Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்போம்

Posted on November 23, 2011 by admin

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்போம்

இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை.

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்!

கீரீம், எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம்.

இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது.

இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது.

ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கும். மைதாவை உண்ணும் இந்தியர்கள்

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர் உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம். மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் ” WHITE DEATH ON YOUR PLATE – MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS – BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது.

இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.

இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை.

ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

– அன்புடன் கோவை எம் தங்கவேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

35 + = 43

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb