”முதல் பெண் நரகவாதி. இரண்டாமவர் சுவர்க்கவாதி”
இல்லாஹி மாஷிரா, இன்றைய அவசியம், கூடி வாழ்தல். மனிதனின் ஒரு தொடர்பு இறைவனுடன். இன்னொரு தொடர்பு மனிதர்களுடன். இரண்டும் முக்கியமானது.
மனிதனுக்கு இறைவன் மீது பிரியம் இருந்தால் இதர மனிதர்களுடன் அன்பு பெருகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்து – ”மனிதர்களில் சிறந்தவர் நற்குண மிகுந்தவர். மற்ற மனிதர்களிடம் இனிய முறையில் நடந்து கொள்பவர்.”
ஒரு பெண் இபாதத் சடங்குகளில் சிறந்தவர். ஆனால் மற்றவர்கள் அவரிடம் நெருங்க அஞ்சுகின்றனர். இன்னொரு பெண்மணி ஃபர்ள் கடமையான அமல்களை மட்டும் செய்கிறார். ஆனால் இனிய பண்பு கொண்டவர். மனிதர்கள் அவரை நேசிக்கின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் – ”முதல் பெண் நரகவாதி. இரண்டாமவர் சுவர்க்கவாதி.”
குண ஓழுக்கத்தின் சிறப்பு இபாதத் சிறப்பை விட மேன்மையானது.
நல்ல சமூகத்தின் அடையாளம், இதர மனிதர்களிடம் நல்லொழுக்க குணநலனுடன் பேணுவதாகும்.
இன்றைய சமூகத்தில் தீன்தாரிகள் மதப் பற்றாளர்கள் அதிகம். முன்னெப்போதையும் விட அதிக பள்ளிவாசல்கள், அதிக தொழுகையாளிகள். மத செலவு அதிகரித்துள்ளது. முகத்தில் தாடி வைத்தோர், முஸ்லிம் தோற்றம் அதிகம். ஆனால் சோதனைகள், அதிகம். இன்று முஸ்லிம்கள் கேவலம், சிறுமைப்படுவது அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் முஸ்லிம் நாட்டில் பாதுகாப்பாயில்லை. உடல், உயிர் பறிக்கப்படுகிறது. இதுவரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்ததேயில்லை.
இதற்கு என்ன காரணம் இபாதத் அதிகம். அவமானம் அதிகம்.
பாவங்கள் இபாதத்தை வலிமையிழக்கச் செய்யும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்து.
மஞ்சள் காமாலை நோய் பிடித்த மனிதர். மருந்து உட்கொள்கிறார். பிரியாணி, பாயா உண்கிறார். மருந்து வேலை செய்யாது. பயனளிக்காது.
பாவம், அநியாயமான செயல்களால் இபாதத் பயனற்றுப் போய்விடுகிறது.
ஒருகாலம் வரும். மக்கள் அழுது துஆ பிரார்த்திப்பர். ஆனால் ஈடேறாது. துஆ நிறைவேறுவதில்லை. எப்படி நிறைவேறும்.
அல்லாஹ் கூறுவான் உன் சதை ஹராம். ரத்தம் ஹராம். தோல் ஹராம் பணத்தில் வளர்ந்தது. உருவானது. நான் எப்படி உன் துஆவை ஏற்பேன்.
ஒருவரது வருமானத்தில் ஹராம் நுழைந்தால் துஆ ஏற்கப்பட மாட்டாது.
ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் எந்த கட்டளையை நாம் ஏற்கவில்லை. மறுக்கிறோம். தொடர்ந்து சோதனைகள் வந்த வண்ணமுள்ளது.
நிக்காஹ், திருமணம். தலாக், விவாகரத்து
பாகப்பிரிவினை சொத்துப் பங்கீடு மூன்று விஷயங்களில் இறைகட்டளை மீறப்படுகிறது. நிக்காஹ் முழு இந்திய முஸ்லிம்களின் பிரச்சினை. இன்று உலகம் முழுவதிலும் திருமணம் முறைதவறுகிறது.
இஸ்லாமிய பார்வையில் திருமணம் மிக எளிதானது. இரண்டு சாட்சிகள் முன்னிலையில் நிக்காஹ் ஒப்புக் கொள்ளப்படவேண்டும்.
தொழுகையில் ஆடை நிர்ப்பந்தம். சுத்தமான, ஒரு வகையில் தேவை நிறைவேறும் ஆடை. சில நிபந்தனைகள் உண்டு. ஹஜ் செய்ய பயணம் புறப்பட வேண்டும். ஜக்காத் வழங்க பணம் தேவை. ஆனால் நிக்காஹ் செய்ய ஐந்து பைசா தேவையில்லை.
நிக்காஹ் ஒரு இபாதத்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த பெரிய பள்ளிவாசல். துணிகடை வைத்துக் கொள்ள, அனுமதிதர மாட்டோம். ஜும்ஆ நேரத்தில் துணி சுருட்டி ஒதுக்கி வைக்க ஒப்பமாட்டோம்.
நபிகளார் கூறினார்கள் & நிக்காஹ் அறிவித்து பள்ளிவாசலில் நடத்துவீர்.
சில ரிவாயத்துகளில் வருகிறது – ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணம் பள்ளிவாசலில் நடந்தேறியது.
நிக்காஹ் இபாதத். ஆகையால் பள்ளிவாசலில் நடத்தவேண்டும்.
ஜும்ஆவில் குத்பா, ஹஜ் பெருநாள் குத்பா, மழை பெருக்கத்தில் குத்பா.
குத்பா வணக்க வழிபாடு சம்பந்தப்பட்டது. அங்காடியில், பல சரக்கு வாழ்வியல் பொருட்களை வாங்கும்போது யாரும் குத்பா ஓதுவதில்லை.
நிக்காஹ் உடன் குத்பா – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏற்பாடு. திருமணம் பொது செய்தியல்ல. நபிகளாரின் ஒரு சுன்னத். நடைமுறை.
‘‘திருமணம் எனது சுன்னத். யார் எனது சுன்னத்தை உடைக்கிறார்களோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல.’’ இதன் அர்த்தம் என்ன.
நபிகளார் தொழுததை போன்று தொழுக வேண்டும். சஜ்தா இறை நெருக்கமானது. ஆனால் அதற்காக ஒரு ரக்அத் நான்கு சஜ்தா அனுமதியில்லை.
தொழுவது மட்டுமே கடமையல்ல. மக்ரிபு நான்கு ரக்அத் கூடாது.
திருமணம் சுன்னத். நபிகளாரின் வழியைப் பின்பற்றினால் சுன்னத். நபியின் திருமண முறையை அப்படியே முழுவதுமாக பின்பற்றவேண்டும். சொந்த, சுய அபிப்ராயம், விருப்பம் கூடாது.
குறைந்த செலவு திருமணம் இறை பார்வையில், அதிக பரக்கத், இறையருள்.
நமது ஸ்டேண்டர்ட் வேறு.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை வேறு.
பார்வை கண்ணோட்டம் மாறுபடுகிறது.
திருமணத்தில் பகைவரையும் விருந்துக்கு அழைக்கிறோம். விடுபட்ட உறவினர்கள், பேச்சு உடன்படாத நெருக்கமானவர்கள், கசப்புமிக்கோர், நீண்ட காலம் தொடர்பற்றவர்களையும் வலிய, பிரியத்துடன் நிக்காஹ்வில் கலந்து கொள்ள பிரயாசைப் படுகிறோம். இருவருக்கு மட்டும் அழைப்பு இல்லை. அல்லாஹ், ரசூல்.
ஒவ்வொரு பொருளின் ‘‘பரக்கத்’’ வேறுபடுகிறது. பணம் குறித்த பரக்கத் & குறைந்த செலவில் அதிக தேவை எதிர்பார்ப்பு பூர்த்தியாகணும். உடல்நலன் மீதான பரக்கத் – நோய் நலிவு இன்றி சுக வாழ்க்கை.
கல்யாணம் ஒட்டிய பரக்கத் – டென்ஷன் பரபரப்பு இல்லாமை, பிரியமான உறவு, நிம்மதி நாட்கள், சாலிஹான குழந்தை. இன்று ஒவ்வொரு வீட்டிலும் தகராறு.
மாமியார் மருமகள் சண்டை, கணவன் மனைவி கருத்து மோதல். ல தஸ்குனூ அலைய்ஹா நிம்மதி அடைய. இது இறை கருத்து.
வெளி உலகிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தால் டென்ஷன் எரிச்சல் கூடாது. நிம்மதி வேண்டும். இன்று வெளி உலகம், இல்லம் இரண்டிலும் ஒரே டென்ஷன். பரிதவிப்பு. அலைக்கழிப்பு. நிம்மதியின்மை.
காரணம் என்ன நபிகளாரின் திருமண வழியை புறக்கணித்தோம். நிக்காஹ் பலன், சிறப்பு, பரக்கத் நீங்கிவிட்டது. ஒருவர் இன்னொருவருக்கு ஆடை. பரஸ்பர ஆடை.
லிபாஸ் ஆடை ஜீனத் அழகு தரும். கண்ணியம் கிடைக்கும். சிறந்த ஆண் இலக்கணம், மனைவி கண்ணியமானவர்.
மனைவி வாயிலாக குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டால் கணவனுக்கு ஜீனத் பெருமை. ஆடை வெயில், மழை, பனி, குளிர் பாதுகாப்பு. ரகசியம், சொத்து பாதுகாப்பு. கணவனின் பலவீனத்தை மறைப்பாள். காயம், வீடு, தழும்பு, புண் உடல் பலவீனத்தை ஆடை மறைக்கும்.
மனைவியின் குற்றம், குறையை குடும்பம் முழுவதும் பறைசாற்றுகின்றனர். வீட்டில் நிம்மதி பெறாதவர் உலகில் பெரிய சாதனை சாதிக்க இயலாது.
இரண்டு நபிமார்கள் தாவத் இறைவன் அதிகமாக ஒப்புக் கொண்டுள்ளான். நபி இபுராஹிம் அலைஹிஸ்ஸலாம், நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
மனைவிகள் பணிக்கு ஒத்துழைத்தனர். நபிக்கு கட்டுப்பட்டனர். உதவி நல்கினர். இறை பிரச்சாரப் பணி வெற்றியடைந்தது.
இரண்டு நபிமார்களின் தாவத் மக்களை அதிகம் ஈர்க்கவில்லை. நூஹ் அலைஹிஸ்ஸலாம், லூத் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர். நபியின் அமல், முயற்சியில், குண ஒழுக்கத்தில் எத்தகைய குறையுமில்லை. மனைவி காஃபிர். நபியின் மிஷன் பிரச்சாரப் பணிக்கு ஒத்துழைக்கவில்லை.
தாய், மனைவி, மகள் ஒத்துழைப்பு தராவிடில் எந்த மனிதரும் வெளிஉலகில் பெரிதாக எதனையும் சாதிக்க இயலாது. வீட்டில், இல்ல பெண்களிடையே ஒத்துழைப்பு அமையவேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் அதிக தகராறு, சண்டை காரணம் திருமண ஆடம்பரம். பணச்செலவு.
நபிகளாரின் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு பெண் கேட்டனர். விருப்பம் தெரிவித்தனர். நபிகளார் மறுத்து விட்டார். உமர், உதுமான் ஆலோசனையில் அலி ரளியல்லாஹு அன்ஹு பெண் கேட்டார்கள். நபிகளார் சம்மதித்தார். பெண் கேட்டு மறுக்கப்பட்டால் பகை கூடாது. தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பேச்சுவார்த்தை இன்று நின்றுவிடுகிறது. கல்யாண பேச்சு ஆண் துவக்கணும். மாப்பிள்ளை வீட்டார் முதலில் சென்று பெண் கேட்கணும். இன்று நிலைமை தலைகீழ். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை பெண் கேட்டு விருப்பம் தெரிவித்தார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தவிர ஏனைய மனைவிகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் கேட்டார்கள். மணமகள் வீட்டார் இழிவானவரில்லை. மணமகன் சென்று பெண் கேட்க வேண்டும்.
இஸ்லாமிய பிரச்சாரத்தில் நான்கு சஹாபிகளின் பங்களிப்பு அதிகம். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மகள்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் புரிந்தார்கள். உதுமான் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவருக்கும் தமது மகள்களை மணமுடித்து மகிழ்ந்தார்கள்.
திருமணத்தில் மஹர் பணமாக, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கேடயம் விற்கப்பட்டது. 800 திர்ஹம் ஏலம். உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விலை தந்தார்கள். மஹர் பணம். அன்பளிப்பாக உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேடயத்தை திருப்பி அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கினார்கள். கொஞ்ச பணம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. புது வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கினார். 300 திர்ஹம் மிஞ்சியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்கள். ”ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து பிரிவு நேர்ந்தால் மஹர் ஒரு பகுதியையாவது திரும்ப செலுத்துவீர்”. உலமாக்கள் கருத்து – தலாக் சொன்னால் ஒரு பகுதி மஹரையாவது கொடுப்பீர். மஸ்ஜிதுன்னபவீயில் திருமணம் நடந்தது. அன்று மாலை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கையை பிடித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதுவீட்டுக்கு அழைத்து சென்றார்கள். அலீ! இன்றிலிருந்து வெளி வேலையனைத்தும் உன் பொறுப்பு. ஃபாத்திமா! இன்றிலிருந்து வீட்டு வேலையனைத்தும் உன் பொறுப்பு.
அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சாச்சா, முஸ்லிமானவர். மக்காவில் தங்கியிருந்தார்கள். அவரை திருமணத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைக்கவில்லை. பெண் சம்பாத்தியத்தில் மாப்பிள்ளை உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணமகன் அலி ரளியல்லாஹு அன்ஹு பணி செய்தார்கள்.
குடும்பத்தை காப்பாற்றுவது மாப்பிள்ளையின் கடமை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தினார்கள். ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு போன்ற வாரிசுகள் கிடைத்தனர். குடும்பம் தழைத்தது. ஹலால் சிரமம், ஹராம் எளிதாகும். கடன் சிரமம் வட்டி எளிதாகும். திருமணம் சிக்கல், பாவம் எளிதாகும். அதிகரிக்கும். 30 வயதை தாண்டிய 40,000 முஸ்லிம் மகளிர் நகரில் திருமணமில்லை. இன்று லட்சமாகப் பெருகியுள்ளனர். இந்துக்களை மணம் புரிகின்றனர். செலவழிக்க பணமில்லை. சமூக பாதுகாப்பு கடினமாயுள்ளது.
-மௌலானா காலித் சைபுல்லாஹ் ரஹ்மானி, பொதுச் செயலாளர் இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமி
-தமிழில் பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
முஸ்லிம் முரசு டிசம்பர் 2011