اقْرَأْ
மௌலானா பஜ்லுர் ரஹ்மான்
[ ஹைரபாத், டோலி சவுக்கி, மஸ்ஜிதே ஃபாத்திமா நூலகத் திறப்பு விழாவில் மௌலானா ஃபஜ்லுர் ரஹ்மான்.]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறங்கிய முதல் வசனங்கள், அலக் அத்தியாய ஆரம்ப ஆயத்கள். 96 சூரா. ”இக்ரா” – ”படியுங்கள்”. படைத்த உங்களின் இறைவனின் திருநாமம் கொண்டு படியுங்கள். ரத்தக் கட்டியிலிருந்து மனிதரை படைத்தான். படியுங்கள். அல்லாஹ் மாபெரும் கொடையாளி. எழுதுகோல் கொண்டு கற்றுக் கொடுத்தான். சில ரிவாயத்துக்களில் இவ்வாறு வருகிறது.
“ஜிப்ரயீல் கையில் பலகை இருந்தது. நீட்டி, அதில் உள்ள வசனங்களை படிக்குமாறு வேண்டினார்”. பொதுவான தகவல் – ஓதியதை திரும்ப நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதும்படி கேட்டுக் கொண்டார்கள்.
முதல் கட்டளை இறை உத்தரவு – படியுங்கள். அல்லாஹ்வின் பெயரை சொல்லிபடி. இல்ம் அறிவு அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
மூஃமின்களுக்கு “இல்ம்” தரப்படுகிறது. “இல்ம்”, அல்லாஹ்வின் நாமத்துடன் இணைந்தது. பலன் தரும் அறிவு. மற்றவை, பிற “அறிவுகள்” பயனற்றவை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன் அறிவை அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். பயனற்ற அறிவிடமிருந்து பாதுகாப்பு கோரினார்கள். இன்றைய அறிவு அல்லாஹ்வின் நாமத்துடன் தொடர்பற்றது. இது அறிவு ஆகாது. அல்லாஹ்வை திருப்தி படுத்த முடியாத அறிவு. அலலாஹ்வை தெரிந்துக் கொள்ள இயலாது. அல்லாஹ்வின் படைப்புகள் மீது மென்மை காட்டுவதில்லை.
அலிமியான் கூறுகிறார் ”இன்று அதிகம் படித்தவர்களின் இயல்பு மற்றவர் உணவை கையிலிருந்து பிடுங்கி நாய்க்கு போடுவதாகும். மற்றவர் “ஆடையை” பிடுங்கி, தமது சுவர் “அலங்காரம்” பண்ணுவதாகும்.
எத்தகைய கல்வி, பேராசையை மனிதனுக்கு தருகிறதோ அது அறியாமை மூடத்தனம். நூர் அல்ல இருட்டு. நமது பிள்ளைகள் எங்கே போகின்றனர்? யோசி. இறைவனை விட்டும் தூரம். இன்றைய கல்வியின் நோக்கம் துனியா. ஆகிரத் அல்ல. பார்ப்பதற்கு ‘இல்ம்’ போல காட்சி தரும். உண்மையில் மூடத்தனமாகும்.
“இக்ரா” ஆயத்தை உலக அறிவுடன் இணைந்து பின்பற்றுவோர் மாபெரும் பாவிகள். குற்றமிழைக்கின்றனர்.
ஒரு காலம் இருந்தது. உலமா, அவுலியா பிறகு மக்கள் மத்தியில் மருத்துவருக்கு மதிப்பு இருந்தது. பேராசை கொண்டவர் அல்லர். பிறருடைய உணவு, ஆடையை பிடுங்கியதேயில்லை. எளிய, நேர்மையான வாழ்வை மேற்கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகள் மீது மென்மையுடன் நடந்து கொண்டனர். அல்லாஹ் அவர்களுக்கு கண்ணியத்தை வழங்கினான்.
இக்ரா, கலம், அல்லம, மாலம் யஃலம் அனைத்து சொற்றொடர்களும் அறிவை பற்றியது. நபிகளாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அற்புதங்களில் தலையானது குர்ஆன். இல்ம் சார்ந்த மூஃஜிஸா. அறிவற்புதம்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கைத்தடி. கைஒளி. இரண்டு அற்புதம். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொட்டால் நிவாரணம். நோயிலிருந்து விடுதலை.
“கிதாபு” எழுதப்பட்ட வேதம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புதம். எழுதப்பட்ட இல்ம், சொற்கள். எந்த நபியின் மீது “இல்ம்” அற்புதம் நிகழ்த்தப் பட்டதோ, வழங்கப்பட்டதோ அந்த நபியின் வாரிசு, சமூகத்துக்கு “இல்ம்” முக்கியத்துவம் விளங்கவில்லை.
உபதேசிக்க வேண்டிய பரிதாபம். கை சேதம். அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்வில் முக்கிய சம்பவத்தை நாம் மறந்தே பேசுகிறோம். பயணத்தில் இடைமறித்த திருடர்கள் நாணயம் குறித்து வினவினர். ஆனால் அப்போது, எங்கே, எதற்காக பயணம்? இல்ம் நோக்கி, கல்வி கற்க பயணப்பட்ட சம்பவம்.
“சவாரி” வசதியில்லை ஊரை விட்டு வெளியேறினால் திரும்ப வருவது உறுதியில்லை. கடும் பயணம். இடர்மிகுந்த பயணம். என்றாலும் இல்ம் தேடி புறப்பட்டார். இன்று நமது வாரிசுகள் பார்க், சுற்றுலா, மலை சுற்றுலா, உலக பயணம் பொழுதுபோக்க பயணப்படுகின்றனர். அவசியம், அடிப்படை எதுவும் புரியவில்லை.
60 – 70 வயது இடைப்பட்ட ஆண்டு உம்மத் ஆயுள். நபிகளார் கருத்து. 60 வயதை தாண்டினால் ஒவ்வோர் ஆண்டும் நீட்டிப்பு. 70 வயது தாண்டினால் ஒவ்வோர் நாளும் எக்ஸ்டென்ஷன் நினைப்பு வரவேண்டும்.
“சீரத்” புத்தகம் கிதாபு முழுவதும் இன்னும் படிக்கவில்லை. முஸ்லிம் நூலகத்தில் செய்தித்தாள் வேண்டாம். வைக்காதீர். ஈரான் ஆப்கன் வெட்டிக்கதை பேசுவர். உலக பிரச்சினை புரியும். முஹல்லா தெரியாது.
பள்ளிவாசலில் குர்ஆன், நபி, ஸஹாபி வரலாறு பேசுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு குர்ஆனுடைய செயல்விரிவுரை திருந்தவேண்டும். நற்பயன் கிடைக்க வேண்டும்.
வாதப் பிரதிவாதம் செய்ய படிப்பு உதவினால், நரகத்துக்கு இட்டுச் செல்லும். விதண்டாவாதம், பயனற்றது.
“பெயர் புகழ் சம்பாதிப்பேன். அறிஞர் வரிசையில் அமர்வேன். இல்லையென்றால் குறைந்த அறிவுள்ளவரிடம் சண்டை போடுவேன்.” இது நரக அறிவு.
அல்லாஹ்முன் அழத் தெரியவில்லை. தனிமையில் நடுங்குவதில்லை. ஜிக்ர் இல்லை. திலாவத் குர்ஆனை மனனமில்லை. ஆனால், இவை எதுவுமின்றி தப்ஸீர் விரிவுரை செய்கின்றனர்.
உங்கள் பலன், லாபத்துக்காகவாவது படி. உங்களது ரூஹ் ஆன்மாவின் உணவு. குர்ஆன்படி. சிடி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் வந்துவிட்டது. என்றாலும் கிதாபு படிக்கும் அனுபவம் பயன் இதில் இல்லை.
ஆராய்ச்சி முடிவு. ஒரு தலைமுறையை நாசம் செய்து இப்போது அனுபவம் கிடைத்தது. புட்டிபால் விடுபட்டு தாய்ப்பால் சத்துமிக்கது, அடிபட்ட பிறகு புத்தி வருகிறது.
புத்தகம் படிக்கும் வாய்ப்பு மிக நன்று. உருப்படியானது. ஈடு இணை இல்லை. அல்லாஹ்விடம் திரும்ப வேண்டும் நிய்யத், கவனத்தில் வைத்து படி. டிவி கைவிடுங்கள். நேரத்தை, வாழ்வை வீணாக்காதீர்.
இறை கருணை தந்தான். முடி வெளுத்து விட்டது. கிரிக்கெட் போட்டி பார்க்க, ரசிக்க வேண்டாம். நேரம், வாழ்வு நாசம். டிவி பார்த்து ‘‘வக்த்’’ கோட்டை விடாதீர். எஞ்சிய வாழ்வு கனீமத் அருட்கொடை. குறிப்பிட்ட நேரம் உறங்கி ஓய்வெடுங்கள்.
-மௌலானா ஃபஜ்லுர் ரஹ்மான், – தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், நன்றி: ”முஸ்லிம் முரசு” ஜூலை 2011.
source: http://jahangeer.in/?paged=5