விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி – ஆட்டுவது நபிவழி அல்ல!
பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள, தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் வலது தொடையில் கையை வைத்து சுட்டுவிரலால் சுட்டிக்காட்ட வேண்டும் என அறிவிக்கின்றன. அவைகளில் இரண்டு ஹதீஸ்கள் பின்வருமாறு:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தனது இடது பாதத்தை தனது தொடைக்கும் கணைக் காலுக்குமிடையில் வைத்துக்கொண்டு, வலது பாதத்தை விரித்துக் கொள்வார்கள். தனது இடது கையை இடது முட்டுக்காலில் வைத்துக் கொள்வார்கள், வலது கையை வலது தொடையில் வைத்துக் கொள்வார்கள். தனது சுட்டுவிரலால் சுட்டிக்காட்டுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்-1310)
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தனது வலது கரத்தை வலது தொடையில் வைத்து, எல்லா விரல்களையும் மடித்துக் கொண்டு பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலால் சுட்டிக்காட்டுவார்கள். தனது இடது கரத்தை வலது தொடையில் வைத்துக்கொள்வார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்-1311)
இவ்விரு ஹதீஸ்களிலும் விரலை சுட்டிக்காட்டுவது குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே நபிவழியாகும். விரலை ஆட்டுவது கூறப்படவில்லை. எனவே அது நபிவழியல்ல.
3. விரல் ஆட்டுவதற் குரிய ஆதாரமும் அதற்கான மறுப்பும். விரலாட்டுவதை ஆதரிப்பவர்கள் பின்வரும் ஒரே ஹதீஸையே ஆதாரமாக முன்வைக்கிறார்கள்:
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை அவதானிக்க வேண்டுமென கூறிக்கொண்டு அவதானிக்க ஆரம்பித்தேன் ….பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்து இடது காலை விரிப்பாக்கிக் கொண்டு தனது இடது உள்ளங்கையை இடது தொடை மீதும், முட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீதும் வைத்தார்கள் பின்பு தனது விரல்களில் இரண்டை (நடு விரலையும், பெருவிரலையும்) மடக்கிக் கொண்டு வலையம் போல் அமைத்துக் கொண்டார்கள். பின்பு (சுட்டு) விரலைஉயர்த்தி ஆட்டியவர்களாக பிரார்த்திக்கக்கண்டேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ-1267)
இந்த ஹதீஸில், காணப்படும் “ஆட்டியவர்களாக” என்ற சொல் ஸாயிதா
இப்னு குதாமா என்பவரினால் தவறுதலாக செருகப்பட்தாகும். அதாவது வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகின்ற முறையை வர்ணிக்கிறார்கள். இந்த ஹதீஸை வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து குலைப் என்பார் பெறுகின்றார்கள். குலைப் என்பவரிடமிருந்து, ஆஸிம் )عاصم ) என்பவர் அதே ஹதீஸை பெறுகின்றார்.
ஆஸிம் என்பவரிடமிருந்து இந்த ஹதீஸை 14 பேர் பெறுகிறார்கள். அந்த 14 பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) இருப்பில் சுட்டு விரலால் சுட்டிக் காட்டினார்கள் என 13 அறிவிப்பாளர்கள் கூறுகிறார்கள். 14வது நபராகிய ஸாயிதா பின் குதாமா) என்பவர் மட்டுமே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டுவிரலை ஆட்டினார்கள்; எனக் கூறுகிறார்கள். அதன் அட்டவணை இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.
4. ஸாயிதா என்பவரின் இந்த அறிவிப்பு “ஷாஸ்”; ( ) என்ற தகவல் முரண்பட்ட பலயீனமான ஹதீஸில் அடங்கும். “ஷாஸ்” என்றால் நம்பகமான ஒரு அறிவிப்பாளர், ஞாபக சக்தியில் தன்னைவிட கூடிய ஒருவர் அல்லது எண்ணிக்கையில் கூடியவர்களின் தகவலுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவிப்பதாகும். இவ்வாறு முரண்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த ஹதீஸ் விதிக்கு அமைய, ஸாயிதா என்பவர் தன்னை விட ஞாபகத்திலும், எண்ணிக்கையிலும் கூடிய 13 பேரின் ரிவாயத்துக்களுடன்; முரண்படுகிறார்;. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சுட்டு விரலை ஆட்டினார்கள் என்ற ஸாயிதாவின் ரிவாயத் “ஷாஸ்” என்ற பலயீனமான ஹதீஸ் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினார் என்பதுதான் ஊர்ஜிதமான ரிவாயத் ஆகும். ஸாஇதா என்பவர் தனது ஆசானிடம் பெற்ற “சுட்டிக்காட்டினார்கள”; என்ற சொல்லுக்குப் பதிலாக “ஆட்டினார்கள”; என்ற பதத்தை தவறுதலாக பிரயோகித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரம் ஆட்டுபவர்களாகவும்;, இன்னும் சில நேரங்களில் சுட்டிக்காட்டுபவர்களாகவும் இருந்தார்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் இங்கு ஒரு ஹதீஸை பல அறிவிப்பாளர்கள் வேறுபட்டமுறையில் அறிவித்திருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்க வேண்டுமே தவிர இரண்டையும் எடுக்க முடியாது. ஆனால், ஒரே ஹதீஸாக இல்லாது, இரண்டு ஸஹாபிகள் மூலமாக இரண்டு ஹதீ ஸ்கள் வந்திருந்தால் இரண்டு முறைகளும் (ஆட்டுதலும், சுட்டிக்காட்டுதலும்) ஆகும் எனக் கூறலாம். ஆனால், இங்கு அவ்வாறல்ல. ஒரு ஸஹாபி அறிவித்த ஹதீஸை 13 பேர் ஒரு விதமாகவும், ஒரு நபர் வேறுவிதமாகவும் அறிவிக்கிறார்கள். எனவே இரண்டில் ஒன்றை மட்டும் தான் எடுக்க வேண்டும். (பார்க்க: )
இந்த அடிப்படையில் “சுட்டிக்காட்டினார்கள்” என்பது ஊர்ஜிதமான அறிவிப்பும் “ஆட்டினாhகள்” என்பது பலவீனமான அறிவிப்புமாகும் சுட்டிக்காட்டுவதை ஊர்ஜிதப்படுத்தும், ஆட்டுவதை பலயீனப்படுத்தும் மேலதிக ஆதாரங்கள்….
சுட்டிக்காட்டுவதை பின்வரும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
1. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழும் 5முறையை விபரித்து அறிவிக்கும் ரிவாயத்துகளில் சுட்டிக்காட்டுதல் ( ) என்ற சொல்லே காணப்படுகிறது. அந்த ரிவாயத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஹதீ ஸ் கலை வல்லுனர்கள் உற்பட பெரும்பாலான அறிஞர்கள் அத்தஹிய்யாத்தில் சுட்டிக்காட்ட வேண்டுமென்றே கூறியுள்ளனர்.
2. வாயில் இப்னு ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீ ஸின் அறிவிப்பில்”பிரார்த்திப்பதற்காக தங்களது விரலை நாட்டினார்கள”; ( ) எனக் காணப்படுகிறது. (நஸாஈ: 1158, முஸ்னத் அல்-ஹுமைதி: 648,) ஆட்டுவதை ஆதரிப்பவர்கள் “நாட்டினார்கள்”என்ற அறிவிப்பிற்கு விடை கூறாமல் நழுவிக்கொள்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பிலும் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாட்டினார்கள”; என்றே வந்துள்ளது.(அத்-தாரிமி: 1313)
இவ்வறிவுப்புக்கள் மூலம் பலம் பெரும் ஹ{பாப் இப்னு ஈஃமா ( خفاف ايماء بن) ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் பலயீ னமான ஹதீஸ் ஒன்றிலும் நாட்டினார்கள் எனக்காணப்படுகிறது. (பார்க்க: முஸ்னத் அஹ்மத்-16572, முஸ்னத் அபீ யஃலா-908, அத்தபரானி-4176, மஜ்மஃ அஸ்-ஸவாஇத்-2843)
3. ஸாயிதா அவர்கள் தவறுதலாக அறிவிக்கும் ரிவாயத்தில் காணப்படும் ஆட்டினார்கள் என்ற சொல், ஊர்ஜிதமான வேறு எந்த அறிவிப்பிலும் கிடையாது.
4. முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபிஈன்கள் ஆகியோர்களில் எவராவது அத்தஹிய்யாத்தில் விரலாட்டியதாக ஊர்ஜிதமானதகவல்கள் எதுவும் கிடையாது. சுட்டிக்காட்டுதல் என்ற சொல்லில் ஆட்டுதல் என்ற கருத்து உள்ளதா?
சிலர் சுட்டிக்காட்டும் போது சில நேரங்களில் ஆட்டமும் ஏற்படலாம் என்றும் ஹதீஸில் காணப்படும் சுட்டிக்காடடுதல் என்ற சொல்லுக்கு ஆட்டுதல் என்ற ;கருத்தை வழங்கலாம் என்றும் வாதிடுகின்றனர்.; இந்த வாதம் தவறானதாகும். ஏனெனில் சுட்டிக்காட்டுதல் என்ற சொல்லில் அடிப்படையாக ஆட்டுதல் என்ற பொருள் கிடையாது. சில நேரங்களில் ஆட்டுதல் என்ற பொருள் சேர்ந்து கொள்ளும் என்றால், அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலை ( ) இருக்க வேண்டும். அச்சந்தர்ப்பம் இங்கே கிடையாது. ஏனென்றால் தொழுபவர் அத்தஹிய்யாத் (தஷஹ்ஹ{த்) இருப்பில், முழங்காலில் மணிக்கட்டை வைத்து பெருவிரல், சுட்டுவிரல் தவிர ஏனைய விரல்களை மடித்து பெரு விரலை சுட்டு விரலின் கீழ் வைத்து சுட்டிக்காட்டும் போது ஆட்டுதல் என்பதற்கு இடம்பாடு இல்லை.
ஆட்டுவதாயின், சுட்டிக்காட்டினார்கள், ஆட்டினார்கள் என்று இரண்டும் ஒரே ரிவாயத்தில் கூறப்பட வேண்டும். அவ்வாறு இங்கு கூறப்படவில்லை. எனவே சுட்டிக்காட்டினார்கள் என்பதுடன், ஆடடுதல் ; இங்கே ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. விரலை ஆட்ட வேண்டும் எனக்கூறிய பிற்காலத்து அறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்ற ரிவாயத்தை தங்களது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை என்பது, சுட்டிக்காட்டினார்கள் என்பதற்கு ஆட்டினார்கள் என்ற கருத்து கிடையாது என்பதற்கு நல்லதொரு சான்றாகும்
ஹதீஸ் கலை அறிஞர்கள் தங்களது நூற்களில் அத்தஹிய்யாத்து சம்பந்தமாக தலைப்புக்கள் இடும்போது, சுட்டிக்காட்டுதல் வேறு, ஆட்டுதல் வேறு என்றே வேறுபடுத்திக்காட்டி உள்ளனர். உதாரணமாக இமாம் நஸாஈ (றஹ்) அவர்கள் பின்வருமாறு தலைப்பிட்டிருக்கிறார்கள்:
சுட்டிக்காடடும் பொழுதும், சுட்டு விரலை ஆட்டும் பொழுதும் பார்வை இருக்கவேண்டிய இடம்
இங்கே இமாம் நஸாஈ அவர்கள் சுட்டிக்காடடுதல் வேறு, ஆட்டுதல் வேறு என்பதை தெளிவு படுத்தியுள்ளார்கள்.
மேலும் இமாம் இப்னு ஹுஸைமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு தலைப்பிட்டிருக்கிறார்கள்:
….சுட்டுவிரலால் சுட்டிக்காட்டும் பொழுது அதை ஆட்டுதல்
இங்கே இமாம் இப்னு ஹ{ஸைமா அவர்கள் சுட்டிக்காட்டுதல், ஆட்டுதல் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள்.
மேலும் இமாம் நவவி அவர்கள் ஷர்ஹுல் முஹத்தப் -2ஃ454 என்ற நூலில் அத்தஹிய்யாத் சம்பந்தமாக பேசும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்கள்:
சுட்டிக்காட்டி உயர்த்துமிடத்தில் விரலை ஆட்ட வேண்டுமா?
இங்கே இமாம் நவவி அவர்கள் சுட்டிக்காட்டுதலையும், ஆட்டுவதையும் வேறு படுத்திக் கூறியுள்ளார்கள்.
ஹதீஸுக்கு நகைச்சுவையான மொழி பெயர்ப்பும் அதற்குறிய மறுப்பும் விரலாட்டுவதை ஆதரிக்கும் தமிழ் நாட்டு சகோதரர் ஒருவர் விரலாட்டினார்கள் எனக்கூறும் பலயீனமான ஹதீஸில் காணப்படும்
7. வாக்கியத்துக்கு தவறான மொழி பெயர்ப்பை வழங்கியுள்ளார். அதை சில மத்ரஸா மாணவர்களும் நம்பி ஏமார்ந்துவிட்டார்கள். அதாவது மேற்படி
ஸதீஸில் காணபப்படும் ” بها يدعو ” என்ற வாக்கியத்திற்கு “(யாரையோ) அழைப்பது போன்று” என மொழிபெயர்த்துள்ளார்கள். இது மாபெரும் தவறாகும். இது அவரின் அறபுப் பாஷை பற்றிய அறிவின்மையையும், ஹதீஸின் ஏனைய ரிவாயத்துகள் பற்றிய அறிவின்மையையும் அப்பட்டமாக்குகின்றது.
بها يدعو என்ற வாக்கியம் “சுட்டுவிரலால் பிரார்த்தித்தவர்களாக” என்றுதான் மொழி பெயர்க்கப்பட வேணடும். அதற்குறிய ஆதாரங்கள்
பின்வருமாறு :
1. இமாம் நஸாஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அறிவிப்பில் (பிரார்த்தனைக்காக தனது விரலை நாட்டினார்கள்) என்றும் இமாம் ஹுமைதி அவர்களின் ரிவாயத்தில் ” “(இவவாறுதான் பிரார்த்தித்தார்கள் எனக்கூறி ஹுமைதி சுட்டுவிரலை நாட்டினார்கள் என்றும் காணப்படுகின்றது.
2. அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் என்பவரின் அறிவிப்பில் (பெருவிரலுக்கு அடுத்த விரலை உயர்த்தி அதைக்கொண்டு பிரார்த்தித்தவர்களாக) எனக்காணப்படுகிது.
3. இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் (பெருவிரலுக்கு அடுத்த விரலை உயர்த்தி அதைக்கொண்டு பிரார்த்தித்தார்கள் எனக் காணப்படுகிறது. (முஸ்லிம்-1309).
இவைகளிலிருந்து என்ற சொல்லுக்கு பிரார்த்தித்தவர்களாக என்ற கருத்தே தவிர யாரையோ அழைப்பது போல் என்ற அர்த்தம் அல்ல.
source: ”விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி ஆட்டுவது நபிவழி அல்ல”
நூலாசிரியர்: கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.d.), தலைவர்- தாருல் ஹதீஸ், உதவிப்பேராசிரியர் மன்னர் காலித் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா.
வெளியீடு: தாருல் ஹதீஸ், கொழும்பு, இலங்கை.
source: http://www.islamkalvi.com/downloads/atthahiyat_isaarah_by_dr_ashraf.pdf