Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கை விடப்படும் குழந்தைகள்! கவனிக்குமா சமுதாயம்?

Posted on November 26, 2011 by admin

கை விடப்படும் குழந்தைகள்! கவனிக்குமா சமுதாயம்?

    Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)    

ஆறறிவுள்ள மனிதனுக்கு ‘ திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது’. அந்த பாக்கியம் வில்ங்கினங்களுக்கில்லை. ஆணுக்குப் பெண் இளைப்பாறும் விளை நிலமாக அல்லாஹ்வால் பாரினிலே படைக்கபட்டாள். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு மற்றும் பாச பரிமாற்றத்தால் உண்டாகும் நன் முத்துக்கள் தான் குழந்தை பாக்கியம் என்றால் மிகையாகாது.

விதைககபடும் எல்லா நிலங்களிலும் பயிர்கள் உண்டாகாது. அதேபோல் உண்டாகிய அணைத்து பயிர்களும் உயிருடன் நிலைத்து நிற்குமா என்றும் சொல்ல முடியாது. அதே போன்றுதான் தம்பதிகளுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் உயிருடன் வாழ்வார்களா என்றும் அறிதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது.

அடுத்தபடியாக ஓரிரு குழந்தைகள் உள்ளவர்கள் தான் உலகத்தில் வறுமை இல்லாமல் வாழ்வார்கள், அதிக பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் கஷ்ட கண்ணீர் கடலில் மூழ்குவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஐந்து அல்லது ஆறு ஆண் மக்களை பெற்ற பெற்றோர்கள் பஞ்சத்தில் துவல்வார்கள் ஆனால் ஏழு எட்டு பெண் மக்களை பெற்றவர்கள் செல்வக்கொளிப்பில் வாழ்வதினை நாம் கண்கூடாக காண்கிறோமல்லவா? அதுபோன்ற பாக்கியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருகிருபைதானே?

பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குழந்தையினை பெற்று எடுப்பது எவ்வளவு சிரமமென்று . சில பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போதே இறந்து விடும் பரிதாப நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். ஆகவே சாவின் விளிம்பிலிருந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தக் குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்காமல் பராரியாக விடப்பட்ட சில சம்பவங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.

1) திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த செய்யது யூசுபிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவருடைய மனைவி பாத்திமா மூன்றாவது குழந்தைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது யுசுப் தினமும் குதித்துவிட்டு வேலைக்கு வருவதால் அவர் வேலை போய்விட்டது. பாத்திமாவும் அழகான மூன்றாவது பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள்.

வீட்டில் விளையாடிய பஞ்சத்தால் மனதினை கல்லாக்கிக் கொண்டு பிறந்தே ஒருமாத பெண் குழந்தையினை தாய் பாதிமவிற்குத் தெரியாமல் மும்பை வியாபாரிக்கு ரூ 40000/ விளை பேசி விற்றுவிட்டார். பெற்ற மனது பொறுக்குமா? கொதித்தெழுந்தாள் பாத்திமா. விளைவு காவல்துறையினரிடம் புகார் சென்றது. காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு குழந்தையினை மீட்டு பாத்திமாவிடம் கொடுத்ததோடு நில்லாமல் குடிகார கணவனான யூஸுபையும் கைது செய்ததாக செய்திகள் சொல்லுகின்றன.

2) கேரளா மாநிலம் கொசியினைச் சார்ந்த பேரலூர் என்ற நகரத்தில் பதிமூன்றே வயதான ஒரு சிறுமியை தன் குடும்ப வருமையினைப் போக்க தாய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளாள். ஒன்றும் அறியாத அந்த சிறுமியினை பால் படுத்தியாக கேரளா காவல் துறையினர் இது வரை எண்பது பேரை கைது செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டினைச் சார்ந்த அதிகாரிகளும் பிரமுகர்களும் அடங்குவார்கள். இதுபோன்ற வெளி வராத செய்திகளும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.

3) உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு பார்க் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் அக்கு லால். இவர் அனாதையாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் பிரமுகர் எடுத்து வளர்த்து ஆளாக்கினராம். ஒரு நாள் இரவு தனது டீக்கடையினை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது பார்க் அருகில் ஆறு வயது சிறுவன் முடங்கி படுத்து தூங்கியுள்ளான். அந்த பெரியவர் அவனை எழுப்பி அவனைப்பற்றிய விவரம் கேட்டபோது தனது பெயர் அக்பர் என்றும் தனது பெற்றோர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டனர் என்றும் சொல்லியுள்ளான்.

அந்தப் பெரியவர் அவனை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று அவனை பராமரித்து வந்தது மட்டுமல்லாமல் அவனை ஏழாவது வரை படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை தொழுக வைத்தும், ரமழான் மாதத்தில் நோன்பு வைக்கவும் பழகிக் கொடுத்துள்ளார். அதனைப் பற்றி அந்தப் பெரியவர் சொல்லும்போது தன்னை வளர்த்த முஸ்லிம் பெரியவருக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவதிர்க்காக தானும் அக்பரை முஸ்லிமாக வளர்ப்பதாக பேட்டி கொடுத்துள்ளார்.

நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிருந்து கீழ்கண்டவைகள் தெளிவாக புரிகின்றன:

1) இருண்ட கால அரேபியாவில் பெண் குழைந்தைகளை ஒரு பாரமாக எண்ணி அவைகளை மண்ணில் புதைத்த நிலையிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ரசூலில்லாவின் போதனைகள் இன்னும் சமுதாய மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழந்தைகளை பேணிகாக்க சமுதாயத்தில் ஏதும் திட்டம் இல்லையா என்ற கேள்விக்குறி எழாமலில்லையல்லவா?

அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழைதைகளுக்காக தனியாக மதர்சாவுடன் கூடிய அனாதை பெண் காப்பகம் நிறுவுவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே?

2) ஆண் குழந்தைகளை பராமரிக்க எத்தனையோ அனாதை ஆசிரமங்களும், மதரசாக்களும், பிற்பட்டோருக்காக அரசு விடுதிகளும் உள்ளன. அவைகளில் மேற்குறிப்பிட்டது போன்ற குழந்தைகளை சேர்க்க உதவலாம்.

3) நோன்பு சகர் நேர பிரசங்கங்களில் ஏழை எளியோருக்கு உதவ பைத்துல் மால் நிதி வழங்குங்கள் என்று பிரச்சாரங்கள் சொல்லப்பட்டன. அனால் அதுபோன்று வசூல் செய்த பணம் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு என்று இயக்கங்கள் வெளியிடுவதில்லையே ஏன்? இதுபோன்ற பைத்துல்மால் பணத்தினை ஏழை எளியோர் வாழ்க்கைதரம் உயர தொழில் தொடங்க உதவி செய்தால் பெற்ற குழந்தைகளை நடு ரோட்டில் பரிதவிக்க செய்வதிலிருந்தும், பெண் குழந்தைகளை விற்பதிலிருந்தும், விபசாரதிலிருந்தும் காப்பற்றலாமல்லவா என்றால் சரிதானே சகோதரர்களே?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

47 − = 46

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb