இழிவுக்குள்ளான சமுதாயம்
மௌலானா செய்யத் அலீம் அஷ்ரஃப் ஜெய்ஸி
நீங்கள் இங்கே அமர்ந்திருப்பது ஈமான் அடையாளம். தேடல் மிகுந்தவர் நீங்கள். நல்லவற்றை ஆர்வப்படுகிறீர். மூஃமின் இறைவிசுவாசி, எப்போதும் அறிவை தேடிக் கொண்டிருப்பார்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்; ‘‘அறிவை தேடும்வரை ஒருவர் ஆலிம், அறிவாளி. போதும் நினைப்பு வந்து, அறிவு தேடலை நிறுத்திக் கொண்டால் அவர் ஜாஹில், அறிவிலி.’’
இதயத்தை தூய்மைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகிறோம். ஆன்மாவை வலிமைப்படுத்துவது, நப்ஸ் சுத்தம் இஸ்லாத்தின் அடிப்படை குறிக்கோள். அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளும் நப்ஸ் சுத்தம் குறித்து மையமிடுகிறது. ஆடை சுத்தம் ஆனால் உடல் சுத்தமாயில்லை. ஆடை வெகுவிரைவில் அசுத்தமாகி விடும். ஆடையின் பரிசுத்தம் கெட்டுப்போகும்.
மனம் அசுத்தம். உடல் சுத்தம் இதனால் ஒரு பயனும் ஏற்படாது. மன சுத்திகரிப்பு உடல் சுத்தத்தை விட அதிக முக்கியமானது.
மனம், ரூஹு, நஃப்ஸ் – மூன்றுக்கும் ஒரே சப்ஜக்ட் பொருந்தும். ஒரு ஹதீஸ் அனைத்துக்கும் நன்றாகவே ஒத்துவரும். கைப்பியத் வெவ்வேறு. தன்மை மாறுபடும். கல்பு குறித்து நபிகளார் கூறுகிறார். ‘‘உங்களது உடலில் ஒரு மாமிசத் துண்டு உள்ளது. அது சரியாயிருந்தால் உடல் நன்றாயிருக்கும். அது கெட்டுப் போய்விடுமேயானால் உடல் கெடும். கல்பு’’
இதனால் மனத்தூய்மை, இஸ்லாத்தில் மிக முக்கிய பங்காற்ற வல்லது. நமது இயல்பு வெளித்தோற்றத்துக்கு மதிப்பளிக்கிறோம். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிய நஞ்சு, கேவல, தவறான கண்ணோட்டம் இன்று மதப்பிரச்சாரத்தையும் சீரழிக்கிறது. நுமாயிஷ், திகாவா நாடக பாணி வெளித்தோற்றம் முக்கியமாகி, அந்தரங்கம் உள்மனம் நிஜமற்றுப் போனது. பகட்டு ஆட்சி செய்கிறது.
மனம் சுத்தமடையாமல் வெளி அமல்கள் புறத்தோற்றம் பயனளிக்கப் போவதில்லை. தஜ்சியா நப்ஸ், சுத்தம் குறித்து குர்ஆனில் ஏராளமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. சூரா ஆல இமரான் அத்தியாயம் 3, வசனம் 164, அவர்களிலிருந்தே ஒரு ரசூலை அனுப்பி வைத்தான். வசனங்களை ஓதிக் காட்டுகிறார். அவர்களை, நப்ஸை சுத்தப்படுத்துகிறார். கிதாபு, ஹிக்மத் வழங்குகிறார்.
நபிகளாரின் பணிகள் மூன்று. கிதாபை கொண்டு வருவது. கிதாபு, ஹிக்மத் கற்றுக் கொடுப்பது. நப்ஸ் மனதை, சுத்தப்படுத்துவது. ஒரு சிறிய குழு, ஜமாத், சூஃபியாக்கள் மட்டுமே பேச வேண்டிய, விவாதிப்பதற்கான தலைப்பு அல்ல. இதனை முழுமைப்படுத்தவே தொடர்ச்சியாக இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். உடல், அறிவு, ரூஹ§ மூன்றும் சேர்ந்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ஒவ்வொன்றின் தன்மை வேறு, வேறு. மூன்று நிலைகளிலும் சிறப்படைய, வெற்றிபெற ஒவ்வொன்றையும் செயலாக்க வேண்டும். மூன்றும் சீராக இருந்தால் முழுமை வெற்றி கிடைக்கும். இறை திருப்தி நசீபாகும். வாய்க்கும்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மனநோயாளி அடைக்கப்பட்டுள்ளார். உடல் ஆரோக்கியமாயுள்ளது. என்றாலும், சமுதாயம் மன நோயாளிகளை அப்புறப்படுத்துகிறது, வெளியேற்றுகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் உறுப்பினராக, மூன்று பண்புகளும் நன்கு பணி செய்ய வேண்டும். சுவர்க்கம் செல்ல தகுதியானவர் நப்ஸை சுத்தமாக்க வேண்டும். இல்லையேல், அவரை அப்புறப்படுத்த நேரிடும். மூன்றாவது விஷயம் குறித்து நாம் ஆர்வப்படுவதில்லை. ஜிப்ரயீல், நபிகளாருடன் முட்டியுடன் கால்முட்டி தொடும் வண்ணம் அமர்ந்தார். ஈமான், இஸ்லாம், இஹ்சான் விளக்கம் கேட்டார். பெற்றார். சென்றார்.
தீனை கற்றுக் கொடுக்க, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்தார்கள். இதில் 3 கூறுகள். முதலிரண்டு கூறுகள் தெரிகிறது. ஆனால் ‘‘மூன்றாவது விஷயம்’’ குறித்து நூல் எழுதுவதில்லை. தெரிந்துக் கொள்ள ஆர்வமில்லை. கவனமில்லை. ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் படிப்பு மூன்று பாடத்திட்டம் வேறு. அப்ளிகேஷன் அமுலாக்கம் வேறு. மூன்றுக்கும் தனித்தனி ஹிதாயத். ஈமான் மூளைக்கு, இஸ்லாம் உடலுக்கு, இஹ்சான் ஆன்மாவுக்கு. மூன்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஒன்றை ஏற்றுக் கொண்டு இன்னொன்றை கோட்டைவிட்டால் தீன் முழுமைப்பெறாது.
மூன்று தேவைகளை அறிந்திருக்கவேண்டும். நபிகளாரின் கடமைகளில் இஹ்சான் அடைவது மிகமுக்கியம். குர்ஆன் வசனம் கடமை என்றாலும் சில கடமைகளை வலியுறுத்த இறைவன் குர்ஆனில் சத்தியமிடுகிறான். சில விஷயங்களுக்கு இரண்டு, மூன்று சத்தியம். ஒரே ஒரு செய்தி வலியுறுத்த 13 முறை சத்தியம் செய்கிறான். அதுதான் தஜ்கியா நப்ஸ். மனச்சுத்தம். நப்ஸை சுத்தப்படுத்தியவரே வெற்றியாளர். அத்தியாயம் 91, ஷம்ஸ, வசனம் 1 & 10. நஃப்ஸ், தீமைகளை கட்டளையிடுகிறது. நமக்கு மிகப்பெரிய எதிரி. சுத்தப்படுத்தினால் அதே நப்ஸ் நம்மை நன்மையின்பால் கொண்டு சேர்க்கும். நப்ஸ் பெரிய சூழ்ச்சிக்கானது. இபாதத் செய்ய வைத்து நம்மை நரகில் கொண்டு செலுத்தும்.
இபாதத் செய்த பின்னர், ஆணவம் ஃபக்ர் வரும். பிறகென்ன இபாதத் பாவமாகிவிடும். நபிகளார் கூறுகிறார் & ஒரு முஸ்லிம் தொழுக ஆயத்தமாகிறார். குழந்தை வீட்டில் அழுகிறது. கடையில் கஸ்டமர் கூட்டம். என்றாலும் முஸ்லிம் தொழுக விரைகிறார். கடைசி ஆயுதம், நஃப்ஸ் தொடுக்கிறது. உம்மைப் போன்று தியாகி யாருமில்லை. இடர்ப்பாடுகளை கடந்து வெற்றி பெறுகிறீர். இப்போது திமிர், பெருமை வந்தது. நபிகளார் கூறுகிறார் & தொழுகை வீணாய் போகவில்லை. அதுமட்டுமல்ல, முந்தைய தரஜாவை விட கீழிறங்கி விட்டார். இந்த தொழுகை அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்தவில்லை. தூரமாக்கிவிட்டது.
நஃப்ஸ், பாவங்களின் வேர் தாக்கி வெற்றி பெற, சுத்தப்படுத்த வேண்டும். இதற்குரியமுறை முஜாஹிதா. ஜிஹாது முதலில் நஃப்ஸ், ஷைத்தான் மீது. பிறகு மற்றவை மீது. எதிரியை அழிப்பது ஜிஹாது. நமக்கு மூன்று எதிரிகள். முதல் எதிரி நஃப்ஸ். வீட்டில் உள்ள எதிரியை பாராமல் ஜிஹாது செய்கிறோம். நப்ஸ் மீது மோதுவதை விட்டுவிட்டோம். நப்ஸ் கட்டுப்பாட்டில் அறிவுரையில் ஜிஹாது செய்கிறோம். பல பிரச்சினைகளை வரவழைத்துக் கொண்டோம்.
ஜிஹாது செய்வதால் சவாபு நன்மை பெறுவதற்கு பதிலாக சமூகத்துக்கு இன்று பல தீங்குகளை தந்துவிட்டோம். நான் சிறுவனாயிருந்த நாட்களில் லக்னோ, அலஹாபாத் ரயில் பயணங்களில் பெண் பயணிகள் ஏறினால் முழு பெட்டியை அலசிபார்த்து தாடிக்காரர் அருகில் அமர்ந்து விடுவர். முழு பாதுகாப்பு உணர்வு, நிம்மதி அடைவர். 35 ஆண்டுகளில் முந்தைய நிலைமை. ஜிஹாது செய்த பின் நிலை இன்று ஆண்கள் முஸ்லிம் அருகில் உட்கார பயப்படுகின்றனர். ளிக்ஷீபீமீக்ஷீ முறை மாற்றினோம்.
முதலில் நஃப்ஸ் உடன் ஜிஹாது. இதனை மாற்றி மூன்றாவது இடத்துக்கு முன்னுரிமை தந்தோம். நப்ஸ் திருந்தவேயில்லை. மகா மோசமாகி விட்டது. சீரழிந்தது. பெரிய போரில் ஈடுபட்டு திரும்பும் வழியில் நபிகளார் எச்சரித்தார். கீழ்மனதுடன் நிகழ்த்துவதே பெரிய யுத்தம். இன்று முஜாஹிதுகள் தனிப்பட்ட ஆதாய, குழு சண்டையில் சிக்கி சீரழிகின்றனர். குறிப்பிட்ட நாட்டுக்கு ஆதரவாக, பின்னர் ஆதரவு குறைந்ததும் அதே நாட்டுக்கு விரோதமாக யுத்தம் செய்கின்றனர். தனிப்பட்ட யுத்த விருப்பு வெறுப்பில், முழு இஸ்லாமிய சமுதாயத்தையும் தேவையின்றி ஈடுபத்துகின்றனர். முஸ்லிம் உம்மத் நட்டப்படுகிறது. உலமாக்கள் கூறுகின்றனர். நப்ஸ் ஷைத்தான், மக்லூஹ் படைப்பு, துனியா இறைபாதையை தடுக்கும் நான்கு துர்பண்புகள். பெரும்பாலான நற்காரியங்கள், தீய காரியங்களை மக்களின் மனநிலைக்கேற்ப முன்னுரிமை தருகிறோம். அறஉணர்வு அறவே இல்லை. இறைவன் வெறுப்படைவான்.
துன்யாவை விட்டுவிடக்கூடாது. ஆனால் துன்யாவில் உலக மோகத்தில் முழுமையாக மூழ்கி விடக்கூடாது. நப்ஸ் எதிரி. ஆனால் வெளிச்சுத்தம், உள்சுத்தம் செயல்பட்டால் நன்மை கிடைக்கும். வெளிச்சுத்தம் எளிது. உள் சுத்தம் கடினம். வாய், கண், காது, கை, கால், பிறப்புறுப்பு, வயிறு இவை ஏழும் நஃப்ஸ் சேவையாளர்கள். ஏழு உறுப்பினர்களைக் கொண்டு நன்மையும் நிகழும். வாய்ப்புறம், பொய், திட்டுவது நப்ஸ் உத்தரவின் பேரில் நடக்கிறது. சூபியாக்கள், முதலில் வாய்கட்டுப்பாடு விதிக்கின்றனர். குறைந்த அளவு பேசுங்கள். சிந்தித்து பேசு. யாரை சந்தோஷப்படுத்த பேசுகிறீர்.
நஃப்ஸ் மகிழ்ச்சி. அல்லது இறைவனின் திருப்தி. முகஸ்துதி, தற்பெருமை உள்பட அந்தரங்க பாவங்கள். ஜாஹிர், பாத்தின் இரு நிலை பாவங்களிலிருந்து விடுபடுவோம். அதுதான் தஜ்கியா நஃப்ஸ். ஹைதராபாத், மஸப் டேங்க், காஜா மேன்ஷன் ஃபங்க்ஷன் ஹால் வளாகத்தில் குர்ஆன் ஃபவுண்டேஷன் உரை தொகுப்பு.
-தமிழில் : ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
source: http://jahangeer.in/