[ பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தம்மை முன்னிலை படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கும். ஆனால் பெண்களின் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும், ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாம். எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் ”டெஸ்டோஸ்டீரான்” அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களை தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது. காரணம், பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆய்வின்படி பெண்கள் மூன்று விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறுவிஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட “உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அநேக பெண்களின் வாடிக்கை” இவர்கள் ஒருவகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாக பொய் சொல்வது மூன்றாம் வகையினர். பெண்கள், சாதாரணமாக சிராய்ப்பு, காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்லமாட்டார்கள்.]
உறவை வளர்க்கும் பெண்களின் சிரிப்பு!
எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு பெண் சிரிக்கிறாள் ஏன்? இயற்கை பெண்ணுக்கு அதற்கான தனித்திறனை வழங்கி இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியாளர்களை புருவம் விரிய ஆச்சர்யப்படவைக்கிறது. சின்னச்சின்ன வேடிக்கை நிகழ்வுகள், நகைச்சுவைகளுக்கு எல்லாம் ஆண்களை விட பெண்கள் அதிகமாகச் சிரிக்கிறார்கள்.
அதிலும் சிரிப்பதில் பெண்களுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. கலகலவென்று சத்தமாக சிரிப்பது பெண்களின் இயல்பு. கண்களில் நீர் வரும் அளவிற்குகூட அவர்கள் சிரிப்பது உண்டு. ஆண்கள் பொதுவாக சாதாரணமான விஷயங்களுக்கு எல்லாம் அதிகமாக சிரிக்க மாட்டார்கள்.
பெண்கள் ஏன் இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்களின் மூளையின் “கார்டெக்ஸ்” பகுதிக்கு முந்தைய அடுக்கு அதில் முக்கியப் பங்காற்றுவது தெரிய வந்துள்ளது. அதனால்தான் பெண் துன்பத்திலும் சிறிய விஷயம் சந்தோசம் அளிக்கும் என்றால் துன்பத்தை மறந்து வாய்விட்டு சிரிக்கிறாள். இது இயற்கை அவளுக்கு வழங்கி இருக்கும் தனித்திறன்.
\பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தம்மை முன்னிலை படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கும். ஆனால் பெண்களின் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
ஆண்களை தம் வசப்படுத்தும் பெண்களின் கண்ணீர்!
பெண்கள் தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒருவரின் தாயோ, மனைவியோ அல்லது சகோதரியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும் கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை.
அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள்.
இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது. அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது. அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால் அவரது துணை அதனை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. மேலும் கண்ணீரில் காணப்படும் வேதிபொருள் அவர்களை மறைமுகமாக பாதுகாக்கிறது.
பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும், ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாம். எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் ”டெஸ்டோஸ்டீரான்” அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களை தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறாது. காரணம், பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள்.
லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டுஸ கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.
“கணவன்-மனைவி” உறவை வலுபடுத்தும் பெண்களின் பொய்கள்
பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் “பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்” என்று கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு, தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள் என்னவென்றால்,”பெண்கள் தனது கணவரிடம் தினமும் குறைந்தது 3 பொய்கள் சொல்கிறார்கள்” என்பதுதான். இப்படி பொய் சொல்லாத பெண் ஒருவர்கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி ஊட்டும் உண்மை.
ஆய்வின்படி பெண்கள் மூன்று விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறுவிஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட “உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அநேக பெண்களின் வாடிக்கை” இவர்கள் ஒருவகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாக பொய் சொல்வது மூன்றாம் வகையினர். பெண்கள், சாதாரணமாக சிராய்ப்பு, காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்லமாட்டார்கள்.
அலைபேசி கட்டணம் அதிகம் வருகிறது என்று கணவன் கண்டித்தால், கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள் அதற்குப் பிறகு, மட்டமான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் “என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது என்று கேட்டால்” அதை நான் பார்த்து ஒரு வாரமாகிறது என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது துவைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.
இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிக பொய் சொல்லும் பெண்கள், அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ இல்லை. ஆனால் “பெண்களின் பலவகை பொய்கள் “கணவன்-மனைவி” உறவை வலுபடுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன” என்று தான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.