Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பழமையிலேயே புதுமைகண்ட இஸ்லாம்

Posted on November 16, 2011 by admin

ஆமினா

இஸ்லாத்தை பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கலாம். குர்ஆன் சொல்லும் விஷயங்கள் அறியப்பெறாத காரணத்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என தெரியாமல் கூட இருக்கலாம். அப்படிபட்டவர்களுக்காக இஸ்லாம் பழைய காலத்திலேயே (கிட்டதட்ட கிபி 600க்கு முன்பிருந்தே…) இன்றைய புதுமையான விஷயங்களை தன்னகத்தே கொண்டு இன்று வரை தீயமாற்றம் பெறாமல் வளர்ந்துள்ளது என அறியத்தரவே இப்பதிவின் நோக்கம்.

  பூப்பெய்தும் விழா  

பாரம்பரியம், கலாச்சாரத்தை எடுத்துசொல்ல கூடிய விழாவாய் இருந்த போதிலும் இன்று பலரால் வெறுக்கப்படும் அல்லது விமர்சனப்படுத்தப்படும் ஒரு விழாவாக இப்போது நிலவுகிறது. இந்த வீட்டில் பருவமடைந்த பெண் இருக்கிறாள் என வரன் தேடுவோர்க்கு எளிதாய் தெரியவேண்டி நடத்தப்படுதாக சொல்லப்படுகிறது.

இது தேவையான ஒன்றா? கலாச்சாரத்தை கட்டி காப்பாத்துறோம் என்ற பேரில் பெண்களை இழிவுபடுத்துவதா?

புதிதான; அர்த்தம் புரியாத சூழலுக்கு இழுக்கப்பட்டுள்ளோம் என்பதை கூட யோசித்து விடைபெற பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் அச்சிறுமிக்கு.

சகஜ சூழலுக்கு தன்னை மாற்றும் முன்பே அவளை அலங்கார பொம்மையாய் எல்லோர்க்கும் முன்னிலையில் பிரகடனப்படுத்துவது மன உளைச்சலுக்கு இட்டு செல்லாதா?

என்னை கேட்டால் இப்படியான சூழலில் அவளுக்கு தேவையான ஆறுதல்களும் அதை பற்றிய விழிப்புணர்வும் தருவது தான் அக்காலகட்டத்திற்கு அவளுக்கு தரும் பெரிய பரிசு. இப்போதாவது அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரென்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் தெரியாமலோ அல்லது எவ்விதத்தில்லாவது உறவினராக இல்லாமலோ இல்லை. அப்படியிருக்க பருமடைந்த பெண் இந்த வீட்டில் இருப்பாள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன்தான் இந்த நோக்கத்திற்காகதான் நடத்துகிறோம் என்று சப்பைகட்டு கட்டி இந்த தேவையில்லாத சடங்குகள்?

இப்படி ஊர் கூட்டி விஷேஷம் நடத்தப்படுவதால் பலன் என்னவோ மொய் கறக்க நினைக்கும் பெற்றோர்களுக்கும், இன்னும் மாமனார் வீட்ல எவ்வளவு கறக்கலாம் என எந்நாளும் துடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் தகப்பனார் வீட்டார்க்கும் தான். இஸ்லாம் இத்தகைய தேவையற்ற சடங்குகளை வெறுக்கிறது. இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்றை செய்வதும் புதிதுபுதிதாய் சம்ப்ரதாய சடங்குகளை புகுத்துவதும் வெறுக்கப்பட்ட செயலாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

”மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும்.” (ஆதார நூல்: புகாரி)

யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (ஆதார நூல்: முஸ்லிம்)

திருமண முடிவு

இன்றைய காலகட்டத்தில் சுயமாய் முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் விரும்பியோ வெறுத்தோ வழங்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கை என் கையில்… ஆகையால் நான் தான் தீர்மானிப்பேன் என்ற குரல் சமீப காலமா தான் ஓங்கியிருக்கு. அதுவும் வலுக்கட்டாயமாய் தான் இந்த உரிமையை மீட்டுள்ளோம். ஆனால் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை பெண்களிடம் சம்மதம் கேட்பது என்பது எங்காவது படித்த குடும்பத்தில் மட்டுமே நிகழும் விஷயம். “அவளுக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? நாம பாத்து எவன கட்டணும்னு சொல்றோமோ அவனுக்கு வாக்கப்பட வேண்டியது தான்”என சொல்லி சொல்லி எத்தனை கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்திருக்கும்? எத்தனை பெண்கள் விருப்பமில்லாத அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்?

ஆனால் …..

விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

பாருங்கள்! அக்காலத்திலேயே பெண்ணின் திருமண விருப்பத்தை உறுதிபடுத்திய பின்னரே; அவள் இன்னாரை திருமணம் செய்ய வாய் மொழியாக சம்மதம் தெரிவித்த பின்னரே திருமணம் நடத்தப்படவேண்டும் என கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருப்பமில்லாதவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டால் அத்திருமணத்தை ரத்து செய்ய கோரும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது.

விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உளவியல் ரீதியாக அவள் அனுபவிக்கும் எண்ணற்ற வேதனைகளை, மனக்குழப்பங்களை, தடுமாற்றங்களை அறிந்து அன்றே இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஒரே மதம் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. கணவன் இறந்து போனால் மொட்டை அடிச்சுட்டு, வெள்ளை சேலை உடுத்தி, தாலி அறுத்து பொட்டை அழித்து வளையலை உடைத்து, பூவை உருவிஸஸ (முன்பு உடன்கட்டை வேற) ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் பெண்ணை மீண்டும் மீண்டும் மரண வேதனை கொடுக்கும் சடங்குகளோ சம்ப்ரதாயங்களோ இஸ்லாத்தில் கிடையாது. மேலும் தாலி மெட்டி போன்ற பெண்ணை திருமணமானவள் என்று அடையாளப்படுத்தும் ஒரே காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அர்த்தமற்ற விஷயங்கள் இல்லை.

சமீபத்தில் கணவன் இறந்த பெண்ணிற்கு நடத்தபட்ட சடங்குகளை பார்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தம் தொண்டையை அடைத்தது. படத்தில் காட்டுவது போன்று ஏற்கனவே இருக்கும் அலங்காரங்களை அழிக்கவில்லை. வாசலுக்கு கொண்டு வந்து சில விதவை பெண்களின் மூலம் சடங்கு நடத்தப்பட்டது. அழகாய் போட்டு வைத்து, பூ சூடி, கண்ணாடி வளையல்கள் இட்டு வீதியில் அமர வைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கொடுத்து கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள் என்கிறார்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா அலங்காரங்களையும் கோர முகத்துடன் அழிக்கப்பட்டது…. இவையனைத்தையும் வீதியில் போவோர் வருவோர் அக்கம்பக்கத்திலுள்ளோர் வேடிக்கை பார்க்கும்படி தான் செய்யப்படுகிறது. இவையெல்லாம் எதற்கு? இதுக்கு பிறகு உனக்கு வாழ்க்கை இல்லை என சொல்வதற்காகவா?

காலம் மாறிவிட்ட போதிலும் கூட சமூகத்தில் தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக விதவை பெண்ணானவள் விருப்பமிருந்தும் மறுமணம் செய்ய தயங்குகிறாள். அல்லது மற்றவர்களால் அவ்வாறு செய்யக்கூடாது என தடுக்கப்படுகிறாள். ஆனால் இஸ்லாத்தில் மறுமணம் செய்ய பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அவளின் விருப்பத்தை/பாதுகாப்பை மறுக்கவோ தடை செய்யவோ எவருக்கும் உரிமை இல்லை.

வரதட்சணை

திருமண சந்தையாய் மாறிவிட்ட இக்கால திருமண நிகழ்ச்சி எல்லாருக்கும் நன்கு தெரியும். பெண் வீட்டார் குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியிருந்தும் கூட “இன்னும் பணம் வாங்கிட்டு வா” என மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டு தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு துரத்துவதும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் பெண்களை கொடுமைப்படுத்தி சாகும் அளவுக்கு பிரச்சனையை கொண்டு வருவதும் செய்திதாள்களின் மூலமாகவும் அண்டை வீட்டிலோ நம் நெருங்கிய வட்டத்திலோ அடிக்கடி கேள்விபடும் விஷயம். ஆனால் இஸ்லாத்தில் ஆண் தான் திருமணத்திற்கான தொகையை பெண்ணுக்கு பணமோ பொருளோ கொடுக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இஸ்லாமிய ஆண் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட தொகை (மஹர்) கொடுக்க வேண்டும். பெண் வீட்டார் எள்ளளவும் செய்யத்தேவையில்லை. அதுவுமில்லாமல் அத்தொகையை நிர்ணயம் செய்வதற்கும் பெண்களுக்கே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. என்னவன் எவ்வளவு எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். இவ்வளவு மணக்கொடை கேள் என யாரும் சொல்ல அனுமதி இல்லை . மேலும் மணக்கொடையாய் கொடுக்கப்பட்ட பணத்தையோ பொருளையோ முழுவதுமாக அனுபவிக்கும் உரிமையும் பெண்களுக்கு மட்டுமே!

நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வோடு புசியுங்கள் (ஆதார நூல்: அல்குர்ஆன் 4 : 4)

பாத்தீங்களா! இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை? மணமகனை தேர்ந்தெடுப்பதும் பெண்கள் தான். திருமணத்தொகை பெறுவதும் பெண்கள்தான். எல்லாவற்றையும் விட பிடித்தமானவரை திருமணம் செய்யும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளது. இத்தகைய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லதொரு சட்டங்கள் போன வருஷமோ முந்துன வருஷமோ ஏற்பட்டதல்ல…. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நடைமுறைபடுத்தப்பட்டுவிட்டது.

இத்தகைய உரிமையெல்லாம் மகளிர் அமைப்புகள் மூலமாகவோ,போராட்டமோ, உண்ணாவிரதோ செய்து பெறப்பட்டதில்லை. 33 சதவீதம் தா என்று இன்றளவும் கெஞ்சிக்கொண்டிருக்கவும் இல்லை. ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என நிரூபிக்கும் பல சான்றுகள் திருக்குர்ஆனில் கொட்டி கிடக்கிறது! என்றோ எங்களுக்கு சுதந்திர காற்று அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டுவிட்டது. இப்ப சொல்லுங்கஸ. இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதமா (மார்க்கமா?)? இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தும் மதமா (மார்க்கமா?)?

source: http://kuttisuvarkkam.blogspot.com/2011/11/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 98

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb