அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?
மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க சில வழிமுறைகள் உண்டு….
1. நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு, அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும்.
2. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள். அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக தொடங்குவதற்க்கு ஒரு சிறிய டோக்கன் கொடுத்தது போல இருக்கும். அது தன் கணவர் தன்னை உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்.
3. அது போல முடிந்தால் வார இறுதியில் அவர்களுக்கு முன்பாக எழுந்திருந்து காலை டிஃபன் பண்ணி அவர்களூக்கு கொடுத்து உதவுங்கள். வாரம் முழுவதும் அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்து நமக்காக கஷ்டப்படுவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர்களூக்கு நல்ல சந்தோஷத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை நாம் சிறப்பாக நடத்துவதையும் உணர்வார்கள்
4. நண்பர்கள் மற்றும் குடும்பதினர் முன்னும் உங்கள் மனைவியின் செயல்களை பாராட்டி பேசுங்கள். அதுபோல உங்கள் மனைவி இல்லாத போது மனைவியின் தோழிகளை சந்தித்தால் அப்போதும் மிகவும் பாராட்டி பேசுங்கள். அது அவர்களின் காதுக்கு எளிதாக சென்று அடையும் போது அவர்கள் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
5. அது போல அவர்களின் ஹேண்ட் பேக்குகளில் சாக்லேட் ஒன்றை வைத்து ஒரு சிறிய நோட் எழுதி அல்லது ஒரு நல்ல கவிதையை எழுதி அவர்களுக்கு தெரியாமல் வைக்கவும். கவிதை எழுத தெரியவில்லையென்றால் நெட்டில் இருந்து சுடுங்கள்.
6. இரவில் படுக்க செல்லும் போது மென்மையாக கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் தலைமுடியை கோதிவிடவும். இதை விட அவர்களுக்கு வேறு சந்தோஷம் ஏதும் கிடையாது. இவ் வழிமுறைகள் கணவன்மார்களுக்கு மட்டுமே!
7. அடிக்கடி அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள். ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.