அதிர்ச்சி ஊட்டக் கூடிய விதத்தில் பெற்றோருக்கு முதன் முறையாக முதுமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் வயதில் தான் பெற்றோர் இருவரிடையே பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிலவேளைகளில் தாம் பிரிந்து வாழ்ந்தால் என்ன என்று நினைக்கவும் தலைப்படுகின்றனர்.
மேலும் இது அவர்களுக்கு நெருக்கடி நிரம்பிய காலம். பிள்ளைகளின் உதவியை நாடும் நிலைக்கு உந்தப்படுகின்றனர். பிள்ளைகளோ பிரிந்து தனியாக விரும்புகின்றார்கள். இதனால் பெற்றோர் பிள்ளைகளின் சுதந்திரப் போக்கிற்கு எதிராகச் செயல்படுகின்றனர். பிள்ளைகளின் மீதுள்ள அவர்கள் உரிமை வேட்கை உச்சத்தை அடைகிறது.
பருவமானவர்கள் தமது உரிமைக் கோரிக்கைகள் வரம்பை மீறிவிட்டனவென்று அறிவதெப்படி?
ஒருவழி இருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதினால் சற்று பொறுத்துச் சிந்தித்துப் பெற்றோரின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி அணுகிச் செயல்படுவீர்களென ஆராயுங்கள்.
நீங்கள் பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது ஒன்றும் இதற்குச் செய்து கொள்ள இயலாது என்று கருதுவீர்களாயின் நீங்கள் கோரியது அதிகப்படியானது என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். ஆகவே எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானவர் பெற்றோர் அல்லர் நீங்கள் தான்.
எமது பாட்டனார் காலத்திலோ அல்லது எமது கிராம மக்களிடையேயோ இத்தகைய பிரச்சினை இருக்கவில்லை ஏன்?
இரண்டு காரணங்கள்!
முதலாவதாக இத்தகைய முரண்பாடுகள் வெளிவர பெற்றோருடன் ஒளிவு மறைவின்றி விஷயங்களை அணுக வேண்டும். முன்னாளில் கிராம மக்களின் அதிகாரப் பிரயோகம் எல்லாவித எழுச்சியையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் பருவமானவரின் புரட்சிகள் அனைத்துமே நசுக்கப்பட்டு விடும்.
எமது பாட்டனார் காலத்திலோ, கிராம மக்களிடையேயோ மக்கள் சிறுவயதிலேயே திருமணமாகி விடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறியோ வெளியேறாமலோ குடும்பத்தவரை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் விரக்தியடையும் நிலயை எய்துவதில்லை. பாலியல் உறவு கொள்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். குடும்ப உறவையே தொடர்ந்தும் பேணி வருகின்றார்கள். வயது வந்தோர் நிலைக்குத் தயார் செய்து கொள்வதில்லை. ஆனால் வயது வந்தோர் சுமக்க வேண்டிய பொறுப்புக்களை சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
பருவமானோர் மனோநிலை மாற்றம் காண்பது என்பது இது தானா?
பருவமானவர்கள் தற்போதெல்லாம் மனோநிலை மாற்றத்திற்குள்ளாகிறார்களே என்று கூறக் கேட்கிறோம். இதனால் முன்பெல்லாம் நல்ல தகுந்த காரணங்களுக்காக கோபமோ, கவலையோ, மகிழ்ச்சியோ அடைந்தார்கள்.
உணர்ச்சிகள் திடீரெனவோ, ஆகாயத்திலிருந்து பிறப்பதில்லை. நடந்தேறிய சில சம்பவங்களே உணர்ச்சி மேலிடத் தூண்டுகிறது. மனம் புண்படும் வகையில் சிலர் சிலவற்றைக் கூறிவிடுவதாலோ முகக்கண்ணாடியில் உங்களையே நீங்கள் பார்க்கும் போது தோன்றுவது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கும் போதோ ஏற்படுகிறது. அல்லது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மன ஏக்கத்தைப் பெருக்குவதும் உலகமும் வாழ்க்கையும் வெறுமையானவையே என்கின்ற எண்ணத்தைத் தருவதாயும் இருப்பதாய் இருந்தால் மன உழைச்சல் ஏற்படுகிறது. எல்லாமே நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டுவதில்லை. மனதில் தோன்றுபவையும் கூட.
சிலசமயம் ஏற்படும் உணர்ச்சிகள் பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிய, தனிமையிலிருந்து சிந்திக்க விரும்பும் நிலையிலும் பிறக்கின்றன.