Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம்

Posted on November 2, 2011 by admin

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம்

o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

o தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

o இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.]

 ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி!  

உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன் என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம்.

ஏன்? இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன.

எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள்.

கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள். இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகிவிட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை.

டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது.

ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்! சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும்.

பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது.

அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள். ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள்.

சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம்.

அதனால் உடலுக்குள் எண்ணெ அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள்.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை சோம்பேறியாக்கி விட்டது என்றுகூட சொல்லலாம்.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..

o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

o தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

o இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலுடன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது.

மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக்கான அடையாளங்கள்.

திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.

இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது.

அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும். முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

விளக்கம்: டாக்டர் டி. காமராஜ், (பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 77 = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb