[ ஜமாஅத்துத் தொழுகையில் மற்ற ஸஃப்புகளைக்காட்டிலும் முதல் ஸஃப்புக்கு அதிக நன்மை என்று சொன்ன இஸ்லாம், அதிலும் முதல் ஸஃப்பின் வலது பக்கத்தை முன்னிலைப்படுத்துகிறது.
‘நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழு(கப் போ)கும் பொழுது அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்பொழுது அவர்கள் என் தலைமுடியைப் பிடித்து வலப்பக்கமாக என்னை இருக்கச்செய்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூது, திர்மிதீ, நஸஈ)
இறைவேதமாம் திருக்குர்ஆன் வலப்பக்கத்தைப்பற்றி உயர்வாக குறிப்பிடுவதை காண முடிகிறது. ஆம்! நற்காரியங்கள் செய்து மரணிப்பவர்களின் வலது கரத்தில் அவர்களின் பட்டோலை கொடுக்கப்படும் கூறுவதன் மூலம் வலப்பக்கத்தின் உயர்வும் சிறப்பும் இங்கு புலனாகின்றது.]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தம் செய்வதில், தலை வாருவதில், காலணி அணிவதில்ஸ இது போன்ற நற்காரியங்களில் வலது பாகத்தை முற்படுத்துபவர்களாகவே இருந்தார்கள்’ (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வலது கறத்தை சுத்தமான (நற்)காரியங்களுயுக்கும், உணவு(நீர்) அருந்துவதற்கும் புழங்கினார்கள். தனது இடக்கறத்தை மல-ஜலம் கழித்த பின் சுத்தத்தை நீக்கவும், இன்னும் மற்ற அசுத்தங்களை அகற்றவும் புழங்கினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூது)
மனிதர்கள் – முஸ்லிம்கள் தங்களது காரியங்களில் எதில் வலது – இடது என பிர்த்துப் பார்க்க முடியுமோ, அதில் வலது பாகத்தையே முற்படுத்த வேண்டும். உளு செய்யும் சமயம் வாய்க் கொப்பளிக்கின்றோம், அதில் வலது-இடது என பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல முகம் கழுவும்போதும் வலது இடது என்று பார்க்க முடியாது. ஆனால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி, சிந்தும் சமயம் வலது நாசி, இடது நாசி என பிரித்துப்பார்க்க முடியுமென்பதால் முதலில் வலது நாசிக்கு தண்ணீர் செலுத்திய பிறகே இடது நாசிக்கு வரவேண்டும்.
அதுபோன்றே கை–கால்களை கழுவும் சமயம், காலணிகளை அணியும் சமயம், சட்டை அணியும் சமயம், தலைமுடி வாரும்போதும் கூட வலது பக்கத்தையே முற்படுத்த வேண்டும்.
உணவு சாப்பிட, நீர் அருந்த வலது கரத்தையே பயன்படுத்த வேண்டும். வளர்ந்துவிட்ட மேலைநாடுகளில் இடது கையால் சாப்பிடுதல், நீர் அருந்துதல் நாகரீகமான காரியமாக கருதப்பட்டு வருகிறது. அந்த அநாகரீகம் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பாய்ந்து சென்று முஸ்லிம்களிடமும் தொற்றியுள்ளது. இதனை முஸ்லிம்கள் களைய முற்பட வேண்டும். இடது கையால் சாப்பிடுதல், குடித்தல் ஷைத்தானின் செயலாகும்.
(பாத்திரங்களில்) குளிக்கும்போதுகூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலது பகுதியின்மீது மூன்று முறை ஆரம்பமாக தண்ணீர் ஊற்றிவிட்டே இடதுபுறமாக ஊற்றுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும்போது வலது காலையே முற்படுத்துவார்கள். தொழுகையிலிருந்து விடுபடும் சமயம் முதலில் வலது பக்கமே ஸலாம் கொடுப்பார்கள். அவ்வாறே நாமும் பணிக்கப்பட்டிருக்கிறோம்.
நகம் வெட்டும் சமயம், மீசையை கத்திரிக்கும் சமயம், கக்கத்திலுள்ள முடியை நீக்கும் சமயம், தலைமுடியை அகற்றும் சமயம் என அனைத்திலும் வலது பாகத்தையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்படுத்தினார்கள் என்று நபிமொழிகளில் காணமுடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் காலணி (செருப்பு) அணிந்தால் முதலில் வலது காலில் அணியவும். காலணியை சுழட்டினால் முதலில் இடது காலில் சுழட்டவும். அணியும்போது வலது கால் முதலாவதாகவும், சுழட்டும்போது இடது கால் முதலாவதாகவும் ஆகுவதற்காக!’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
‘நீங்கள் ஆடையணியும்பொழுதும், உளு செய்யும்பொழுதும் உங்கள் வலது பாகத்தைக் கொண்டே ஆரம்பியுங்கள்.’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது, திர்மிதீ)
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடி வெட்டுபவரிடம் தனது வலது பாகத்தை காண்பித்து இதை முதலில் வெட்டி விடு’ என்று கூறினார்கள். பின்பு இடது பாகத்திலுள்ள முடியை வெட்டச் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
ஜமாஅத்துத் தொழுகையில் மற்ற ஸஃப்புகளைக்காட்டிலும் முதல் ஸஃப்புக்கு அதிக நன்மை என்று சொன்ன இஸ்லாம் அதிலும் முதல் ஸஃப்பின் வலது பக்கத்தை முன்னிலைப்படுத்துகிறது.
‘நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழு(கப் போ)கும் பொழுது அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்பொழுது அவர்கள் என் தலைமுடியைப் பிடித்து வலப்பக்கமாக என்னை இருக்கச்செய்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூது, திர்மிதீ, நஸஈ)
இறைவேதமாம் திருக் குர் ஆன் வலப்பக்கத்தைப்பற்றி உயர்வாக குறிப்பிடுவதை காண முடிகிறது. ஆம்! நற்காரியங்கள் செய்து மரணிப்பவர்களின் வலது கரத்தில் அவர்களின் பட்டோலை கொடுக்கப்படும் கூறுவதன் மூலம் வலப்பக்கத்தின் உயர்வும் சிறப்பும் இன்கு புலனாகின்றது.
இதோ அந்த திருமறை வசனங்கள்:
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ”இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்”” எனக் கூறுவார்.
”நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.””
ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கiயில் –
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
”சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்). (69: 19 – 24)
ஆகவே வலது கறத்தில் பட்டோலை கிடைக்க, நமது வாழ்வில் அனைத்து நற்காரியங்களிலும் வலது பக்கத்தை முற்படுத்துவோம். அதுவே அல்லாஹ்வும், அவனது தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டிய வழியாகும். அதுவே நாகரீகமான செயல் ஆகும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
– மவ்லவீ, எஃப் ஜமால் பாகவி, நெல்லை