தற்காலப் பெண்கள்
திருமணத்தில்
விருப்பமில்லாமல்
இருப்பதற்கு
காரணம் என்ன?
*இந்தக் காலத்தில் பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும், திருமணத்தில் விருப்பமில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம்?*
1. நல்ல குணமான ஆண்கள் அநேகமானோர் அழகில்லாமல் இருக்கிறார்கள்.
2. நல்ல கம்பீரமான அழகான ஆண்கள் நல்லவர்களாய் இருப்பதில்லை.
3. நல்ல கம்பீரமான, குணமான ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கின்றனர்.
4. கம்பீரமான, நல்லகுணமான ஆண்மையுள்ள மனிதர்களாயிருப்பவர்கள் ஏற்கனவே திருமணமானவர்களாக இருக்கிறார்கள்.
5. கம்பீரமில்லாத நல்ல ஆண்களிடம் பணமில்லை.
6. கம்பீரமில்லாத ஆனால் பணம் படைத்த நல்ல ஆண்கள் பணத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்திப்பதில்லை.பணத்துக்குப் பின்னாலேயே போகிறார்கள்.
7. பணமில்லாத அழகான கம்பீரமான ஆண்கள் பெண்ணின் பணத்துக்காகவே வருகிறார்கள்.
8. அழகான கம்பீரமான, குணக் குறைவான, ஆண்மையுள்ள ஆண்கள் பெண்களின் அழகில் திருப்தியடைவதில்லை.
9. பணம் படைத்த,குணமான, ஆண்மையுள்ள, பெண்களிடம் அதிகமான அழகை எதிர்பார்க்காத ஆண்கள் தைரியமற்றவர்களாக பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்கள்.
10. கம்பீரமான அழகான ஆண்மையுள்ள பணம் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் ஆண்கள் வெட்கப்படுபவர்களாக தமது காதலைச் சொல்வதில் தயக்கம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள்.
11. காதலைச் சொல்ல தயங்குகிற ஆண்கள் பெண்கள் தாமாகவே காதலைத் தெரிவித்தவுடன் பெண்கள் வைத்த மரியாதையை விட்டுவிடுகிறார்கள்.
12. கம்பீரமான அழகான ஆண்கள் சில சமயம் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறார்கள். அழகில்லாத ஆண்கள் வீரர்களாக இருக்கீறார்கள்.
o இந்த அளவுகோல் பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டது. இதற்கு விலக்காக சிலர் இருக்கவும் செய்கிறார்கள்.
ஊடலுக்குப் பின் தான் கூடல்கூடலுக்கு பின் மறுபடியும் ஊடல்
திருமணம் முடிக்கப்படாமல் இருக்கக்காரணம் :
திருமணத்திற்கு பின் சுதந்திரம் போய்விடும் என்கிற பயம் காரணமாக இருக்கலாம்… பணம் நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்கிற நினைப்பாக இருக்கலாம்… (இது இரு பாலருக்கும்… பெண்களுக்கு மட்டுமில்லை)
இப்பொழுது பெண்கள் தான் அதிகமான நிபந்தனைகள் இடுகின்றனர். காரணம் பல, இது பற்றி நான் எஎனது நண்பரிடம் விவாதிக்கும் போது அவர் கூறினார். “நல்ல வேளை எனக்கு (அவருக்கு) கல்யாணம் ஆகிவிட்டது என கிண்டலாக கூரினார். அது போல எல்லாருக்கும் திருமணம் நடக்கும். (ஏன், எனக்கே ஒரு பெண் கிடைத்த போது, எல்லாருக்கும் கிடைக்கும்)
1. இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை
2. நல்ல குணமும் கெட்ட குணமும் நிறைந்தவன் தான் மனிதன்
3. அத்தனை நல்ல குணங்களும், அத்தனை கெட்ட குணங்களுடன் ஒருவனிடத்தேயே இருக்க முடியாது.
4. ஒருவரை ஒருவர் நம்ப்பித்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்
5. விட்டுக் கொடுத்து வாழும்போது மகிழ்ச்சி தானாய் வரும்
6. ஊடலுக்குப் பின் தான் கூடல்
7. கூடலுக்கு பின் மருபடியும் ஊடல்
8. சந்தர்ப்பங்கள் மனிதனை நல்லவனாகவும், ராட்ஷனாகவும் தோற்றுவிக்கிறது
9. யதார்த்தங்களைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்
10.பெண்களிலும் தேவதைகளும் உண்டு பிசாசும் உண்டு
11.ஆண்களிலும் நல்லவர்கள் உண்டு ராட்ஷஷனும் உண்டு
இவ்வளவும் சொன்ன பிறகும் வாழ்வதற்கு பயப்படுபவன் தகுதி இல்லாதவர்.