அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்
[ ஒவ்வொரு வசனமும் நமக்கானது. வலில் வாலிதய்னி இஹ்சானா – பெற்றோரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். வசனம் யாருக்கோ இறங்கியதல்ல. இது எனக்கான கட்டளை. எனக்கான செய்தி இதில் உண்டு. ஒவ்வொரு தானியத்தின் மீதும் எழுதப்பட்டுள்ளது. யாருடைய வயிற்றில் சென்று சேரும். அதேபோன்று, ஒவ்வொறு வசனமும், சொல்லும் செவிமடுப்போர் பெயர், உச்சரிப்பவர் பெயர் பொறிக்கப்பட்டது. நான் உச்சரித்த வசனம் நீங்கள் பிறப்பதற்கு முன்னமேயே விதி எழுதப்பட்டது. இந்த நேரம், இவர் கூறுவார் இவர் உள்வாங்குவார்.
இமாம் படிக்கலாம் அல்லது சொற்பொழிவாளர் வாயிலாக நீங்கள் உணரலாம். ஆனால் அனைத்தும் ஏற்கெனவே முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது. விதிக்கப்பட்டது. ”குல்லு நஃப்ஸுன் ஜாயிக்கத்துல் மவ்த்” ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரணும். இந்த வசனத்தை படிக்கும்போது அல்லது கேட்கும் நிலையில் நீங்கள் யோசிக்கணும். மரணம் குறித்த சிந்தனை வரவேண்டும்.
நீங்கள் சரியாக திட்டமிடவில்லையெனில், தோல்வியை திட்டமிடுகிறீர். தோல்விக்கு தயாராகுங்கள். வேறு வழியில்லை. குர்ஆன் புரிந்து கொள்ள உம்மிடம் திட்டம் ஏதுவுமில்லை. அப்படியென்றால் குர்ஆன் புரியாமலே போகும். இதுதான் உமது திட்டம். பல்லிகூ அன்னீ வலவ் அயா ஒரு வசனம் தெரிந்தாலும் எத்திவையுங்கள்.]
குர்ஆன் தொடர்பு நான்கு வகை!
சூரா ஸாத், அத்தியாயம் 38, வசனம் 29. அன்ஜல்னாஹு இலய்க்க முபாரக்குன் லி யதப்பரூ ஆயாத்திஹீ வலியஜ்ஜக்கர உலுல் அல்பாப்.
கிதாபு, குதுப வேதம் சொல் 400 முறை குர்ஆனில் வந்துள்ளது.
அன்ஜல்னா – நாம் இறக்கினோம். ஹ§ &அதனை. இலய்க்க & உங்கள் மீது. முபாரக் – பாக்கியம், பரக்கத் நிறைந்த. சொல் விளக்கம் நின்றுவிடவில்லை. தொடர்கிறது. எதனால், எதற்காக இறக்கப்பட்டது?
ததப்புர் – ஆய்வு செய்ய.
தஜக்குர் – நல்லுணர்வு பெற.
நாம் ‘‘பரக்கத்’’ சொல்லை மிக இழிவாக பயன்படுத்துகிறோம். நூறு ரூபாய் சம்பாதித்தால் 90 ரூபாய் செலவு. 10 ருபாய் மிச்சப்பட்டால் பரக்கத். விபத்து எதுவும் நேரக்கூடாது.
பூமி, வானம் முழுவதிலுமுள்ள அனைத்து பரக்கத்துகளையும், இந்த குர்ஆன், கிதாபு மூலம் வழங்க அல்லாஹ் விரும்புகிறான்.
அதற்கு வழி கற்றுக் கொடுக்கிறான். எதற்குவெனில். யதப்பர் & அவர்கள் சிந்திப்பதற்கு. கவனம் செலுத்த. ஆயாத் – இரண்டு பொருள் வசனம், சாட்சி. ஆயத் – வசனம், சான்று, ஆயாத் – வசனங்கள், சான்றுகள், ஆயாத்திஹீ – அதன் வசனங்கள். -மேலும் மற்றும் யதஜக்கர – நசீஹத் பெற. உலுல் அல்பாப் – சிந்திப்போருக்கு. குர்ஆன் மீதான தொடர்பு, 4 வகை. நேரடி, தனிப்பட்ட, திட்டமிட்ட, காலத்துக்கேற்ற.
நூல் எழுதியவர் பெரும்பாலும் எதிரில் இருப்பதில்லை. தொலைதூரத்தில், இந்த அறைக்கு பின் மறைந்துமிருப்பார். அல்லாஹ்வின் கிதாபு – உரிமையாளர் கிதாபுக்குரியவர் எதிரில் இருக்கிறார். குர்ஆன் கிதாபின் மகத்துவம் இது. உயிருள்ள சொற்கள். ஏனைய கிதாபுகள் அழியும்.
குர்ஆன் படிக்கும் போது அல்லாஹ் நேரில் பேசுகிறான். ஏனைய நூல்களை பிரித்து படிக்கிறீர். நூலாசிரியருக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் எமது நூலை வாசிக்கிறார்.
எனது அடியான் எத்தகைய உணர்வு பெறுகிறான். குர்ஆனை திறக்கும்போதே அல்லாஹ் புரிய வைக்கிறான். தேடலை ஒப்புகிறான்.
ஒவ்வொரு வசனமும் நமக்கானது. வலில் வாலிதய்னி இஹ்சானா – பெற்றோரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். வசனம் யாருக்கோ இறங்கியதல்ல. இது எனக்கான கட்டளை. எனக்கான செய்தி இதில் உண்டு. ஒவ்வொரு தானியத்தின் மீதும் எழுதப்பட்டுள்ளது. யாருடைய வயிற்றில் சென்று சேரும். அதேபோன்று, ஒவ்வொறு வசனமும், சொல்லும் செவிமடுப்போர் பெயர், உச்சரிப்பவர் பெயர் பொறிக்கப்பட்டது. நான் உச்சரித்த வசனம் நீங்கள் பிறப்பதற்கு முன்னமேயே விதி எழுதப்பட்டது. இந்த நேரம், இவர் கூறுவார் இவர் உள்வாங்குவார்.
இமாம் படிக்கலாம் அல்லது சொற்பொழிவாளர் வாயிலாக நீங்கள் உணரலாம். ஆனால் அனைத்தும் ஏற்கெனவே முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது. விதிக்கப்பட்டது. ”குல்லு நஃப்ஸுன் ஜாயிக்கத்துல் மவ்த்” ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரணும். இந்த வசனத்தை படிக்கும்போது அல்லது கேட்கும் நிலையில் நீங்கள் யோசிக்கணும். மரணம் குறித்த சிந்தனை வரவேண்டும்.
பெற்றோர் குறித்த வசனம் வந்தது. உங்களுக்கு செக்கிங் பரீட்சை ஆரம்பம். நீங்கள் எந்த முறையில் பெற்றோரை கண்ணியப்படுத்துகிறீர். மரணம் குறித்த வசனம், நமக்கு நிலையாமையை நினைவூட்டுகிறது. கவனம் தேவை. எதன் மீது. தவஜ்ஜு, ஃபஹம், தஸவ்வுர், இஹ்சாஸ். நான்குப் பண்புகள் கடைப்பிடித்தால் வசன நோக்கம் அதாவது ஆய்வு, நல்லுணர்வு கிடைக்கும். கண், காது, உடல், இதயம், மூளை செலுத்தி அர்த்தம் புரிய வேண்டும். வசனம் படித்தால் அதன் ஒவ்வொரு சொல், எழுத்து மீதும் கவனம் பாயவேண்டும். புரியவில்லையெனில் தவ்பா செய். இவ்வளவு வயதாகி விட்டது. இன்னும் அர்த்தம் புரியவில்லையே கைசேதப்படுவீர். ஏங்க வேண்டும். முயற்சி மேற்கொள்வீர்.
குர்ஆன் கூறும் காட்சிகளை கற்பனை செய். சுவர்க்க காட்சிகளில் விருப்பம். நரக காட்சிகள் வந்தால் அஞ்சுவீர். நிஃமத் அருட்கொடை ஆயத் செவியேற்றல் ஆசைப்படு.
குர்ஆன் வசனம் ஒவ்வொன்றும் அமல் செய்ய. ஈமான் அமல், தொழுகை அமல், இதய அமல். ஒவ்வொன்றும் நடைமுறையாகணும்.
துஆ எப்போது? பரிட்சைக்கு படிக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மண்டபம் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே நமது மகன் மாணவன் துஆ கேட்டால் பயனில்லை. ஒப்புக் கொள்ளமாட்டோம். சென்ற நாட்கள், கடந்த ஆண்டுகளின் அனுபவத்தை அசைபோடுங்கள். நாளை, அடுத்த வாரம், அடுத்த ஆண்டு திட்டமிடுவோம்.
நீங்கள் சரியாக திட்டமிடவில்லையெனில், தோல்வியை திட்டமிடுகிறீர். தோல்விக்கு தயாராகுங்கள். வேறு வழியில்லை. குர்ஆன் புரிந்து கொள்ள உம்மிடம் திட்டம் ஏதுவுமில்லை. அப்படியென்றால் குர்ஆன் புரியாமலே போகும். இதுதான் உமது திட்டம். பல்லிகூ அன்னீ வலவ் அயா ஒரு வசனம் தெரிந்தாலும் எத்திவையுங்கள்.
-டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம், தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
அக்டோபர் முஸ்லிம் முரசு 2011
source: http://jahangeer.in/