இதனைக் கையாளணும்.
கடந்த காலத்தில் சமூகத்தில் தனித்த அடையாளம் பெற்ற முஸ்லிம் பிரபலர் தமிழிலிருந்து ஆங்கிலப் படுத்தியதாக தடிமனான நூல் ஒன்றை கொண்டு வந்திருந்தார். அந்நூலின் ஒரு இடத்தில் இமாம் என்பதற்கு பூசாரி என்று எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. மொழ¤பெயர்த்தவர் முஸ்லிம் எனில் பூசாரி சொல் எப்படி பதிவு செய்வார்.? இப்படித்தான் பலரும் எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக வலம் வருகின்றனர்.
எவரோ எழுதியதை தமது பெயரில் பதிவு செய்து கொள்கின்றனர். கூலி எழுத்துக்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” முது மொழிக் கேற்றார் போன்று அப்பட்டமாகப் பல்லிளித்து காட்டிக் கொடுக்கின்றன. ஒரு எழுத்தாளன் என்ன பேசுகிறானோ அதைத் தான் எழுத்து வடிவில் தருவான். எழுத்து வேறு விதமாகவும், பேச்சு வேறு விதமாகவும் இருக்கவியலாது. இருந்தால், சுய எழுத்தாளனல்ல. நூலாசிரியர், பன்னூலாசிரியர் பட்டங்கள். அட்டை கிழித்து மாற்றப்பட்ட ஆய்வேடுகள் மறுபரிசீலனைக்குரியவை. சமூகம் ஆய்வுக்கு உட்படுத்தணும்.
-கரீம் கனி, முஸ்லிம் முரசு டிசம்பர் 2011
source: http://jahangeer.in/