Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விண்வெளிப் போர் (Space War)

Posted on October 5, 2011 by admin

விண்வெளிப் போர் (Space War)

விண்தூக்கிகள் (space elevators)

[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம்? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா?

இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.

ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.

அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ‘நானோ டெக்னாலஜி’ விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.

இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்! ]

Related image

விண்வெளிப் போர் (Space War)

தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.

space-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).

தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.

space-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).

இந்தத் திட்டத்தின்படி சீரொளிக் கதிர் ஆயுதங்களைக் (laser weapon) கொண்ட செய்மதித் தொகுதிகள் விண்ணில் செலுத்தப்பட்டு அவை எப்பொழுதுமே எதிரிநாடுகளின் வான்பரப்பைக் கண்காணித்தபடி நிலைநிறுத்தப்படும். அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் எந்தவொரு நாடாவது ஏவுகணைகளை ஏவுமாயின், அந்த ஏவுகணைகள் அமெரிக்க வான்பரப்புக்குள் நுளையுமுன்னரே வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் செய்மதிகளால் அழிக்கப்பட்டுவிடும்.

முதற்கட்ட பரிசோதனைகளின் படி இந்தத் திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியை அமெரிக்காவுக்குக் கொடுக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்திட்டத்தினை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. ஒரு முழுமையான வெற்றிகரமான திட்டமாக இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமைரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர்ந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது பாதுகாப்புப் படைக் கட்டமைப்பில் விண்வெளிப் படை (Space Force) என்றொரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் விண்வெளிப் போர்முறையில் தமது கால்களைப் பலமாக ஊன்றுவதற்கான முயற்சியில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

space-war-graphicமுதலாம் உலகப் போரின்போது நடைபெற்ற சமர்களில், இராணுவங்கள் உயர் நிலப்பரப்புக்களான மலை மற்றும் குன்றுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் பெருமளவில் ஈடுபட்டன. இதற்கான காரணம், உயர்வான நிலப்பகுதிகளில் அமைக்கப்படும் நிலைகளில் இருந்து எதிரிப்படைகளின் தாக்குதல்களை இலகுவாக முறியடிக்கலாம் என்பதேயாகும். முதலாம் உலகப்போரில் மட்டுமன்றி மனிதகுலப் போரியல் வரலாற்றில் இதற்கான சான்றுகள் பல உண்டு.

இன்றைய உலகின் நவீன போரியல் விற்பனர்களின் உயர்நிலப்பகுதி விண்வெளியேயாகும். அதாவது அவர்கள் விண்ணிலிருந்து எதிரிகளைக் கண்காணித்து எதிரிப்படைகளின் மீது தாக்குதல் நடாத்தவோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவோவல்ல தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செய்மதிகளை விண்ணில் நிறுத்தி இப்பணிகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர். இதன் பயனாக எதிரிப் படைகளின் நடமாட்டங்கள் அனைத்தும் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.

இவ் உயர் தொழிநுட்பத்தின் காரணமாக ஈராக்கியப் படைகளின் எந்தவொரு நகர்வும் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவ்வாறான கண்காணிப்புப் பணியுடன் தாக்குதல் பணியையும் இணைப்பதே விண்வெளிப் போர்முறையின் முக்கிய அம்சமாகும். அதாவது, அணுவாயுத மற்றும் பிற ஏவுகணைகளை எதிரிநாட்டு வான்பரப்பிற்குள் வைத்தே செய்மதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீரொளிக் கதிர் ஆயுதங்களின் (laser weapon) மூலம் தாக்கியழிப்பதாகும்.

space-war-plane1983 ஆம் ஆண்டு, Strategic Defense Initiative (SDI) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் போர்முறை தற்போது Ballistic Missile Defense என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவினை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் குடை (umbrella of protection) என வர்ணிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வருடமொன்றிற்கு 4 பில்லியன் ($4 billion) அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் மேலும் 6.6 பில்லியன் ($6.6 billion) அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த நாடுகள் தம்மைத் தமது பாதுகாப்புக் குடையின்கீழ் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஏனைய சிறிய நாடுகளைப் பாதிக்காதிருக்குமா? இது ஒரு விடைதேடவேண்டிய வினாவே.

  

Image result for space elevator

விண்தூக்கிகள் (space elevators)

[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம்? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா?

இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.

ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.

அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ‘நானோ டெக்னாலஜி’ விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.

இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்! ]

இன்னும் பலநாடுகளில் வாழும் மக்களுக்கு விமானத்தில் பறப்பது ஆடம்பரம் தான். அளவான வருமானம் , முதலாளித்துவம், மலைக்க வைக்கும் விமானக் கட்டணம் ஆகியவை இதற்கு முழு முதற்காரணங்கள் .

ஆனால் இது எல்லா நாட்டுக்கும் பொருந்தாது . முக்கியமாக அமெரிக்காவுக்கு பொருந்தாது ! அங்கே விமானங்கள் போக்குவரத்தின் அன்றாட தேவை; அதுவும் போக கட்டணங்களும் அங்கு மிக குறைவு. எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்நாட்டில் தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது . அதுவும் போக மற்ற நாடுகள் ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைக்கத் துணிந்தவர்கள் அமெரிக்கர்கள் . அதனால் தான் இந்தப் பொருளாதார நெருக்கடியிலும் அந்நாடு முதன்மையானதாகத் திகழ்கிறது .

 

என்னடா இவன் தலைப்பை விட்டு எதோ சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம். நான் மேல் கூறிய அனைத்திற்கும் இனி வரப்போவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆம்! விமானமும் , நம் வானத்தின் கூரைக்கடியே வாழ்கையும் அவர்களுக்குச் சலித்து விட்டது போலும்.space-elevator-345உலகைவிடவும் வேறு கிரகங்களைத் தங்கள் வீடாக்க அவர்கள் துணித்து விட்டார்கள் , இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த நாடுகள் , அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் (space elevator) மாதிரிகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றன.

என்ன இதுவென்று யோசிப்பீர்கள். இதோ விளக்குகிறேன் . இவை தான் அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருக்கும் வருங்கால வானூர்திகள். இப்போதிருக்கும் ராக்கெட்டுகளை வைத்து விண்ணுக்குப் போக கிலோவுக்கு 10,000 டாலர்கள் செலவாகிறதாம். அனால் இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் எலிவேட்டர்கள்(விண்ணுந்திகள் ) மூலம் ஒரு கிலோ எடையை வெறும் 100 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச்செல்ல முடியுமாம்! சரி, இது எப்படி சாத்தியம் என்று தெரிவதற்கு முன்பு ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .

 Image result for space elevator      ஸ்பேஸ் எலிவேட்டர் என்றால் என்ன ?      

இந்த விண்தூக்கியின் செயற்பாடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்தூக்கியை ஒத்தது . இவற்றின் பிரதான பணி ஆட்களை அல்லது சுமைகளை மேலே தூக்கிச் செல்வது . ஆனால் ஒரு மின்தூக்கியால் மீறிப்போனால் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு மேலே செல்ல முடியாது. இதை புதிய கண்டுபிடிப்பான வின்தூக்கிகளுடன் ஒப்பிட்டால் தெரியும் அவற்றின் சக்தி என்னவென்று ! ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்னும் தூக்கிகளால் பல்லாயிரம் மைல்கள், அதுவும் அசுர வேகத்திற் செல்ல முடியும்!

இது எவ்வாறு சாத்தியம்? இதனை ஒரு சிறு உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நாம் ஒரு சிறு கயிற்றிலோ அல்லது நூலிலோ, அதன் ஒரு முனையில் சிறிய கல்லொன்றினைக் கட்டி அதன் மறுமுனையை கையிற்பிடித்துச் சுற்றும்போது அந்தக்கல் நூலினைச் சுற்றும் வேகத்திற்கேற்ப குறித்தவொரு விசையுடன் வெளித்திசையில் இழுவையினை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் விசையானது, நூலினைத் தொய்வின்றி வைத்திருப்பதைக் காணமுடியும்.

இந்த எளிய பௌதீகச் செயற்பாட்டின் அடிப்படையினைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் விண்தூக்கியினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலையானதோர் அமைவிடத்தில் நீண்ட வடம் ஒன்றின் ஒரு முனையைப் பொருத்தி மறுமுனையை விண்வெளிக்கு எடுத்துச்சென்று மறுமுனையில் ஒரு குறிப்பிட்டளவு நிறையினைப் பொருத்துதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்ட நிறையானது புவிச்சுழற்சியின் காரணமாக புவியுடன் சேர்ந்து சுற்றும். இச்சுழற்சியின் போது ஏற்படுத்தப்படும் விசை, குறித்த வடத்தினைத் தொய்வின்றிப் பேணும். புவிச்சுழற்சி சார்பாக, குறித்த வடம் புவியில் நிலையாக அமைந்திருக்கும். இவ்வாறு நிலையாக அமைந்திருக்கும் அந்த வடத்தினைப் பற்றி பொருள் ஒன்றினை மேல்கீழாக நகர்த்த முடியும்.

இவ்வாறு அந்த வடத்தினைப் பற்றி நகரும் பொருளுக்குப் பதிலாக விண்தூக்கி ஒன்றினை அமைப்பதனூடாக விண்வெளிப் பயணத்தினை இலகுவில் மேற்கொள்ள முடியும் என்பது விஞ்ஞானிகளின் உறுதியான நம்பிக்கை.

பதினைத்து வருடம் முன்பு வரை இந்த விண்தூக்கி என்பது நம் பூமியின் எதிர்காலத்தைக் கணித்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவாகவே இருந்தது . எனென்றால் இந்த விண்தூக்கிகளை ஸ்பேஸ் ரிப்பன் என்னும் கயிறுதான் பாதை மாறாமல் விண்ணிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் . கீழே இருக்கும் படம் இதை நன்கு விளக்கும். 

ஆனால் இந்த விண்கயிறு பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீளக்கூடியதாகவும் , மிகவும் சக்தி வைந்ததாகவும் இருந்தால்தான் விண்தூக்கியைப் பத்திரமாய் அக்கயிற்றால் மேலே தூக்கிச்செல்ல முடியும். பத்து வருடங்களின் முன்புவரை இப்படி ஒரு கயிறு என்பது சாத்தியமில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் ‘நானோ டெக்னாலஜி’ என்னும் புதிய தொழில் நுட்பம் ஒரு வடிவம் உருவாவதின் அடிப்படையையே புரட்டிப் போட்டு இது நிச்சயம் சாத்தியமெனச் சொன்னது !!

     இது எப்படி சாத்தியம் என்பதற்கான பதில் இதோ ….     

தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம்? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா? இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ‘நானோ டெக்னாலஜி’ விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்!!

source: http://vinnummannum.blogspot.com/2011/04/space-elevators.html 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb