நேர்மையுடன் ஹலாலான வகை வணிகத்தில் எந்த வியாபாரமும் கேவலமல்ல!
வணிகத்தில் உயர்ந்தவணிகம். தாழ்ந்த வணிகம் பிரித்தல், பாகுபாடு காட்டுதல்கூடாது. எந்த வியாபாரமும் கேவலமல்ல. நேர்மையுடன் ஹலாலான வகையில் வணிகத்தில் பொருளீட்டலாம். நபிமார்கள் கால்நடை மேய்த்துள்ளனர். நபித்தோழர்கள் ஓட்டகக் கழிவை அள்ளியுள்ளனர். தொழிலில் தீண்டாமை தேவையில்லை.
வியாபாரத்தால் வரும் ஆதாயம். இழப்பு இரண்டும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பவை. லாபத்துக்கு குதூகலித்தல். நஷ்டத்துக்கு சோர்ந்து போகுதல் ஈமான் அற்ற போக்கு. பொருளிழப்பை நினைத்து குழம்புதல், மற்றவர் மீது, இயற்கையின்பால் பழி சுமத்துதல் துர்வாதம். செய்யும் தொழிலில் பூரணமாகக் கவனம் செலுத்தி முழு உழைப்புதரணும் இறை வெகுமதி நிச்சயமுண்டு.
வியாபாரத்திற்கு வாக்கு நாணயம் பிரதானம். பொருட்களால் ஆன கடன். இரவல் பணம் சொன்ன சொல் மீறாது, மாறாது வாக்குகொடுத்த தினத்தில், நேரத்தில் கொடுத்து வ¤டணும். பருவகாலம் மழை, வெயில், புயல் காரணங்கள் கூறி நாணயம் தவறக்கூடாது. முதலீடு இல்லாமல் மற்றவர்களுடைய பொருட்களை கடைகளில் வைத்து விற்பவர்கள் விற்றபிறகும் பணம் தருவதில்லை. அலைய விடும் நிலையிருக்கிறது.
வேற்றூர், வேற்று மாநிலங்களில் பொருள் பெற்று விற்கும் வணிகர்கள், பெற்ற பொருட்களில் 5 சதம் பாதிப்பு, பழுது, கழ¤வு இருப்பின் 50 சதம் மிகைப்படுத்திக் கூறி தரவேண்டிய பணத்தை கணிசமாக தள்ளுபடி செய்ய வைக்கின்றனர். வியாபாரத் தொடர்ச்சியை விரும்பும் டிஸ்ரிப்பியூட்டர் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கின்றன்ர். மறுத்தால் மொத்த நிலுவைத் தொகையும் மோசடி செய்யப்படும். உண்மையை உணர்ந்திருக்கின்றனர்.
மறுபடியும் பொருட்கள் சப்ளை செய¢யப்படவில்லையெனில் முந்தைய நிலுவைக் கடனை மோசடி செய்யும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. “முன்னுக்குப் பின்” முதுமொழ¤ போல் முதலாளி மோசடி வித்தையை நேரடியாகக் காணும் தொழிலாளி தன் பங்குக்கு தவறு செய்கிறார். வாடிக்கையாளருக்கு அனுப்பக் கூறும் பொருட்களுடன் முதலாளி தரும் பட்டியலுக்கும் மேலாக ஏற்றியனுப்பி வாங்குபவர், வாகனக்காரர், தொழிலாளி மூன்று பேருமாகப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். தொழிற்சாலை முதலாளி வங்கிப் பணத்தை சுருட்டுகின்றார். டிஸ்ரிபியூட்டர் தொழிற்சாலையை திவாலாக்குகின்றார். நுகர்வோர் தினக்கடன், மாதக்கடன் தர மறுக்கின்றனர். வரவுக்கு மீறிய செலவுகளால், கெடுமதியால், தீய கொள்கையால் சிறுவியாபாரிகள் திவலாகுகின்றனர். தொடர் ஏமாற்றுத்தனம் மேலிருந்து கீழ் நிலைவரை நீளுகிறது.
எந்த ஒரு பொருளும் வாங்க வரும் நுகர்வோர் விற்பவரின் அடிமையல்ல. வியாபாரிகளின் வாழ்வாதாரம். மதிக்கப்பட வேண்டியவர்கள். “வாங்கினால் வாங்கு வாங்காவிட்டால் போ” மரியாதையற்ற, துடுக்குத்தனமான எடுத்தெறியும் சொற்களை உச்சா¤க்கக் கூடாது. பொருட்களில் பழுதிருக்கிறது கூறினால் மாற்றித்தரணும். இயலாத நிலையில் உடனடியாக அக்கரையெடுத்து சரிசெய்து வழங்கணும். துலாக்கோல் போன்று பொருட்களின் தரத்தை சரியாகக் கூறும் நாவிருக்கணும். தரமற்றபொருள். தரமுள்ள பொருள் தன்மையை வாங்குபவருக்கு விளக்கணும். முடிவெடுக்கும் உரிமையை நுகர்வோருக்கு விட்டு விடணும். அளவான இலாபமே நோக்கம். கூடுதல் லாபம் கூடாது.
அடுத்தோர் பணத்தை வியாபாரம் வழியே அபகரித்தல். வரம்பு மீறிய இலாபம் நரகத்திற்கு அனுப்பும். அநாவசிய, ஆடம்பரச் செலவு செய்தல். வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்குத் தரும் மாத ஊதியம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் நாளன்றுக்குச் செலவிடுதல். பல இலட்சம் செலவில் பிரயாணம் சுற்றுதல். 100 சவரன் நகையிட்டு செல்வந¢தச் செருக்கைக் காட்டுதல். கைகள், கழுத்தினில் தங்கத்தை கட்டியாகச் சரமாகத் தொங்க விடுதல். கூடுதலான வாகனங்கள் வைத்துக் கொள்ளல் அனைத்தும் ஆராய்தலில் காணக்கிடைப்பவை. பார்க்கும் ஏழைப் பெண்கள் ஏக்கமுறுகின்றனர். வீதியில், குடிசையில், நாரிழை ஓட்டு வீடுகளில் வசிக்கும¢ குடும்பங்கள் இதனைக் கண்டு இயலாமையில் மனம் புளுங்குகின்றன. விரக்தியடைகின்றனர். காலக்கடப்பில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அமானிதம். வியாபாரப் பணம் முழுவதும் செலவிடும் குருட்டுத் தனத்தால் பொய், ஏமாற்றுத்தனம் நிலைக்கிறது.
வியாபாரத்தில் வரும் மொத்த தொகையை மூன்று பகுதியாகப் பிரிக்கணும். முதல் பங்கு முதல¦ட்டுக்கு. 2 ஆம் பங்கு தமக்கு. 3ஆம் பங்கு தானதர்மத்துக்கு. உறவினர், பந்துக்கள், வறுமையில் வாடும் அண¢டைவீட்டார்க்கு 3ஆம் பங்கை பிரித்து வழங்கணும். இந்த செயல்முறை மட்டுமே வியாபார நொடித்தல். சரிதல், மூடுவிழாவில் இருந்தும் காப்பாற்றும். வாரிசுகளுக்கு பாதுகாப்பளிக்கும்.
(நபியே) “நீர் கூறுவீராக : உங்கள் தந்தையர். உங்கள் குழந்தைகள். உங்கள் சகோதரர்கள். உங்கள் மனைவியர். உங்கள் குடும்பத்தினரும் எவற்றை நீங்கள் சம்பாதித்தீர்களோ அதற்கேற்ப பொருட்களும், எதனுடைய இழப்பை அஞ்சுகிறீர்களோ அத்தன்மையுடைய வியாபாரமும். எவற்றால் நீங்கள் திருப்தி அடைகிறீர்களோ அத்தகைய வீடுகளும் அல்லாஹ்வை விட, அவன் ரசூலைவிட, அவனுடைய பாதையில் போர் புரிவதை விடவும் விருப்பமானதாக உங்களுக்கு இருந்தால் அல்லாஹ¢ தன்னுடைய கட்டடையைக் கொண்டு வரும் வரை நீங்கள் எதிர் பார்த்திருங்கள். பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ¢ நேர்வழியில் செலுத்தமாட்டான்”(9:24)
-புலவர் சக்கரை அஹ்மது, ( சிறு தொழில் வரலாறு! (வியாபாரப் பாலிசி), நவம்பர் முஸ்லிம் முரசு 2011
source: http://jahangeer.in