M U S T R E A D
[ வேதக்காரர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் முஸ்லிம்கள் செவியேற்க வேண்டியுள்ள அவதூறுகள் அதிகமாக இருக்கும் என அல்லாஹ் கூறியுள்ளான். முஸ்லிம்களின் இஸ்லாமிய அழைப்பைக் கேவலப்படுத்தவும் அவர்களின் நற்பண்புகளையும், அழகிய நடைமுறைகளையும் சந்தேகத்துக்கிடமானதாக ஆக்கவும், அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்போர் கருத்துப்போர் ஒன்றைப் பிரகடனம் செய்வார்கள்.
கருத்துப் போரில் முஸ்லிம்கள் தக்வாவை இழந்துவிடக் கூடாது. எதிரிகள் அவதூறுகளை அள்ளி வீசும்போது நாமும் அந்த ஆயுதத்தை ஏந்திவிடக்கூடாது. தக்வா என்பதன் பொருள் இங்கே இதுதான். அவதூறுக்கு அவதூறை பதிலாக்க வேண்டாம். ஏனெனில் ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நற்பண்புகள் என்ற உயர்ந்த பீடத்திலிருந்து கீழிறங்கிவிட மாட்டார்கள்.
கடந்துபோன வரலாறும், நிகழ்காலச் செய்தியும் இதை நமக்கு உறுதி செய்கின்றன. வேதக்காரர்களான யூதர்கள் குரைஷ், நுத்ஃபான், இன்னபிற சிi வணங்கிகளோடு இணைந்து கொண்டு அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக களமிறங்கினார்கள் அல்லவா? இதுபோல் வரலாற்று நிகழ்வுகள் நிறைய உள்ளன.
இக்காலக்கட்டத்தில் உலகில் வாழ்கின்ற யூதர்களும், கம்யூனிஸ்ட்களும், கி0ழக்கத்திய மேற்கத்திய சிலுவை வணங்கிகளும் தங்களுக்குள் கடும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் இஸ்லாத்தை எதிரியாக ஏற்பதில் ஒன்றிணைந்துவிடுகிறார்கள் அல்லவா? அனைவரின் குரலும் இஸ்லாத்துக்கு எதிராக ஒரே மாதிரி ஒலிக்கிறதே!]
அவதூறே இன்றைய எதிரிகளின் ஆயுதம்
முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களுக்கும் அவர்களுடனிருந்த நம்பிக்கை கொண்டோருக்கும் தொல்லைகள் இடைவிடாது அடுத்தடுத்து வந்தன. இவர்களை சிரமங்களில் சிக்க வைத்து எதிரிகள் சுகம் காண்பது தொடர்கதையானது. அல்லாஹ்வின் உதவி வந்துவிடாதா? அது எப்போது வரும்? என ஏங்கித்தவிக்கும் அளவுக்கு இன்னலுக்கு உள்ளாயினர்.
உஹதுப்போரில் முஸ்லிம்கள் கடும் சோதனைக்குள்ளாயினர். எழுபது முஸ்லிம் வீரர்கள் உயிர்நீத்து ஷஹீதானார்கள். அப்போது அல்லாஹ் என்ன கூறினான் தெரியமா?
‘உங்களில் அல்லாஹ்வுக்காகப் போரிடுபவர்களையும் பொறுமையைக் கடைப்பிடிப்போரையும் (சோதித்து) அல்லாஹ் அறிந்து கொள்ளாமல் சுவர்க்கத்திற்குள் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா?’ (அல்குர்ஆன் 3: 142)
மேலும் கூறுகிறான்;
‘அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் தவிர வேறு எவரையும் அந்தரங்க நண்பராக்கிக் கொள்ளாமல் (அல்லாஹ்வுக்காகப்) போரிடுபவர் யார் என அறிந்து கொள்ளாமல் நீங்கள் விடப்படுவீர்கள் என எண்ணிக் கொண்டீர்களா?’ (அல்குர்ஆன் 9: 16)
இந்த இடத்தில்தான் பிரச்சனைகளை எதிர்கொள்வோர் இரு விஷயங்கள் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
1. பொறுமை,
2. தொழுகை.
‘ஓரிறை நம்பிக்கை கொண்டோரே! பொறுமையின் மூலமும் தொழுகையின் மூலமும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.’ (அல்குர்ஆன் 2: 153)
மேலும் அல்லாஹ்வின் பாதையில் நிகழ்ந்த யுத்தங்களில் ரத்த சாட்சிகளாக – ஷஹீதுகளாக – அல்லாஹ் யாரை ஏற்றுக்கொண்டானோ அவர்களை நினைத்து வருந்தியவர்களுக்கு அடுத்த வசனத்தில் தேறுதல் கூறுகிறான் அல்லாஹ்:
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை (ஷஹீதுகளை) இறந்துவிட்டவர் எனக்கூறி(அங்கலாய்த்தி)ட வேண்டாம். அவர்கள் உயிருடன்தான் உள்ளனர். எனினும் நீங்கள் அறியமாட்டீர்கள்.’ (அல்குர்ஆன் 2: 154)
அடுத்த வசனத்தில் மனிதன் வாழ்வில் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வகை வகையான சோதனைகளை வரிசைப்படுத்துகிறான்.
‘நம்பிக்கையாளர்களே! சிறிதளவு அச்சத்தாலும் பயத்தாலும் இன்னும் பொருள்கள், உயிர்கள், கனிவகைகள் ஆகியவற்றின் நஷ்டத்தாலும் நாம் உங்களை நிச்சயாக சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நபியே நல்வாழ்த்துக் கூறுவீராக. தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 3: 155, 156)
உங்களை அச்சத்தாலும், வயிறுகளை பசியாலும், பொருள்களை நஷ்டத்தாலும், உயிர்களை மரணத்தாலும், விளைச்சல்களை ஆபத்துகளாலும் சோதிப்பது பொதுவானதே. எனினும் இதிலும்கூட அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் கருணை இருக்கவே செய்கிறது. 2: 155 வசனத்தில் உள்ள ‘ஷய்இன்’ என்பதன் பொருள் ‘சிறிதளவு அற்பமான’ என்பதாகும். அதிகமான, கடுமையான சோதனைகளை மனிதனால் தாங்க இயலாது என்பதால் சிறிதளவு சோதனை மட்டும் தருவது அல்லாஹ்வின் பேரருளன்றி வேறில்லை. கடும் சோதனையைத் தந்தாலும் அவனிடம் யார் எதிர்க்கேள்வி கேட்க இயலும்?
2: 155 வசனத்தில் சத்தியம் செய்யும்போது உறுதிக்காகப் பயன்படுத்தப்படும் ‘லாம்’ என்ற எழுத்தையும் ‘ன்ன’ என்ற எழுத்தையும் கொண்ட வாசக அமைப்பின் மூலம் உறுதியாக நாம் உங்களைச் சோதிப்போம் (வல நப்லுவன்னகும்)என்று அல்லாஹ் கூறியிருந்தான்.
அதைப்போன்ற அழுத்தம் திருத்தமான வாசகங்களைக் கொண்டே பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறுகின்றான்:
‘உங்களின் உயிர்களிலும், பொருள்களிலும் நிச்சமாக நீங்கள் சோதனைக்குள்ளாக்கப் படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான தொல்லைகளை (அவதூறுகளை) நிச்சயமாக நீங்கள் செவியேற்பீர்கள். பொறுமையுடனும், இறையச்சத்துடனும் நீங்கள் இருந்தால் (வெற்றி உங்களுக்குத்தான்). ஏனெனில், நிச்சயமாக அது வீரமான விஷயங்களில் உள்ளதுதான்.’ (அல்குர்ஆன் 3: 186)
இவ்வசனத்தில் நாம் கருத்தில் கொண்டு விழிப்புணர்வு பெற வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
ஒன்று: வேதக்காரர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் முஸ்லிம்கள் செவியேற்க வேண்டியுள்ள அவதூறுகள் அதிகமாக இருக்கும் என அல்லாஹ் கூறியுள்ளான். முஸ்லிம்களின் இஸ்லாமிய அழைப்பைக் கேவலப்படுத்தவும் அவர்களின் நற்பண்புகளையும், அழகிய நடைமுறைகளையும் சந்தேகத்துக்கிடமானதாக ஆக்கவும், அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்போர் கருத்துப்போர் ஒன்றைப் பிரகடனம் செய்வார்கள் என்பதையே அவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
புனைவும், அவதூறும், திரித்தலும்தான் இந்தப் போரின் ஆயுதங்கள். இதன் சிரமங்களை முஸ்லிம்கள் மன உறுதியோடு ஏற்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் உண்மையை நிலைநாட்டி அசத்தியத்தை வீழ்த்தும்வரை இந்தச் சிக்கலைப் பொறுமையுடன் விழுங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு: அவ்வசனத்தில் அல்லாஹ் பொறுமையை மட்டும் கூறவில்லை. தக்வா – இறையச்சத்தையும் இணைத்தே கூறுகிறான். கருத்துப் போரில் முஸ்லிம்கள் தக்வாவை இழந்துவிடக் கூடாது. எதிரிகள் அவதூறுகளை அள்ளி வீசும்போது நாமும் அந்த ஆயுதத்தை ஏந்திவிடக்கூடாது. தக்வா என்பதன் பொருள் இங்கே இதுதான். அவதூறுக்கு அவதூறை பதிலாக்க வேண்டாம். ஏனெனில் ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நற்பண்புகள் என்ற உயர்ந்த பீடத்திலிருந்து கீழிறங்கிவிட மாட்டார்கள்.
மூன்று: வேதக்காரர்கள் (யூதர், கிறிஸ்தவர்), அரபுலகச் சிலை வயங்கிகள், அவர்களையொத்தவர்கள் அனைவரையும் சேர்த்தே அவ்வசனம் நமக்கு முன்னிறுத்துகிறது. அவர்களின் மார்க்கமும், கொள்கையும் வேறு வேறாக இருந்தாலும் முஸ்லிம்களை எதிர்ப்பதில் அவர்களை; ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை அவ்வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
கடந்துபோன வரலாறும், நிகழ்காலச் செய்தியும் இதை நமக்கு உறுதி செய்கின்றன. வேதக்காரர்களான யூதர்கள் குரைஷ், நுத்ஃபான், இன்னபிற சிi வணங்கிகளோடு இணைந்து கொண்டு அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இக்காலக்கட்டத்தில் உலகில் வாழ்கின்ற யூதர்களும், கம்யூனிஸ்ட்களும், கி0ழக்கத்திய மேற்கத்திய சிலுவை வணங்கிகளும் தங்களுக்குள் கடும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் இஸ்லாத்தை எதிரியாக ஏற்பதில் ஒன்றிணைந்துவிடுகிறார்கள் அல்லவா? அனைவரின் குரலும் இஸ்லாத்துக்கு எதிராக ஒரே மாதிரி ஒலிக்கிறதே.
‘ஏக இறைவனை மறுப்பவர்கள் ஒருவர் மற்றவரின் நண்பர்கள்தான்’ (அல்குர்ஆன் 8: 73)
‘நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் ஒருவர் மற்றவரின் நண்பர்கள்தான்’ (அல்குர்ஆன் 45: 19) ஆகிய வசனங்களும் இதையே கூறுகின்றன. இதனால்தான் மார்க்க அறிஞர்கள் அடித்துக் கூறினார்கள் ‘இறைமறுப்பு அனைத்தும் ஒரே இனம்தான்’ என்று.
– சிந்தனை சரம் செப்டம்பர் 2005