உலமாக்கள் என்பவர்களும் அவர்களின் அடையாளங்களும்!
[ நிச்சயமாக அன்று இமாம்களின் வெற்றிக்குக் காரணம் அவர்கள் ஸஹாபாக்களின் பாதையில் நடை போட்டது தான்.]
”நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப் பற்றி அறிந்த) கல்விமான்கள்தான்”. (அல்குர்ஆன் – பாதிர் : 28 )
எனவே ஆலிம் என்பவன் நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சி நடப்பவனாக இருப்பான். அவன் அவ்வாறு தன் இரட்சகனுக்கு அஞ்சி நடக்கையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்ப்பளித்திருக்கும் ஒன்றுக்கு முரணாக தனது தீர்ப்பை அமைத்துக் கொள்ள மாட்டான்.
இமாம்களில் எவரும் தாங்கள் பிறக்கும் போதே இமாமாகப் பிறக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களின் வாழ்வில் சத்தியப் பாதையான ஸஹாபாக்களின் பாதையில் இருந்து அதற்கெனப் போராடியதன் காரணமாகவும் மார்க்கத்தினுள் தங்களின் சொந்தக் கருத்துக்களையும் விளக்கங்களையும் புகுத்தாததன் காரணமாகவும் இன்று வரை அவர்களின் கல்வியும் வழிகாட்டல்களும் இஸ்லாமிய உம்மத்தில் மதிக்கப்படுகின்றது.
அவர்கள் ஸஹாபாக்களின் வழிமுறையைப் பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து ஸஹாபாக்களின் விளக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் பரப்பி அதற்கெதிரான விளக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் மறுப்புகளைக் கொடுத்த மாமனிதர்களாக இருந்ததன் காரணமாகவே இஸ்லாமிய உம்மத் அவர்களை இமாம்கள் என்று மதிப்புடன் அழைக்கிறது.
உலமாக்கள் என்பவர்களும் அவர்களின் அடையாளங்களும்!
الحمد لله رب العالمين والصلاه والسلام على من لا نبي بعده
أما بعد
இன்று இந்த முஸ்லிம் சமூகம் ஆலிம் அல்லது உலமாக்கள் என்ற வார்த்தையை எந்த வரைவிலக்கணத்துடன் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டி அதிலுள்ள தவறான வரைவிலக்கணத்தைத் திருத்தி இந்த உம்மத்திலுள்ள உண்மையான உலமாக்கள் யார் என்பதையும் எடுத்துக் காட்டி உலமாக்கள் பற்றிய உண்மைகளை சமூகத்துக்கு விளக்குமுகமாக ஷெய்க் அபூ அப்துர்ரஹ்மான் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி (ஹபிதஹுல்லாஹ்) அவர்கள் நிகழ்த்திய உரையை வாசகர்கள் எழுத்து வடிவில் பெற்றுக் கொள்வதற்கு எமது சிறிய முயற்சியே இது. அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த எங்கள் உயிரிலும் மேலான இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாவதாக.
அல்குர்ஆனையும் சுன்னாவையும் விளங்கும் விடயத்தில் ஸஹாபாக்களின் விளக்கத்திற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டுமென்று எமது இஸ்லாமிய உம்மத்திற்குப் பல காலமாக நாம் குரல் கொடுத்து வருகிறோம். எமது இந்தக் குரலுக்கு பல திசைகளிலிருந்து மறுப்புகள் வந்திருக்கின்றன.
ஸஹாபாக்களின் விளக்கத்தின் பால் வழிகாட்டும் எமது குரலை மறுக்க வந்தவர்கள் தங்களின் மறுப்புக்கு ஆதாரமாக ஸஹாபாக்களை இழிவுபடுத்துவதையும் அவர்களைக் குறைசொல்வதையும் குற்றம் சுமத்துவதையும் தங்களின் வழிமுறையாக்கிக் கொண்டனர்.
ரஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்திற்குரிய தோழர்களான உத்தம ஸஹாபாக்களின் விளக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் முயற்சி செய்யாமல் அந்த ஸஹாபாக்களின் கருத்துகளில் தவறுகளைத் தேடிப்பிடிப்பது இவர்களுக்கு ஒரு கெட்டித்தனமாக ஆகிவிட்டது.
இன்னுமொரு பக்கம் இன்றுள்ள அனைத்து இயக்கங்களும் வழிகேட்டின் பால் அழைக்கும் தங்களின் தலைவர்களுக்கு உலமாக்களென்று பட்டத்தைக் கொடுத்ததோடு ஸஹாபாக்களின் வழிமுறையில் இருக்கும் இமாம்களையும் உலமாக்களையும் கல்வியைச் சுமந்த சகோதரர்களையும் இன்னும் ஸஹாபாக்களின் பாதையை நோக்கி வழிகாட்டுகின்ற நூல்களையும் சமூகத்துக்கு தரக்குறைவானதாக எடுத்துக் காட்டி அதனை விட்டும் சமூகத்தைத் திசை திருப்புவதற்கு ஓரணியாகக் கைகோர்த்து நின்று உழைப்பதைக் காண முடிகிறது.
இப்போராட்டத்தில் ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற அனைத்து இயக்கங்களும் ஒரே அணியில்தான் செயற்படுகின்றன. இவர்கள் அனைவரும் ஸஹாபாக்களின் வழிமுறையோடு தொடர்பான அனைத்து விடயங்களையும் சமூகத்தின் கண்களிலிருந்து மறைத்து விட்டனர்.
இதன் விளைவாக எமக்கு முன்னால் இந்த பூமியில் மார்க்கத்தைச் சிறப்பாகப் பின்பற்றிய ஸலபுஸ்ஸாலிஹீன்களின் பெறுமதிமிக்க கல்வியும், வழிகாட்டல்களும், நூல்களும் முஸ்லிம்களை நெருங்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர். குர்ஆனையும் சுன்னாவையும் ஸஹாபாக்களின் விளக்கத்தில் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தனிமனித வழிபாட்டில் தான்தோன்றித்தனமாக குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் விளக்கம் கொடுக்க முனைபவர்களுக்கும், தர்க்கவாதப் போக்கில் தங்களின் மார்க்கத்தை விளங்க முற்படுபவர்களுக்கும் உலமாக்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு குறிப்பாகத் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வழிகேடான பாதை வளர்க்கப்பட்டுள்ளது.
இச்சிந்தனைப் போக்கு முஸ்லிம்களின் இரத்தத்தில் கலந்துவிட்டதனால் ஸஹாபாக்களின் குறைகளைத் தேடுவது ஆராய்ச்சியாகிவிட்டது. இவர்களில் சிலர் நாங்கள் ஸஹாபாக்களின் தவறுகளையெல்லாம் பக்கம் பக்கமாக சேர்த்திருக்கிறோம் எனக் கூறி பெருமைப்படுகின்றனர்.
இவர்கள் ஸஹாபாக்களை இழிவுபடுத்தினாலும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹு தஆலா ஸஹாபாக்களைப் பற்றிக் கூறுகிறான்:
رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْاعَنْهُ
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனைப் பொருந்திக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 9;:100)
அல்லாஹ் பொருந்திக் கொண்ட அந்த உத்தம ஸஹாபாக்களின் குறைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் தேடித்திரிகின்றனர். குறிப்பாகத் தமிழுலகில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்களும் அதன் தலைவர்களும் தங்களின் தனிவழிகளை நியாயப்படுத்துவதற்கு ஸஹாபாக்களை இலக்கு வைத்துத் தாக்குகின்றனர். அதற்கான ஆயுதங்களாக ஸஹாபாக்களின் குறைகளையும் தவறுகளையும் தேடி ஆராய்ந்து அதனைக் கொண்டு மன நிம்மதியடைகின்றனர்.
அதே போன்று தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு நான் தவ்ஹீதை எத்தி வைக்க வந்தவன் என்றும் குர்ஆன் சுன்னாவின் பால் வழிகாட்டுகிறவன் என்றும் பித்அத்களையும் ஷிர்க்குகளையும் கண்மூடித்தனத்தையும் அழிக்கிறவன் என்றும் குரல் கொடுக்கும் P.J . ஸஹாபாக்களைப் பற்றிக் கூறுகையில், அந்த ஸஹாபாக்கள் தங்கள் பதவியையும் அந்தஸ்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிக்கொண்டு இரத்தத்தை ஓட்டியவர்களாக இருந்தார்கள்.
ஆனால் நாம் அவர்களைப் போன்று ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிக் கொள்ளவில்லை. எம்மத்தியில் தொப்பி அணிவதிலும் விரலசைப்பதிலும் தான் வேறுபாடு உள்ளதே தவிர ஒருவரையொருவர் கொலை செய்யுமளவுக்கு வேறுபாடுகள் இல்லையே! எனவே சிறப்பானவர்கள் ஸஹாபாக்களா? அல்லது நாங்களா? என்று P.J. கேட்கிறார். இவ்வாறு சொல்பவர் யார்? தன்னைத் தவ்ஹீதின் தலைவரென்று கூறிக் கொள்ளும் மனிதனின் வார்த்தைககள்தான் இவை.
அல்லாஹ் பொருந்திக் கொண்ட. அல்லாஹ்வின் தூதருடைய நேசத்திற்குரிய அந்த ஸஹாபாக்களின் சமூகத்தை உள்ளத்தில் பயமோ வெட்கமோ கூச்சமோ இல்லாமல் இவர் விமர்சிக்க முன்வந்துவிட்டார். இவரது உரைகளில் இவர் எவைகளை ஸஹாபாக்களுக்கு எதிரான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறாரோ அதனைத்தான் இஸ்லாத்தின் எதிரிகளான அந்நியர்களும் இஸ்லாத்தில் குறை சொல்வதற்கு ஆதாரமாக முன்வைத்தார்கள்.
சுருங்கச் சொன்னால் வரலாற்றில் அந்நியர்கள் காட்டிய ஆதாரங்களைக் கொண்டே P.J.யும் வாதிக்கிறார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில் P.J என்பவர் ஒன்றில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் (ஸாலிஹான முன்னோர்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள்) ஒரு எதிரியாக இருக்க வேண்டும். அல்லது அவர்களைப் பற்றி அறியாதவராக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்றாகவே அவர் இருக்க முடியும்.
அதாவது இவர் தனது கல்வியை எங்கிருந்து பெற வேண்டுமென்று அறியாமல் அந்நியர்களினதும் இஸ்லாத்தின் எதிரிகளினதும் நூல்களிலிருந்து பெற்றுக் கொண்டதை வைத்தே ஸஹாபாக்களைக் குறை சொல்கிறார் அல்லது ஸஹாபாக்களின் தரத்தைத் தெரிந்து கொண்டே அவர்களை எதிர்க்கும் எதிரியாக மாறிவிட்டார்.
இதனைத்தான் இமாம் அபூ முஹம்மது அல் ஹஸன் இப்னு அலி இப்னு ஹலப் அல் பர்பஹாரி (றஹிமஹுல்லாஹ்) ஷரஹுஸ் ஸுன்னா என்ற நூலில் கூறுகிறார்கள்.
ஒரு மனிதன் நேர்வழியை விட்டும் வழிதவறிச் செல்வதற்கு இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று அவன் தவறை அது தவரென்று அறியாமல் வழிகெட்டு விடுகிறான். இவனுடைய தவறுகள் வழிகேட்டிற்கு இட்டுச் செல்வதால் அத்தவறுகளை ஏனையவர்கள் பின்பற்ற முடியாது.
இரண்டாவது ஒரு மனிதன் தன் பாதை தவறென்று தெரிந்து கொண்டே சத்தியத்தையும் சத்தியவாதிகளையும் எதிர்க்கும் ஒரு எதிரியாக மாறிவிட்டான். இவன் வழிகெட்டவனும் ஏனையவர்களை வழிகெடுப்பவனும்; இந்த உம்மத்தை ஆட்டிப்படைக்க வந்த ஷைத்தானுமாவான். இப்படியானவர்களை விட்டும் மக்களை எச்சரிப்பது அறிந்தவர்கள் மீது கடமையாகும்.
இமாம் பர்பஹாரி (றஹிமஹுல்லாஹ்) கூறியது போன்று ஒருவன் தான் அறியாமல் தவறான பாதையில் செல்பவனாக இருந்தால் அவனுடைய தவறுகளை நாம் பின்பற்ற முடியாது. எனவே அவனிடமிருந்து எவரும் கல்வியை எடுக்க முடியாது. அதே போன்று ஒருவன் சத்தியத்தை அறிந்து கொண்டே அதனை எதிர்க்கும் ஓர் எதிரியாக இருந்தால் அவனிடமும் நாம் கல்வியையோ உபதேசங்களையோ பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இப்படியான தன்மைகளைக் கொண்டவர்கள்;தான் இன்று தமிழ் பேசும் முஸ்லிம்களின் வழிகாட்டிகளாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்தான் இன்று இஸ்லாமிய உம்மத்திற்கு தவ்ஹீதைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கின்றனர்.
நபித்தோழர்களை இழிவுபடுத்துவதும் இஸ்லாமிய உம்மத் அன்று முதல் பின்பற்றி வருகின்ற ஹதீஸ், பிக்ஹ், வரலாற்று அடிப்படைகளை தங்களின் இஷ்டப்பிரகாரம் மாற்றி அமைத்துக் கொள்வதுமே இந்தக் கூட்டங்களிடம் காணப்படுகின்ற தனித்தன்மையாக உள்ளது. இவர்களால் இந்த இஸ்லாமிய உம்மத் மயக்கப்பட்டு வழிகெட்டுச் செல்வது மட்டுமல்லாது இவர்களுக்கு மக்கள் உலமாக்களென்ற அந்தஸ்தையும் கொடுத்து விட்டார்கள். நிச்சயமாக இதன் உண்மை நிலைப்பாடுகளும் விளைவுகளும் முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துக் காட்டப்பட வேண்டும்.
எமது முஸ்லிம் சமூகம் உண்மையான உலமாக்கள் யாரென்பதை தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். அப்போதுதான் இன்று சமூகத்தில் தங்களை உலமாக்களென்று காட்டிக் கொண்டு ஆடுகின்றவர்களின் உண்மையான நிறத்தை நாம் காட்ட முடியும்.
உலமாக்களைப் பற்றி அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா அவனது வேதத்தில் கூறியிருக்கின்றான்.
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
”நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப் பற்றி அறிந்த) கல்விமான்கள்தான்.” (அல்குர்ஆன் – பாதிர் : 28 )
எனவே ஆலிம் என்பவன் நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சி நடப்பவனாக இருப்பான். அவன் அவ்வாறு தன் இரட்சகனுக்கு அஞ்சி நடக்கையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்ப்பளித்திருக்கும் ஒன்றுக்கு முரணாக தனது தீர்ப்பை அமைத்துக் கொள்ள மாட்டான்.
மனிதர்களில் சிறந்தவர்களென்றும் மனிதர்கள் நேர்வழியை அடைவதற்கு முன்மாதிரியாக எடுத்துப் பின்பற்றப்பட வேண்டிய கூட்டமென்றும் ஸஹாபாக்களின் சமூகத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் நற்சான்று வழங்கி தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அத்தீர்ப்புக்கு முரணாக இன்று தங்களை உலமாக்களென்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த ஸஹாபாக்களைக் குறை சொல்கின்றனர்.
அந்த ஸஹாபாக்கள் எதனையும் ஆராயாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றியவர்களென்றும் அவர்களை நாம் பின்பற்றி அவர்களின் விளக்கங்களை எடுத்தால் நாமும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களாக ஆகிவிடுவோமென்றும் கூறுகின்றனர். அல்லாஹ் பொருந்திக் கொண்டவர்களை இவர்கள் பொருந்திக் கொள்ளத் தயாரில்லை. அல்லாஹ் எடுத்த முடிவை இந்த உலமாக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. ஸஹாபாக்கள் சுமந்த விளக்கம் ஒரு கண்மூடித்தனமென்று சொல்லும் இவர்களுக்கு தங்களின் சுய விளக்கங்கள் கண்மூடித்தனமாகத் தெரியவில்லை. இவர்கள் உண்மையான உலமாக்களென்றால் ஒருபோதும் ஸஹாபாக்களைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள்.
நாம் இஸ்லாத்தின் வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸஹாபாக்களின் காலமாகட்டும் அல்லது அதன் பின் வந்த தாபிஈன்களின், தபஅ தாபிஈன்களின் காலமாகட்டும் அல்லது அதற்குப் பின் வந்த இமாம்களின் காலமாகட்டும் இவ்வனைத்துக் காலங்களையும் கவணிக்கையில் யாரெல்லாம் ஸஹாபாக்களுக்கு விமர்சனம் செய்வதற்கு முன்வந்தார்களோ அத்தகையவர்கள் உலமாக்களென்ற பெயரில் இருந்தாலும் அவர்களை உலமாக்களென்று கல்வியைத் தூய்மையாகச் சுமந்தவர்கள் ஏற்றுக் கொண்டதாக இஸ்லாமிய வரலாற்றில் காண முடியாது.
மாறாக ஸஹாபாக்களை விமர்சித்தவர்களுக்கு ஸின்தீக் (زنديق) என்றும் முல்ஹித் (ملحد) என்றும் வழிகெட்ட பித்அத்வாதியென்றும் பட்டம் கொடுப்பதை அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் உலமாக்கள் வரலாறு நெடுகிலும் தங்களின் வழிமுறையாகக் கையாண்டு வருகின்றனர். உண்மையான உலமாக்கள்தான் ஆலிம் என்பவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.
அதனடிப்படையில் இந்த உம்மத்தின் தலைசிறந்த மதிப்புக்குரிய உலமாக்களான ஸஹாபாக்களை விமர்சிப்பதை தூய கல்வியைச் சுமந்தவர்கள் தாங்கிக் கொள்வதில்லை. ஆனால் இன்றைய காலத்தின் நிலை அபூர்வமாக உள்ளது. ஸஹாபாக்களைத் தரம் தாழ்த்திப் பேசுபவர்களும் அல்லாஹ்வின் பண்புகளை அதன் சரியான வழியில் விளங்காமல் அதன் விளக்கத்தைத் திரிவுபடுத்துபவர்களும் குர்ஆனுக்கு முரணாகக் குர்ஆனையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டி உம்மத்தின் கொள்கையை அழிப்பவர்களும் தனக்குத் தேவை போன்று குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பவர்களும் இன்று உலமாக்களாக ஆகிவிட்டனர்.
எவர்கள் குர்ஆனின் விளக்கத்தை சஹாபாக்களின் விளக்கத்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்களோ அத்தகையவர்கள் மக்களிடத்தில் அறியப்படாதவர்களாகவும் புதினமானவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இதன் காரணம், மக்கள் உண்மையான உலமாக்களை அடையாளம் காணாமல் இருப்பதுதான்.
இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாதவர்களாக இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத், இமாம் புஹாரி, இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கைய்யூம், இமாம் இப்னு கஸீர் (றஹிமஹுல்லாஹ்) போன்றோரும் இன்னும் இந்தப் பட்டியலில் வருகின்ற ஏனையவர்களும் இருக்கின்றனர்.
இவர்கள் இந்த இஸ்லாமிய உம்மத்தில் இன்று வரை மதிக்கப்படுகின்றனர். இஸ்லாமிய உம்மத்திற்கு வழிகாட்டுகின்ற இமாம்களாக இருக்கின்றனர். இவ்வாறானதொரு தரத்தை இவர்கள் அடைந்து கொண்டதன் காரணத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த இமாம்களில் எவரும் தாங்கள் பிறக்கும் போதே இமாமாகப் பிறக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களின் வாழ்வில் சத்தியப் பாதையான ஸஹாபாக்களின் பாதையில் இருந்து அதற்கெனப் போராடியதன் காரணமாகவும் மார்க்கத்தினுள் தங்களின் சொந்தக் கருத்துக்களையும் விளக்கங்களையும் புகுத்தாததன் காரணமாகவும் இன்று வரை அவர்களின் கல்வியும் வழிகாட்டல்களும் இஸ்லாமிய உம்மத்தில் மதிக்கப்படுகின்றது.
அவர்கள் ஸஹாபாக்களின் வழிமுறையைப் பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து ஸஹாபாக்களின் விளக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் பரப்பி அதற்கெதிரான விளக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் மறுப்புகளைக் கொடுத்த மாமனிதர்களாக இருந்ததன் காரணமாகவே இஸ்லாமிய உம்மத் அவர்களை இமாம்கள் என்று மதிப்புடன் அழைக்கிறது.
அவர்கள் அன்றைய காலத்தின் உலமாக்களாக இருந்தது மட்டுமின்றி இன்று நாம் வாழும் காலத்திலும் அன்று அவர்கள் பித்அத்வாதிகளுக்குக் கொடுத்த மறுப்புகளும் பதில்களும் கல்விரீதியாகக் காட்டித் தந்த அடிப்படைகளும் இன்றுள்ள பித்அத்வாதிகளுக்கு நாம் பதிலளிப்பதற்குக் கையாளும் ஆயுதங்களாக மாறிவிட்டன.
நிச்சயமாக அன்று இமாம்களின் வெற்றிக்குக் காரணம் அவர்கள் ஸஹாபாக்களின் பாதையில் நடை போட்டது தான்.
source: http://www.tamilsalafi.edicypages.com/692773205264/ulamaakkal-yaar