சுயபரிசோதனை :
உங்களது நிலை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:
கணவனைத் திருப்தி செய்வதில் நான் என்னுடைய மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றேன்
என்னுடைய குடும்பத்திற்கு இஸ்லாமிய வழிமுறைகளைக் கொண்டு வழி நடத்துகின்றேன்.
குர்ஆனையும், நபிமொழிகள் (ஹதீஸ்களை)யும் நான் விரும்பி வாசிக்கின்றேன்.
என்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதிக்கின்றேன்.
என்னுடைய கணவனுக்காக என் அழகைப் பராமரித்து வருகின்றேன்.
இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளுக்குரிய விடைகளை வழங்குவதில் என்னுடைய குழந்தைகளுக்கு உதவுகின்றேன்.
இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இடைவிடாது முயற்சித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், நான் கற்றவற்றை என்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றேன்.
என்னுடைய தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுகின்றேன்.
நான் என்னுடைய கணவனை அதிகம் நேசிப்பதாகக் கூறுகின்றேன்
தேவைப்படும்பொழுது என்னுடைய கணவருக்கு அறிவுரைகளை வழங்குகின்றேன்
என்னுடைய கணவருடைய குறிக்கோள்களை அடைவதற்கு உற்சாகத்தையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றேன்.
என் கணவரது முயற்சிகளை நான் மதிக்கின்றேன், பாராட்டுகின்றேன் என்பதை அவருக்கு நான் உணர்த்தி வருகின்றேன்.
என்னுடைய நாணத்தை பொது மக்கள் மத்தியில் பாதுகாத்து வருகின்றேன்.
சுன்னத்தான தொழுகைகளைப் பேணி வருகின்றேன்.
ரமளான் மாதத்து நோன்புகளை நோற்று வருகின்றேன். அதில் தவறிய நோன்புகளையும் நான் பின்பு ‘களா”வாக நோற்கின்றேன்.
ரமளான் தவிர்த்து, விரும்பத்தகுந்த நோன்புகளையும் (சுன்னத்தான, நபிலான) நோற்று வருகின்றேன்.
பிறர் தூங்கக் கூடிய நேரத்தில் நான் எழுந்து தொழுகின்றேன்.
நபித்தோழியர் – நமக்கவர்கள் முன்மாதிரிகள் :
உங்களில் யாராவது இறையச்சமிக்க மனைவியாக வாழ விரும்புகின்றீர்கள் என்றால், அதற்கு உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழியரை மிகச் சிறந்த உதாரணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நபித்தோழியரது நடைமுறைகள் மற்றும் அவர்கள் அடைந்த சாதனைகளைப் பற்றி கற்றுணர்ந்து, அவர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்து காட்டிய பண்புநலன்கள், மிகச் சிறந்த நன்மக்களாகப் பரிணமித்துக் கொள்வதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஆய்வு செய்து பார்த்து, அதனைப் பின்பற்றுதவற்கு உச்சபட்ச முயற்சிகளைக் காட்ட வேண்டும். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, கீழ்படிந்த வாழ்க்கையை வாழ்வதற்கு – அமைதி, தான தர்மங்கள், சுய அர்ப்பணிப்பு இவை போன்றவற்றின் மூலம் இறைவனுக்கு உகந்த நல்லடியாளாக மாறுவதற்கு முயல வேண்டும்.
குறிப்பாக: அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பக்கபலமாக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பக்கபலமாக அஸ்மா பின்த் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், அபு தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்புலமாக உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இருந்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், ஃபிர்அவ்னுடைய மனைவி அஸியா அவர்களையும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், நபித்தோழியரில் இவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பான நபித்தோழியர்; வேறு எவரும் இல்லை: கதீஜா பின்த் குவைலித் ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா சித்தீக்கா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா…. இவர்களில் சிலரது பெயரைத் தான் நாம் இங்கே தந்திருக்கின்றோம். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தந்திருக்கும் வாக்குமூலத்திற்கு உரித்தானவர்களாக இவர்கள் இருந்தார்கள் :
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.” (அல்குர்ஆன் 3:110)
இன்னும் மற்றுமொரு வசனத்தில் இறைத்தூதரை முதன் முதலாகப் பின்பற்றிய அந்த ஆண்களையும், பெண்களையும் குறித்தும், அவர்கள் தன்னுடைய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகச் சரியாகவும், முழுமையாகவும் பின்பற்றியது குறித்தும் இவ்வாறு கூறுகின்றான்;
“இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.” (அல்குர்ஆன் 9:100)
நபித்தோழியர்களின் பண்புகள், பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் இறைவனால் சாட்சியமளிக்கப்பட்டிருக்கின்றது மற்றும் இறைவன் அவர்களை மிகச் சிறந்த சமுதாயமாக ஒப்புக் கொண்டிருக்கின்றான். மேலும் அவர்களுக்காக சுவனத்தை அலங்கரித்துத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் தன்னுடைய திருமறையிலே வாக்குறுதியும் அளித்துள்ளான், மேலும் இவர்களை யார் யாரெல்லாம் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கும் அந்த சுவனபதிகள் உண்டு என்பதையும் நமக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றான்.
நம்மில் யாருமே நம்முடைய பணிகள் விழலுக்கு இறைத்த நீராக மாற ஆசைப்படுவோமா? இறைவன் நம்மை எவ்வாறு அவனை வணங்க வேண்டும் என்று பணித்திருக்கின்றானோ அவ்வாறு அவனை வணங்கி, அந்த மறுமை நாளிலே அவனைச் சந்திக்கின்ற பொழுது அவனது நல்லடியார்களாக நாம் அவனது திருமுன் நிற்பது குறித்தும், அவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட சமுதாயமாக அவன் முன் நிற்பது குறித்தும் யாராவது விருப்பம் கொள்ளாமல் இருப்போமா?
உண்மையிலேயே நீங்கள் இறைவனால் விரும்பப்படக் கூடிய மக்களாக மாற வேண்டுமெனில், நமக்கு முன் சென்று விட்ட உதாரணங்களாகத் திகழக் கூடிய அந்த நபித்தோழியர்;, நபித்தோழர்களுடைய வாழ்வை நாம் முன்மாதிரியாகக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் அல்லவா : அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; ..
எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இறையச்சமுள்ள பெண்மணியாக, மனைவியாக மாறுவதுதான்.
source: http://www.a1realism.com/TAMIL/specialty/makeup%20for%20muslim%20women.ht