[ இது லால்பேட்டை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு முஸ்லிம்கள் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை மணி! ]
[ இந்த தேர்தலின் மூலம் பல விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம் நாம் ஒற்றுமையில் வீழ்ச்சி அடைந்து விட்டோம் லால்பேட்டை வரலாற்றில் முஸ்லிமல்லாதவர்கள் 3 பேர் பேரூராட்சிக்கு இதுவரை தேர்ந்து எடுக்கப்பட்டதே கிடையாது! ஆனால் இப்போது நிலைமை என்ன?
நமது ஒற்றுமையின் கயிறு பிடி தளர்கிறது சகோதரர்களே! நமக்குள் தயவு செய்து சண்டைகள் வேண்டாம். லால்பேட்டையின் வளர்ச்சியை தொலைநோக்கு பார்வையோடு அணுகுங்கள். தோல்வியடைந்த தமுமுக நண்பர்கள் கவலையடைய வேண்டாம்.. முன்னைக் காட்டிலும் சமுதாய சேவைகளில் முனைப்புக் காட்டுங்கள். ஊரின் முக்கிய மனிதர்களின் நல்ல கருத்துகளுக்கு செவிகொடுங்கள்.
SDPI நண்பர்களும் சமுதாய சேவைகளில் முனைப்புக் காட்டுங்கள். அடுத்த முறை இவர்கள் இருவரும் இணைந்தால் லால்பேட்டையின் பழைய வரலாறுகளை மீட்டெடுக்கலாம். இந்த இயக்களுக்கென்று தனித் தனித் கொள்கைகளும், கோட்பாடுகளும் இருக்கலாம். தயவு செய்து ஊரின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் முன்னிட்டு ஊரின் பொதுப் பிரச்சனைகளுக்கு நீங்கள் ஓரணியில் நிற்க வேண்டும். நாளைய நமது சந்ததிகள் லால்பேட்டையில் பாதுகாப்பாக வாழ்வதற்கு நீங்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். – இது ஒவ்வொரு முஸ்லிம் ஊருக்கும் பொருந்தும்.]
30,000 மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் லால்பேட்டையில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 14,000-த்திற்க்கும் மேற்பட்டவர்கள், ஆனால் அரசு பதிவேட்டில் 9,592 நபர்கள் மட்டும் தான் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என பதிவாகியுள்ளது. கடந்த 19-10-2011 அன்று நடந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த மக்கள் வெறும் 6229, அதாவது மொத்த மக்கள் தொகையில் 20.7%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 44.5%, அரசு படிவேட்டிலில் உள்ளவர்களில் 64.9%.
இந்த தேர்தலின் முடிவு கடந்த 21-10-2011 அன்று வெளியானது, இதில் 2,200 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வின் சஃபியுல்லா வெற்றி பெற்றார், இரண்டாம் இடம் ம.ம.க வின் யாசர் அரஃபாத், மூண்றாம் இடம் முருகேசன்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நான்கு விஷயங்களை, ஒன்று வெற்றி பெற்ற வேட்பாளர் வாங்கிய ஓட்டு 2,200 அதாவது மொத்த மக்கள் தொகையில் 7.3%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 15.7%,வாக்களித்தவர்களில் வெறும் 22.9% தான்.
வெறும் 22.9% ஓட்டுக்கள் மட்டும் பெற்று வெற்றி பெற்ற ஒருவர் 30,000 மக்களுக்கு தலைவர், அதாவது 77.1% மக்களுக்கு பிடிக்காதவர் (அல்லது) 77.1% மக்கள் இவருக்கு ஆதரவு தரவில்லை.
இரண்டாவது 30,000 மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 3ஆம் இடத்தை பிடித்தது இந்து மத சகோதரர்,
மூண்றாவது காலம் காலமாக ஒற்றுமையுடன் நம் மக்கள் பள்ளிவாசல் மூலமாகவும், ஜமாத் மூலமாக தேர்ந்தெடுத்த மக்களாட்சி சென்று ஆளும் அரசாட்சி வந்துவிட்டது,
நான்காவது 15 வார்டுகள் கொண்ட லால்பேட்டையில் 4 வார்டுகளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் கைப்பற்றி விட்டார்க்கள்.
இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்தனை செய்து பார்த்தோமா?! ஒற்றுமை இல்லாமையும், தெருவுக்கு ஒரு வேட்பாளர் என களத்தில் இறங்கியதுதான் காரணமாக இருக்கமுடியும். இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த நாம் சிறு, சிறு விஷயங்களுக்கொல்லாம் மோதி இப்போது எந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோம் என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்
சஃபியுல்லா (அ.தி.மு.க.)- 2200
யாசர் அரபாத் (மனிதநேய மக்கள் கட்சி)- 2107
காஜாமுகைதீன் (தி.மு.க.) – 223
நஜீர் அகமது (காங்) – 281
அகமதுல்லா (சுயே)- 247
இஸ்மத்துல்லா (சுயே)- 437
பாரீஸ் (தே.மு.தி.க.)- 213
முருகேசன் (சுயே) – 464
மன்சூர் அலி (சுயே) – 41
மரியதாஸ் (சுயே) – 16
இந்த தேர்தலின் மூலம் பல விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம் நாம் ஒற்றுமையில் வீழ்ச்சி அடைந்து விட்டோம் லால்பேட்டை வரலாற்றில் முஸ்லிமல்லாதவர்கள் 3 பேர் பேரூராட்சிக்கு இதுவரை தேர்ந்து எடுக்கப்பட்டதே கிடையாது! ஆனால் இப்போது நிலைமை என்ன?
நமது ஒற்றுமையின் கயிறு பிடி தளர்கிறது சகோதரர்களே! நமக்குள் தயவு செய்து சண்டைகள் வேண்டாம். லால்பேட்டையின் வளர்ச்சியை தொலைநோக்கு பார்வையோடு அணுகுங்கள். தோல்வியடைந்த தமுமுக நண்பர்கள் கவலையடைய வேண்டாம்.. முன்னைக் காட்டிலும் சமுதாய சேவைகளில் முனைப்புக் காட்டுங்கள். ஊரின் முக்கிய மனிதர்களின் நல்ல கருத்துகளுக்கு செவிகொடுங்கள்.
SDPI நண்பர்களும் சமுதாய சேவைகளில் முனைப்புக் காட்டுங்கள். அடுத்த முறை இவர்கள் இருவரும் இணைந்தால் லால்பேட்டையின் பழைய வரலாறுகளை மீட்டெடுக்கலாம். இந்த இயக்களுக்கென்று தனித் தனித் கொள்கைகளும், கோட்பாடுகளும் இருக்கலாம். தயவு செய்து ஊரின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் முன்னிட்டு ஊரின் பொதுப் பிரச்சனைகளுக்கு நீங்கள் ஓரணியில் நிற்க வேண்டும். நாளைய நமது சந்ததிகள் லால்பேட்டையில் பாதுகாப்பாக வாழ்வதற்கு நீங்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.
‘நீங்கள் எல்லோரும் (ஒற்றுமையுடன்) அல்லாஹ்வுடைய (திருக்குர்ஆன் எனும்) கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குள் பகையை வளர்த்துக்கொண்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.’ (திருக்குர்ஆன் 3 : 103)
‘நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்ப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். அப்படியிருந்தால், நீங்கள் தைரியத்தை இழப்பதுடன் உங்கள் வலிமையும் குன்றிவிடும். ஆகவே நீங்கள் (துன்பங்களை சகித்துக்கொண்டு) பொறுமையாயிருங்கள். நிச்சயமாக அல்லாஹ், பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’ (அல் குர்ஆன் 8: 46)
source: جَزَاكَ اللَّهُ خَيْرًا http://www.lalpetexpress.com/?p=4169#more-4169
”ஒற்றுமையைப் பேணுவோம்” கட்டுரைக்கு…. Please “CLICK” below:
http://nidur.info/கட்டுரைகள்/MA-முஹம்மது-அலீ/216-ஒற்றுமையைப்-பேணுவோம்