கணவனுக்கு பயப்படலாமா?
[ பல பெண்கள் திருமணமான புதிதில் கணவனுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.
மனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும்.]
கணவனுக்கு பயப்படலாமா?
`என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன் – மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல!
கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்குள்ளும் இருக்க வேண்டியது அன்பு, நட்பு, பாசம், நேசம்.
இவ்வாறு வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்கும்.
சில குடும்பங்களில் கணவன்-மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை.
கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும், அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனமொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.
உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும். ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.
பல பெண்கள் திருமணமான புதிதில் கனவணுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.
மனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும். என்பதை மறக்காதீர்கள்.