அழைப்புப் பணி மறுபக்கம்!
காந்தான் – பாரம்பரிய முஸ்லிம்கள், வளர்ந்த முஸ்லிம்கள், வளராத வரண்ட முஸ்லிம்களைக் கண்டு விரண்டோடுகின்றனர். பெரும்பணி, பதவிகளில் வீற்றிருப்போர். இந்துக்களுடன் பணியாற்றும் முஸ்லிம்கள் முன்பாகச் சென்று சலாம் கூறினால், பதில் சலாம் கிடைப்பதில்லை. கற்பனையான பயம். மௌனம்.
மற்ற மதத்தவர், வடநாட்டவர் திரட்சியாக வணிகம் செய்து வாழும் பகுதியில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி நகர்வலம் வரும்போது தமது சட்டையில் மாட்டியுள்ள பெயர்ப் பேட்ஜை சரிவாகத் தளர்த்திக் குத்தி தான் முஸ்லிம் என அடையாளப்படக் கூடாதெனும் கலக்கம் களத்தில் காட்சியளிக்கிறது.
இந்தியாவை ஆண்ட பரம்பரையினர் மொழி எங்கள் மொழி. இஸ்லாத்திற்குரிய மொழி. மற்ற மொழியினரை ஏற்கமாட்டோம். என்றொரு குரல் முஸ்லிம்களுக்குள்ளாகவே ஒலித்து தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கிறது. முஸ்லிமாக இருப்பதைவிட எங்கள் மொழியாளரா நீ-? கேள்வி மேலோங்கியிருக்கிறது. தீண்டாமை மறவாமையிருக்கிறது. முஸ்லிம் சேரிவரை நீண்டிருக்கிறது.
இஸ்லாத்திற்குள் அழைத்து கலிமா கற்றுக் கொடுத்து தொழுகை நிலைநாட்டப் போகிறோம். சென்றவர்கள் பாதிவழியிலேயே கொடூரமாகத் தங்களுக்குள் தாக்கிக் கொள்கின்றனர். உலக மோகத்தில் ஈர்க்கப்பட்டு பாதை மாறுகின்றனர். ஒவ்வொரு மஸ்ஜித்திலும் ஒருவரையருவர் ஏற்றுக் கொள்ளாத கசப்புணர்வு காட்சியளிக்கிறது. கலிமாவை ஏற்றவர்களுக்குள்ளாகவே இணைப்பில்லை. 3,000 பேர் தொழக்கூடிய பள்ளிவாசலில் 200 பேர் தொழுகின்றனர். அருகிலேயே 50 அடிக்கு ஒரு தொழுகை சென்டர்!
தொழுகை ஷரத்து தெரியாமல், ஷரிஅத் புரியாமல் இஸ்லாத்தின் அடிப்படையே அறியாமல் 100க்கு 75 முஸ்லிம் வாழ்கின்றனர். உடை, தோற்றம் தவிர இஸ்லாத்தின் எந்த கூறும் அவர்களிடம் காண்பதற்கியலாது. மெல்ல, மெல்ல இஸ்லாத்தை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்டு, ஒதுக்கப்பட்டுக் கிடந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும்
அழைப்பு ஏற்று வரும் நபரை அவர் வாழுமிடத்துக்கு அருகிலுள்ள மஹல்லா மஸ்ஜிதுக்கு அழைத்துச் சென்று இமாம், ஜமாத்தாரிடம் அறிமுகம் செய்து தொடர்பு ஏற்படுத்தணும். செய்வதில்லை. அழைப்புப் பணியாளர் 300 மைல் தூரமுள்ள தமது சென்டர்களுக்கு அழைத்துச் சென்று தனிமைப் படுத்துகின்றனர். வருகையாளர், குடும்பத்தார் கடைசிவரை ஜமாத்தினருடன் கலக்கவியலாமலே போகிறது.
தாங்கள் மட்டும் தூய முஸ்லிம்கள். மற்ற முஸ்லிம்கள் ஷிர்க் வாதிகள், கெட்டவர்கள் என்னும் கண்ணோட்டம் காணப்படுகிறது. தம்மைச் சார்ந்த குழுவினர் தவிர மற்ற முஸ்லிம்களுடன் புதிய நபரை பேச, பழக அனுமதிக்காத போக்கும், அவர்கள் தரும் குர்ஆன், ஹதீஸ் வாசிக்க விடாது தடுத்தலும் நடக்கிறது. மற்ற முஸ்லிம்களிடம் குறையிருப்பதாகக் குற்றப்படுத்தி புதியவரை ஜமாத்தாக்க முடியாது.
இஸ்லாத்திற்கு வெளியில் இருப்போரை அழைக்கிறோம். கிளம்புகின்றனர். 114 அத்தியாயம். 30 பகுதிகளாக அமைந்துள்ள 6666 இறை வசனங்கள் மனப்பாடமாக கற்றுக் கொண்டவர்களா? தெரியவில்லை. தான் 25 சதம் 50 சதம் முஸ்லிம் என்றால் அத்தனை சதத்தை தமது உறவினர், சுற்றத்தாரை கழுவி குளிப்பாட்டி திணித்திருக்கணும். செய்வதில்லை.
அக வாழ்வு, புறவாழ்வு இரண்டையும் தன்மூலம் எதிராளிக்கு காட்டணும். இயலவில்லை. அழைப்புப்பணி பணம் பண்ணும் பணியாக, தொழிலாக மாறியிருக்கிறது. வரும் நபருக்கு அல்லாஹ்வையும், நபியையும் காட்டவேண்டியவர்கள். தமது குடும்பத்தை பொருளாதாரத்தில் மேலேற்றி சொகுசு வாதிகளாக மாறுகின்றனர். மெய்ம்மைத்தனமில்லாத காரணத்தால் அழைப்புப்பணி போலித்தனமாக, வரலாற்றுக் களங்கமாக பயணப்பட்டிருக்கிறது.
-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு டிசம்பர் 2011
source: http://jahangeer.in