ஒரு சிக்கல் இரண்டு பரிகாரம்!
மௌலானா வஹீதுத்தீன் கான்
அன்றைய நாட்களில், அச்சு இயந்திரம் வருகை முன், மக்களிடையே நினைவாற்றல் அதிகம். ஆயிரக்கணக்கான சஹாபிகள் குர்ஆன் மனனமிட்டவர்கள் ஒருங்கிணைய முடிந்தது. செல்போன் கையில் வந்தது. நினைவுகளில் தொலைபேசி எண் வரமறுக்கிறது.
முன்பு பல தொடர்பு எண்கள் மனனம். எந்த வசதியை, மூளையின் ஒரு பகுதியை பயன்படுத்திகிறோமோ அதன் சக்தி, ஆற்றல் அதிகரிக்கும். ஸாபித் (ஃதாபித்) அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு நினைவாற்றல் மிகுந்தவர். எலும்பு, இலை, தோல் மீது எழுதப்பட்டதை கொண்டுவரச் சொன்னார். அனைத்தும் கிராஸ் செக் பரிசீலிக்கப்பட்டது. மனதில் பதிவானதை ஒப்பீடு செய்தனர்.
ஒரு ஹதீஸில் வருகிறது இரண்டு ஆயத்துகள் கிடைக்கவில்லை. எந்தப் பொருள் மீதும் எழுதப்படவில்லை. ஆனால், நினைவாற்றல் நெஞ்சில் பாதுகாப்பாயிருந்தது. இரண்டு ஆயத்துகள் காணாமல் போய்விட்டதாக அர்த்தம் கற்பிக்கக்கூடாது.
‘‘டபுள் செக்சிஸ்டம்’’ இரண்டடுக்கு பரிசீலிப்பு மூலம் முழு குர்ஆன் சரிபார்க்கப்பட்டது. எழுதி பாதுகாத்தனர். பைண்டிங் வடிவமைத்தனர். பின்னர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு பிரதிகள் எடுத்தார். ஷாம், எகிப்து அனுப்பி வைத்தார்.
நுக்தா அப்போது கிடையாது. அதனை இப்போது கிடைத்தாலும் படிக்க இயலாது. அரபி, உருது மொழி தெரிந்தவர்கள் நுக்தா இன்றி படிக்க வாசிக்க முடியும். அரபிமொழியில்லாத நாடுகள் வெவ்வேறு விதமாக படித்தனர். மாலிக் கி யவ்மத்தீன். மீம் அலிஃப் இன்று. முன்பெல்லாம் மீம் லாம் காஃப், மூன்றெழுத்துக்கள் மட்டும் எழுதுவர். முல்க், மில்க், மலிக், மலக், மாலிக் உச்சரித்தனர்.
நுக்தா இல்லாமல் ஒரே சொல்லை பலவாறு உச்சரிக்கலாம். குல் அவூது பிரப்பின்னாஸ் சில அரபி கூட்டத்தினர் குல் அவூது பிரப்பின் னாத் அதாவது ஸீன் பதிலாக தே. மலிக்கின்னாத். அதே பாணியில் காஃப் எழுத்தை ஸீன் உச்சரித்தனர். அதனால் சின்னஞ்சிறிய பதிவுகள் எரிக்கப்பட்டன.
ஹதீஸ் துணையின்றி குர்ஆனை புரிந்துக் கொள்ள இயலாது. சூரா 94, வசனம் 5&6 நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. பிராப்ளம் இருக்கும் இடத்தில் வாய்ப்பு, தீர்வு இருக்கும். ஏன் இரண்டு தடவை ஆயத் வருகிறது. ஒரு பிராப்ளம் இரண்டு வாய்ப்பு, தீர்வுகள் நபிகளார் நம்பிக்கை, துணிவு ஊட்டுகிறார். சிரமம் இயற்கையானது. வரத்தான் செய்யும். ஆனால் அல்லாஹ் பரிகாரம் இருமடங்கு தருவான். துன்பத்தை கண்டு விரக்தியடையக் கூடாது. தைரியம், துணிச்சல் வேண்டும்.
அஸ்ஸுல்ஹு கைர் சூரா 4, ஆயத் 128 அமைதி வழி மேலானது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் நபிகளார் முன் இரண்டுவகை தீர்வு இருந்தால் எளிதானதை தேர்ந்தெடுப்பார். அமைதி வழி, வன்முறை வழி. முரண்பட்ட தீர்வு. சமாதானம் சாலச்சிறந்தது. லேசானது. உங்கள் முன் எவ்வளவு குழப்பம் போராட்டம், சிக்கல் இருந்தாலும் இந்த ஹதீஸ் வழிகாட்டும்.
ஒன்று ஆன்மீகம் இன்னொன்று நடைமுறை அனுபவ ஆன்மீகம். அனுபவ இஸ்லாம் ஹதீஸ் ஒளியில் கிடைக்கும். ஹதீஸ் இல்லாமல் இஸ்லாத்தை பின்பற்ற முடியாது. ஹதீஸ் நூற்களில் பலவீன, ஆதாரமற்ற ஹதீஸ்கள் இருப்பதாகக் கூறி ஹதீஸ்களை புறக்கணிக்கக் கூடாது. நேரடியாக குர்ஆனை பின்பற்ற வாதிடுகின்றனர். நீங்கள் சஹீஹ் ஹதீஸை பின்பற்றுங்கள். ஹதீஸ் உதவியுடன் குர்ஆன் ஞானம் பெறுவோம்.
தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம்.
ஆகஸ்ட் 2011 முஸ்லிம் முரசு