அமெரிக்காவும், லஞ்ச லாவண்யமும், இந்திய ஆளும்ஆட்சியாளர்களும்!
[ அமெரிக்கா இந்தியாவில் தனது தொழிற்சாலைகளை, வியாபார நிறுவனங்களை ஆரம்பிக்கும்போது, எங்கெல்லாம் ஒப்பந்தங்கள், பிணைப்பத்திரங்கள் முதலியவை அரசாங்கச் சட்டங்களுக்குட்பட்டுத் தரவேண்டுமோ, அங்கெல்லாம் கொடுக்கும்போது, சாதாரணமாக ஒரு சரத்தைச் சேர்த்திருந்தது.
அதாவது, “தாங்கள் இந்திய- மத்திய- மாநில அரசாங்கங்களின் அரசு துறைகள், அலுவகங்கள், நிறுவனங்கள் முதலியவற்றிடம் இருந்து பதிவுகள், அனுமதிகள், சலுகைகள் முதலியன பெறும்போது, எந்த காரணத்திற்காகாவும், எந்த அதிகாரிக்கும், யாருக்கும் லஞ்சம் மற்றும் எந்த வகையிலும் பணம்-பொருள்-பரிசு போன்ற எவற்றையும் தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம்”.
முன்பு ஐரோப்பிய கம்பெனிகள் எப்படி இந்தியாவை சுரண்டி, ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவையே ஆளத்தொடங்கினரோ, அதுபோலத்தான் இப்பொழுது அமெரிக்கா இந்தியாவை தமது ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. அதற்கு அங்கிருக்கும் இந்திய-வம்சாவளியினர் சிலர் உடன் போவதாகத் தெரிகிறது.
தனது உற்பத்திப் பொருட்களை இந்தியாவின் மீது திணிக்கவேண்டும், அதற்கேற்றாற்போல இந்தியர்களை மாற்ற வேண்டும் என்றுதான் அமெரிக்கா வேலை செய்கிறது. அதனால்தான் கார்கள், வாசனைத் திரவியங்கள், ஐ-மாத்திரைகள் முதலியன படையெடுக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றின் பின்னேயும் இந்திய கலாச்சார சீரழிவிற்கான ஆயுதங்கள் மறைந்திருக்கின்றன. இந்தியர்களுக்கு முதலியன ]
அமெரிக்கக் கம்பெனிகள் லஞ்சம் கொடுத்தது:
மாரியோ கொவினோ (Mario Covino of Control Companies) ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலாக மாநில அரசு ஊழியர்களுக்கு 2009ல் லஞ்சம் கொடுத்துள்ளது. இதில் மஹாராஷ்டிர அரசு மின் துறையும் சேரும். அதே மாதிரி வெஸ்டிங் ஹவுஸ் ஏர் பிரேக் டெக்னோலாஜி கார்போரேஷன் ( Feb 14, 2008, Westinghouse Air Brake Technologies Corporation’s Indian subsidiary, Pioneer Friction Ltd) , $137,400களை ரெயில்வே அதிகாரிகளுக்கு 2001-2005 இடையில் கொடுத்தது. யார்க் இன்டர்நேஷனல் ( Subsidiaries of York International Corporation) $ 7.5 மில்லியன் மேலாக லஞ்சம் கொடுத்து வியாபார ஆர்டர்களை வாங்கியதாகத் தெரிகிறது. லஞ்சம் வாங்கியதில் இந்திய கடற்படையும் வருகிறது. இப்படி பட்டியல் நீளுகிறது.
மத்திய புலனாய்வுக் கழகத்தின் விசாரணை துவக்கம்:
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து வாணிப வாய்ப்புகளைப் பெறுவதற்காக, அந்நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் மீது மத்திய புலனாய்வுக் கழகம் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் விவரங்களை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஊடகங்களுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
மீரா சங்கர் எழுதிய கடிதத்தின் நகலை ஊடகங்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் மராட்டிய மாநில மின்சார வாரியம், இந்தியன் இரயில்வே, மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விவரம் கோரியுள்ளது. இந்திய பொதுத் துறை நிறுவனமான மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்திற்கு அமெரிக்க நிறுவனமான டோவ் ஆக்ரோ சயின்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லஞ்சத்தைப் பற்றிய அமெரிக்க சரத்து:
அமெரிக்கா இந்தியாவில் தனது தொழிற்சாலைகளை, வியாபார நிறுவனங்களை ஆரம்பிக்கும்போது, எங்கெல்லாம் ஒப்பந்தங்கள், பிணைப்பத்திரங்கள் முதலியவை அரசாங்கச் சட்டங்களுக்குட்பட்டுத் தரவேண்டுமோ, அங்கெல்லாம் கொடுக்கும்போது, சாதாரணமாக ஒரு சரத்தைச் சேர்த்திருந்தது. அதாவது, “தாங்கள் இந்திய- மத்திய- மாநில அரசாங்கங்களின் அரசு துறைகள், அலுவகங்கள், நிறுவனங்கள் முதலியவற்றிடம் இருந்து பதிவுகள், அனுமதிகள், சலுகைகள் முதலியன பெறும்போது, எந்த காரணத்திற்காகாவும், எந்த அதிகாரிக்கும், யாருக்கும் லஞ்சம் மற்றும் எந்த வகையிலும் பணம்-பொருள்-பரிசு போன்ற எவற்றையும் தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம்”.
2000ல் நடந்த வரி ஏய்ப்புகள்:
அப்பொழுதெல்லாம், அதைப் படிக்கும் இந்தியர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் இல்லை, நாணயமானவர்களுக்கு கோபமும் வந்திருக்கும். என்ன எது, அபத்தமான சரத்து, யாதோ இவர்கள் மிக-மிக நல்லவர்கள் போலவும், இந்தியர்கள் எல்லாம் அயோக்கியர்கள் போலவும் அல்லவா சித்தரித்து உள்ளனர்?
மேலும் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு “நியாவவான் / நீதிமான்/ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்றெல்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டவர்கள், பறைச் சாற்றிக் கொண்டவர்கள்தாம் – அதாவது மிகவும் பெரிய, பிரபலமான அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய நிறுவனங்கள் 25,000 கோடிகளுக்கு மேல் வரி ஏய்ப்புச் செய்தனர் என்று பாராளுமன்றத்தில் 2000ல் அறிக்கைத்தாக்கல் செய்யப் பட்டது.
அத்தகைய கம்பெனிகளின் டைரக்டர்கள் தாம் இந்திய நாட்டு பிரஜைகள் இல்லை என்று வாதிட்டு, அதனால் இந்திய சட்டங்கள் தம்மை ஒன்றும் செய்யமுடியாது என்று அறிவித்தனர். ஆனால், காங்கிரஸ் அரசு ஒன்றும் செய்யவில்லை. இன்றளவும் அந்த வழக்குகள் கிடப்பில் கிடக்கின்றனன். ஆனால் அதே கம்பெனிகள் தொழிற்சாலைகள் வைதுக் கொண்டு லாபங்களை பெருக்கி தங்களது நாடுகளுக்கு அனுப்பத்தான் செய்கின்றன.
மந்திரிகளுக்கு கோடிகள், அதிகாரிகளுக்கு லட்சங்கள் மற்றவர்களுக்கு ஆயிரங்கள்:
அமெரிக்காவுடன் தொடர்பு ஏற்பட்டபிறகு சில குறிப்பிட்டப் பிரிவினர்களுக்கு – கணினி வல்லுனர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆளுமை-திறமைசாலிகள் முதலியோர் – நிச்சயமாக பலன்கள் பல கிடைத்துள்ளன. ஆனால் வர்த்தக, தொழிற்சாலை, தொழிற்நுட்ப / விஞ்ஞான / தெரிந்தததை-தரும் / பெறும் பரிமாற்றங்களில், பல நல்லது நடந்தாலும், லஞ்சம் என்றது நிச்சயமாக இருந்தது. ஐடி-கம்ப்யூட்டர்கள், ஹார்ட்வேர்-சாஃப்ட்வேர் விற்பதில் / வாங்குவதில் கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் தலைவிரித்தாடியது (இன்றும் தொடர்கிறது). பிறகு, வர்த்தக-தொழிற்சாலைகள் இந்தியாவிலேயே திறக்கப் பட்டபோது, பதிவுகள், அனுமதிகள், சலுகைகள் முதலியவற்றைப் பெறுவதற்காக பல மத்திய- மாநில அரசாங்கங்களின் அரசு துறைகள், அலுவகங்கள், நிறுவனங்கள் முதலியவற்றை அணுக வேண்டியிருந்தது.
மேலை-நாட்டு எஜமானர்களோ “லாஜிஸ்டிக்ஸ்” (logistics) போர்வையில், “ஒரே நாளில் / இரண்டே நாளில் பதிவு-சான்றிதழ்கள் வாங்கித் தரவேண்டும், நீ என்ன செய்வாயோ, யாது செய்வாயோ எனக்குத் தெரியாது. பணத்தைப் பற்றிக் கவலை இல்ல” என்று ஆணையிட்டபோது, நமது படித்து-பல-பட்டங்கள் பெற்ற இந்திய வல்லுனர்கள், குறிப்பாக பதிவு-செய்யப்பட்ட-கணக்காளர்கள் (Chartered Accountants), கிரய-கணக்காளர்கள் (Cost Accountants) மற்றும் அறிவுரை-வல்லுனர்கள் (Consultants) சிரமேந்தி காரியங்களைச் செய்து வந்தனர். இவ்வாறு கொடுக்கப் பட்ட பணம் அது கொள்ளுகின்ற பெட்டி / கவர் இவற்றின் அளவுகளில் மந்திரிகள், அதிகாரிகள், முதலியோகளின் நிலை-தரம் முதலிய காரணிகளால் மட்டும் தான் வேறுபட்டதே தவிர, லஞ்சம்-லஞ்சமாகத் தான் இருந்தது.
புதிய பொருளாதார கொள்கை, புதிய முதலாளிகள்:
இதனால்தான், பல மாநிலங்களில், புதிய-புதிய அரசியல்வாதிகள் உருவாயினர்; புதிய-புதிய தரகர்கள் பெருகினர்; டென்டெர்-யுத்தங்கள் பெருகின-வளர்ந்தன; புதிய-புதிய தொழிலதிபர்கள் அவதாரம் எடுத்தனர்; புதிய-புதிய கம்பெனிகள் தோன்றின அல்லது உள்ள கம்பெனிகள் ஒன்று சேர்ந்தன-கூட்டு சேர்ந்தன; இத்தகைய எல்லா மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் லஞ்சம்தான்!
ஏனெனில், வங்கி-பதிவுசான்றிதழ்கள்-பதிவுப்பத்திரங்கள்-உள்ள பொருட்கள், விற்பது-வாங்குதவதற்கான பாக்கி முதலியவற்றை எல்லாம் அத்தகைய மாற்றங்களுக்கு-மாறுதல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து அமூல் படுத்தவேண்டும். எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே கவனிக்கப் பட்டனர்! ஆனால், அதில் நம்பி பணம் முதலீடு செய்த இந்தியர்களின் கதி-அதோகதிதான்.
அமெரிக்கா இந்தியாவிற்கு போடும் தூண்டில்:
முன்பு ஐரோப்பிய கம்பெனிகள் எப்படி இந்தியாவை சுரண்டி, ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவையே ஆளத்தொடங்கினரோ, அதுபோலத்தான் இப்பொழுது அமெரிக்கா இந்தியாவை தமது ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. அதற்கு அங்கிருக்கும் இந்திய-வம்சாவளியினர் சிலர் உடன் போவதாகத் தெரிகிறது.
தனது உற்பத்திப் பொருட்களை இந்தியாவின் மீது திணிக்கவேண்டும், அதற்கேற்றாற்போல இந்தியர்களை மாற்ற வேண்டும் என்றுதான் அமெரிக்கா வேலை செய்கிறது. அதனால்தான் கார்கள், வாசனைத் திரவியங்கள், ஐ-மாத்திரைகள் முதலியன படையெடுக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றின் பின்னேயும் இந்திய கலாச்சார சீரழிவிற்கான ஆயுதங்கள் மறைந்திருக்கின்றன. இந்தியர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பது, ஒபாமா தீபாவளி கொண்டாடுவது முதலியன இதற்காகத் தானோ, என்னவோ? போகப் போகத் தெரியும்.
– வேதபிரகாஷ்
source: http://liberalizationprivatizationglobalization.wordpress.com