[ கம்யூனிஸ்ட்கள் பெண்ணுரிமை பற்றி வாய் திறந்தால் அதில் இஸ்லாமிய பெண்களைப் பற்றியும் பர்தாவைப் பற்றியும் எழுதாமல் இருந்ததில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், முஸ்லிம் சமூகம் பெண்களைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளது எனும் அபத்த சிந்தனைதான் இருதரப்பினரிடமும் காணப்படுகிறது.
ஆனால் ஸ்டாலின் பர்தாவை சரியான உடை என்கிறார். ”சர்வம் ஸ்டாலின் மயம்” என்ற புத்தகத்தில் பக்கம் – 135ல் நம்ம ஸ்டாலின் ரொம்ப அருமையாக ஒரு பெண்ணு எப்படியேல்லாம் டிரஸ் போடணும்னு தன்னுடைய மகளுக்குச் சொன்ன அறிவுரையை பாருங்க!
”மகளே ஸ்வெத்லானா உடலோடு ஒட்டிக் கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!”]
கம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்…
குழந்தை வளர்ப்பு, சமையல் முதலிய ‘முக்கியத்துவமற்ற பணிகளில் மூழ்கி தந்தை, கணவன்,மகன் ஆகியோரின் பாதுகாப்பில் வீடுகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்க்கையைக் கழிப்பவர்கள் தாம் ஹவுஸ் ஒய்ப் என்று சொல்லக்கூடிய குடும்ப பெண்கள் இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது தான் எங்கள் முதல் கடமை என்று சொல்லுகிற கம்யூனிஸ்ட்களும் மேற்கத்திய போலி பெண்ணியவாதிகளும் (எந்த வகையான சுதந்திரத்தை பெற்றுத் தருவார்கள் என்பதை பிறகு பார்ப்போம்)
கம்யூனிஸ்ட்கள் பெண்ணுரிமை பற்றி வாய் திறந்தால் அதில் இஸ்லாமிய பெண்களைப் பற்றியும் பர்தாவைப் பற்றியும் எழுதாமல் இருந்ததில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், முஸ்லிம் சமூகம் பெண்களைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளது எனும் அபத்த சிந்தனைதான் இருதரப்பினரிடமும் காணப்படுகிறது.
ஆனால் நம்ம ஸ்டாலின் பர்தாவை சரியான உடை என்கிறார்.
நூல்: சர்வம் ஸ்டாலின் மயம், என்ற புத்தகத்தில் பக்கம் – 135ல் நம்ம ஸ்டாலின் ரொம்ப அருமையாக ஒரு பெண்ணு எப்படியேல்லாம் டிரஸ் போடணும்னு தன்னுடைய மகளுக்குச் சொன்ன அறிவுரையை பாருங்க!
”மகளே ஸ்வெத்லானா உடலோடு ஒட்டிக் கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!”
எல்லா நிலைகளிலும் அடக்குமுறைகளுக்கு ஆளான பெண்களுக்கு எடுத்துக் காட்டாக முஸ்லிம் மகளிரைக் காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள் மேற்கத்தியர்கள். அவர்களின் ஆங்கில கட்டுரைகளை தமிழில் அப்படியே காப்பியடித்து வாந்தியெடுக்கும் கம்யூனிஸ்ட்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொள்கிற பிற்போக்குவாதிகள்.
ஒரு ஆணுடன் வாழ்வதை அடிமைத்தனம் என்று நினைக்கிற, கூட்டு கலவி, ஓர்பாலின உறவு, விருப்பட்டவர்களிடம் செக்ஸை பகிர்ந்து கொள்வது என முற்போக்கின் பரிணாம உச்சியில் இருக்கிற மேற்கத்திய முற்போக்கு என்கிற கற்காலத்து பெண்களை பொறுத்தவரை இவர்கள் பிற்போக்குவாதிகள் தான். இவர்கள் முஸ்லிம் பெண்களுக்காகப் பேசும் முழு அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று அடம் பிடிக்கிறார்கள்.
இவ்வாறு முஸ்லிம் பெண்களை இழிவாகச் சித்தரிப்பதன் மூலம் தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நியாயமானது தான் என்று காட்ட முனைகிறார்கள். பெண்களை அடக்கி ஒடுக்குவதிலிருந்தே இஸ்லாம் எத்துணைக் கொடுமையான மதம் எனத் தெரிகிறதல்லவா என்றும் வினவுகின்றனார்.
முஸ்லிம் பெண்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையற்ற அந்தந்த நாடுகளின் வட்டார பழக்க வழக்க வழிமுறைகளால் பல அநீதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. அவர்களின் திறமைகளும் ஆற்றல்களும் முழுமையாகப் பயன்படுத்தபடாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதும் உண்மைதான். மார்க்கமின்மைதான் இவர்களின் முதல் பிரச்சனை.
ஆனால் இத்தகையச் சிக்கல்கள் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே உரியன என்பதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறது பெண் விடுதலைக்கு நிறமோ, மதமோ, சாதியோ இல்லை.மேற்கத்திய, கம்யூனிஸ பெண் விடுதலைக்கு என்ன அளவுகோலை நிர்ணயித்துள்ளார்களோ அந்த அளவுகோலை முழுமையாகப் பின்பற்றி மனநிறைவுடன் வாழும் ஒரு பெண் கூட இல்லை.
உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்.
ஆனால் கம்யூனிஸ்ட்கள் தங்களின் பொற்கால அற்புத ஆட்சி என்று வர்ணிக்கிற சோவியத் யூனியன் ரஷ்ய ஆட்சியில் பெண்கள் பட்ட துயரத்தை சொல்லி மாளாது. கம்யூனிஸ பொருளாதாரத்தின் இயற்கையான இயல்பே இயன்ற அளவு உற்பத்தியை பெருக்குவதேயாகும் அதற்காக சமுதாயத்தின் அத்த்னை ஜீவன்களும் ஆலைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும், கழனிகளிலும் ஆண்களைப் போல் பெண்களும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
அனைத்து கடுமையான வேலைகளிலும் பெண்கள்
ரஷ்ய கம்யூனிஸ அரசு பாய்ச்சல் வளர்ச்சி என்ற பெயரில் குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று காட்டாயப்படுத்தி.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருக்கும் உடல் வலிமையின் வேறுபாட்டை மறந்தது மட்டுமல்ல மனோ நிலையில் உள்ள வேறுபாட்டையும் மறந்து 8 மணிநேரம் வேலை என்பதை தியாகம் செய்யுங்கள் என்று மிரட்டி 16 மணிநேர வேலைகளை வாங்கி அந்த பெண்களை கசக்கி பிழிந்தார்கள்.
பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவதை அவர்களின் குழந்தைகள் தடுத்து விட கூடாது என்பதற்காக மொத்த உற்பத்தியைப் போல் குழந்தைகளும் மொத்தமாகவே ஒரு இடத்தில் வளர்க்கப்பட்டனர். பெண்களுக்கு பிரசவக் காலத்தின்போது மட்டுமே சிறிது ஒய்வு கொடுக்கப்படும்.
தாயின் பராமரிப்பு இல்லாமல் மொத்தமாக வளர்க்கப்படும் குழந்தைகள்
பெண்களின் உள்விஷயம் வரை கம்யூனிஸ சர்வதிகார அரசு தலையிட்டது உடலுறவுக்கு அதிக நேரம் செலவிடாதீர்கள் ஆலை உற்பத்தி பாதிக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் மிருகத்தனமான பாலுணர்வுத் தூண்டலுக்கு சமூக அமைப்பே காரணம்.பாலுணர்வினைக் கட்டுப்படுத்த நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.பெண்கள் அனைவரையும் தனக்கு நிகரான தோழனாகவே ஒருவர் கருதவேண்டும் என்று கம்யூனிஸம் கற்றுத் தருகிறது என்கிறார்கள். அதனால் தோழனை ஆலையில் வேலை செய்ய விடு என்று உடலுறவுக்கு ரேஷன் முறையை அமல்படுத்தினார்கள்.
ஒவ்வொரு குடிமகளும்,குடிமகனும் என்னென்ன வேலைகளைச் செய்திட வேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்: இதில் அரசாங்கம் உழைப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு கிஞ்சிற்றும் இடம் தருவதில்லை. மனிதர்களின் இலட்சியம் என்னவாக இருந்திட வேண்டும்,மனிதர்களின் செயல்கள்,சிந்தனைகள் எப்படி இருந்திட வேண்டும் எல்லாவற்றையும் முடிவு செய்வது அரசாங்கமே!
இங்கே நாம் தனி மனிதன் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும்,அரசாங்கம் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.
சில நேரங்களில் சர்வாதிகாரியாகச் செயலபடுகின்ற தனிமனிதர், நல்லவராக, இரக்க சிந்தை படைத்தவராக தனது நாடு முன்னேறிய ஆக வேண்டும் என்ற ஆசையை உடையவராக தன்னுடைய மனசாட்சிக்கு பயந்தவராக,இதய சுத்தி உடையவராக சட்டங்களை இயற்றுவதற்கு முன் மக்களை கலந்தலோசிப்பவராக இருந்திட வாய்ப்புண்டு.
ஆனால் அரசாங்கம் சர்வாதிகாரியாக இருக்கின்றபோது மேலே சொன்ன இவைகள் மறந்தும் நடந்திட வாய்ப்பில்லை. இதுபோலத்தான் கம்யூனிஸத்தில் இருக்கும் சர்வாதிகாரமும். ஏனெனில் கம்யூனிஸ அரசாங்கம் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப் படுகின்றது. அது தனது இலக்கை அடைய தான் விரும்பும் திட்டங்களை இரும்பிக் கரம் கொண்டு மக்கள் மீது திணிக்கின்றது இதன் பெயர் தான் ‘கம்யூனிஸ அரசாங்கத்தின் சர்வதிகாரம்’ என்பது.
சர்வதிகாரம் வீழ்ந்து ஸ்டாலின் உருவச்சிலை மாஸ்கோ தெரு குப்பையில்!
இப்போது புரிகிறதா இவர்கள் ஏன் பெண் சுகந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று?
நீங்கள் நல்ல கணவரா?
உங்கள் மனைவியும் நீங்களும் உற்றதுனை என்ற முறையில் வீடு, குடும்பம் குழந்தைகள் இவர்களை நீ பார்த்துக் கொள் வருமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற முறையில் வேலைகளை பகிர்ந்து செயல்படுகிறீர்களா?
அல்லது அப்படி செயல்படக் கூடிய சமூக அமைப்பில் நீங்கள் இருக்கிறீர்களா?
மனைவி வீட்டு வேலையும் பார்த்து அலுவலக வேலையும் ஏன் பார்க்க வேண்டும் அப்படியான தேவை எங்களுக்கு இல்லை என்று இருவரும் சேர்ந்து முடிவேடுத்து நீங்கள் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறீர்களா?
தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஆணாதிக்கவாதி பெண் உரிமையை பறிக்கிறவர் கம்யூனிஸ்ட்களின் உயர்ந்தஇலட்சியமான உற்பத்தியை பெருக்குவதற்காக ஆலைகளுக்கு பெண்களை காட்டுத்தனமாக உழைக்க அனுப்ப மறுக்கும் பெண்ணிய விரோதி.
இறுதியாக ஒரு சவால் விடுகிறேன் இங்குள்ள கம்யூனிஸ்ட்களை பற்றியும் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் தான் உழைக்கிறார்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.இதை அவர்களை மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
வளைகுடா நாடுகளில் உழைக்கும், உழைக்க வந்த கம்யூனிஸ்ட்கள் ஏன் அவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டு பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை பதில் சொல்ல முடியுமா?
கம்யுனிஸ் இயக்கங்களில்/கட்சிகளில் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்கள் பெண்களுக்கு பகிரப்பட்டுள்ளனவா?, எத்தனை பெண் தலைவர்களை கம்யுனிஸ இயக்கங்களில் நாம் கண்டுள்ளோம்?
அட போலி கம்யுனிஸ்ட்களை விடுங்க, தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இயக்கங்களின் தலைமை பொறுப்பை எத்தனை பெண்கள் இதுவரை அலங்கரித்துள்ளனர்? உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என்றால் இதுவரை நாம் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்களில் பெண்களை பார்த்திருக்க வேண்டுமல்லவா?
source: http://valaiyukam.blogspot.com/