[ கணவன் மனைவி என்ற தாம்பத்திய உறவை முடிவு செய்ய பணம் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்படக் கூடாது.]
ஹிந்து மத புராணத்தில் ஒரு பிரம்மச்சாரி திருமணம் செய்து கொள்ள நினைத்தால், எத்தகைய பெண்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது…
1. அதிகமான கூந்தல் உள்ள பெண்ணை மணக்ககூடாது.
2. கூந்தலே இல்லாத பெண்ணையும் மணக்ககூடாது.
3. கரிய நிறம் படைத்தப் பெண்ணை மணக்கக்கூடாது (இதெல்லாம் ரொம்ப ஓவர்!)
4. அளவிற்கு அதிகமாகவோ, குறைந்தோ அவயவங்களிருக்கும் பெண்ணை மணக்ககூடாது.
5. இழிகுலத்தில் பிறந்த பெண், உடலில் ரோமங்கள் அடர்ந்திருக்கும் பெண், நோயாளியான பெண்களை மணக்ககூடாது.
6. துஷ்டத்தனம் கொண்ட பெண், கடுமையான மற்றும் தோஷமுள்ள வார்த்தைகளை பேசும் பெண்ணை மணக்கக்கூடாது.
7. கொடிய தொற்று நோய் கொண்ட தாய் தந்தையருக்குப் பிறந்த பெண்ணை மணக்ககூடாது.
8. ஆண்மைக்கு அடையாளமாக மீசை முளைத்த பெண், ஆண் தோற்றம் படைத்த பெண், கர் கர் என குரலெழுப்பும் பெண்ணை மணக்ககூடாது.
9. இடைவெளியின்றிக் கூடியிருக்கும் புருவங்களை உடைய பெண், இடைவெளியுள்ள பற்களை உடைய பெண்ணை மணக்ககூடாது.
10. பயங்கரமான முகத்தோற்றம் கொண்ட பெண்ணை மணக்கக்கூடாது. அடேங்கப்பா!
இப்படியெல்லாம் வக்கனையாக பெண்களை தேர்வு செய்ய பல வழிகாட்டுதல்களை (!!!) சொல்லியிருக்கிறார்கள் அந்தக்காலத்தில். மேலும் சென்ற தலைமுறை ஆண்களில் பத்து கண்டீஷன் போட்டு திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காலம் எப்போதுமே சக்கரம் தான். மேலே போன எதுவும் கீழே வந்து தான் ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி ஆயிற்றே. ஆண்கள் இப்படி கண்டீஷன்கள் போட்டு கல்யாணம் செய்தது ஒரு காலம்.
ஆனால் இன்றைய நிலை எப்படி….?
இன்றைய கல்யாணச்சந்தையில் பெண்கள் கண்டீஷன் போடுகிறார்கள். ஆண்கள் கேட்கிறார்கள். நல்லது தானே. தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் பெண்கள் பெற்றிருப்பது வரவேற்க வேண்டிய பெரிய மாற்றம் தானே!
ஆண் பிள்ளைக்குப் பெண்பார்க்க நினைக்கும் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் கேள்விகள் பல இருக்கின்றன. இதோ அவற்றில் சில?
சம்பளம் என்ன? – குறைந்த பட்சம் ஐம்பதாயிறம் இருந்தால் உடனே டிக். இல்லையேல் அத்தகைய ஆண்கள் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்? இருபதாயிரமும் அதற்குக் குறைவாக இருந்தால் உடனே ரிஜெக்டட்.
என்ன படிப்பு? – டாக்டர், இஞ்சினியர், சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட், குறைந்தபட்சம் எம் பி ஏ தேவையாம். ஒரு வேளை உங்கள் வீட்டுப் பிள்ளை பி ஏ, எம் ஏ, பி காம், எம் காம் என்றால் தயவு செய்து ‘பீ காம்’. யு ஆர் ரிஜெக்டட்.
சொந்த வீடு இருக்கிறதா? – இல்லை என்ற பதில் வந்தால் உடனே ரிஜெக்டெட். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினரின் பையனுக்கு நிச்சயம் வரை பேசி முடிவு செய்த பின், பையனுக்கு சொந்த வீடா என்ற கேள்வி எழுந்தது. இல்லை என்ற பதில் வந்ததுதான் தாமதம், உடனே சம்பந்தம் கட் ஆனது. பாவம் ரிஜெக்டெட் மாப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள் “ஸேம் ப்ளட்”.
கூட்டுக்குடும்பமா தனிக்குடும்பமா? – அதாவது அம்மா அப்பா உடனிருந்தால் தனிக்குடித்தனத்தை வலியுறுத்த சிலர் முன்னெச்சரிக்கையாக கேட்கும் கேள்வி. சில பெண் வீடுகளில் பேசும் போதே சூசகமாக பையனின் சம்பளத்தில் வீட்டு வாடகை வேறு கொடுக்க வேண்டுமே..பத்துமா? என்று பொடி போட்டு பேசுகிறார்களாம்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பெண்கள் தாங்கள் யாரோடு வாழவேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளும் உரிமை பெற்றிருப்பது சமூகத்தின் நல்ல மாற்றமே! இஷ்டமில்லாத வாழ்க்கையை கட்டாயமாக யாரும் வாழமுடியாது. எல்லோருக்கும் உணர்வுச் சுதந்திரம் இருக்கிறது. துணையைத் தேடித் திருமணம் செய்ய உரிமையும் இருக்கிறது.
ஆனால் இன்றைய மொத்தப் பெண்களும் தங்களுக்குத் தேவையான ஆண் எத்தகையவன் என்று தெரிவு செய்ய அவர்கள் வைத்திருக்கும் அளவு கோல் எது என்பது தான் மிகுந்த உறுத்தலுக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது. அதாவது இவர்களின் மொத்த அளவுகோலும் பணம் மட்டுமே என்றாகி இருக்கிறது. பணம் பணம் பணம் மட்டுமே அளவு கோல், வேறெதுவும் இல்லை.
நல்ல குடும்பம், படிப்பு, குடும்பத்தைக் காப்பாற்றக் கூடிய நாகரீகமான சம்பளம், அழகு என்று இருந்தாலும் தற்கால பெண்கள் ஆண்களை எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் எதிர் பார்க்கிறார்கள். ஆடம்பர வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிகம் உறுத்தலான விஷயமாக இருக்கிறது எனலாம். அடிப்படை வசதிகள் இருந்தாலும் அது போதாது ஆடம்பர வசதிகளுடன் இருப்பவன் தான் வேண்டும் என்ற பேராசை பெண்களிடம் அதிகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் இப்படித் தெரிவிக்கிறார் “நான் விதவிதமாக ஆடை அணிவேன். ஆடைக்குத்தகுந்த காலனியும் விதவிதமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகும் அப்படி எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கித்தரும் ஆண்மகன் தான் வேண்டும்” என்கிறாள். “ஒரு வேளை திருமனத்திற்குப் பின் அப்படி கணவன் வாங்கித்தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில் “டைவேர்ஸ் பன்னிடுவேன்.” தற்காலப் பெண்களில் பலருக்கு ஆண்மகன் என்றால் நடமாடும் ஏடிஎம் மிஷின், கேட்டதை வாங்கித்தரும் ஜீ பூம் பா பூதம். தாங்கள் நினைத்துப் பார்த்திராத ராஜ போகத்தைக் கொடுக்கப்போகும் ‘சிண்ட்ரெல்லா’ இளவரசன்.
ஒரு டிவி சீரியலில் வரும் காட்சி, ஒரு ஆண் தன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கிறான்.
அந்தப் எண்ணோ “உன்னிடம் காசிருந்தா சொல்லு கட்டிக்கிறேன், இல்லேன்னா வேறாளப்பாரு” என்று பேசுகிறாள். இவையெல்லாம் தற்கால பெண்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவே இருக்கின்றன.
சில பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிளை என்றால் மோகம். இந்த ஆண்மகன் கஷ்டப்பட்டு படிப்பான். அவனது பெற்றோர்கள் வங்கிக்கடனை வாங்கி, வெளிக்கடனும் வாங்கி கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பார்கள். பின் கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசலில் நின்று விசா பெற்று, தட்டித் தடுமாறி ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, அங்கே சென்று அறிமுகம் இல்லாத நபர்கள், புரியாத பாஷை என்று எல்லாவற்றையும் கற்று, கையைக் காலைச் சுட்டு சமைத்துச் சாப்பிட்டு, ஊர் ஊராகச் சுற்றி – வாழும் இடத்தைத் தெரிந்து வைத்து ‘அப்பாடா’ என்று இருக்கும் போது, வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று மோகம் கொண்ட பெண் நோகாமல் கல்யானம் என்ற பெயரில் இவனைக் கட்டிக் கொண்டு அவனோடு போய் செட்டிலாகி விடுவாள். அவனும் இவளுக்கு டூரிஸ்ட் கைடு போல ஊரெல்லாம் சுற்றிக் காண்பித்து மகிழ்விப்பான்.
இவனைப் பெற்ற அப்பாவி அம்மா அப்பாக்கள் கடைசி வரை தன் பிள்ளை குடியிருக்கும் நாட்டை கம்பியூட்டர் போட்டோக்களில் பார்ப்பது தான் மிச்சமாகியிருக்கும். அனுபவிப்பள் என்னவோ கல்யானம் என்ற வியாபாரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை வென்றவளாகத்தான் தான் என்றாகியிருக்கும்.
ஆனால் இதெல்லாம் பேசினால் ஆண்கள் வரதட்சனை வாங்கவில்லையா, நகை கேட்கவில்லையா என்று கேட்கத்தொடங்கி விடுவார்கள். அதையும் பார்ப்போம்.
ஒரு காலத்தில் ஆண்கள் வரதட்சினை கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டானது. அதற்கெதிராக கடுமையான பிரசாரங்களும் வரதட்சினைக் கொடுமைக்கெதிரான சட்டங்களும் உண்டானது. (இப்போது கணவனைப் பழிவாங்க பெண்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஆயுதமாக அது உபயோகப்படுகிறது). ஆனால் அத்தகைய காலத்தில் கூட நயா பைசா வரதட்சனை வாங்காமல் ஏழைப் பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்கள் நிறையபேர் இருந்ததுண்டு.
ஆனால் இன்றைய கல்விகற்ற நாகரீகப் பெண்கள் செய்யும் காரியம் ஆண்கள் செய்த கொடுமைகளைத் திரும்பச் செய்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெண் சமூகத்தின் பழிவாங்கும் படலமாக சில பெண்களாலேயே சொல்லப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவனையே மணமுடிப்பேன் என்று தனக்குத்தானே விலை வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த விதத்திலும் குற்ற உணர்ச்சி என்பதே இல்லை எனலாம். இதெல்லாம் எங்கள் சுதந்திரம் என்ற ரீதியில் செயல்படுவது ஆண்களால் உண்டான சமூக பாதிப்பை விட அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது என்றே என்பதே நிதர்சனம். பெண்கள் இப்படி தனக்குத் தானே விலை பேசி அதற்குத் திருமணம் என்று பெயர் சூட்டிக் கொள்வதை பெண்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் நிலையில் தான் இன்னும் பெண்ணிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் பேசினால் “ஆம்பளைங்க மட்டும் அந்தக்காலத்தில் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள்.
ஒரு விஷயத்தை இதில் குறிப்பிட வேண்டும். அந்த காலத்தில் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யும் ஆண்களை விலைக்கு விற்கப்படும் மாடுகள் என்றும், காசு வாங்கி பிள்ளையைக் கொடுக்கும் ஆண்களின் பெற்றோர்களை, பிள்ளைகளை விற்கும் வியாபாரிகள் என்றும் பெண்கள் அழைத்தனர். பல சினிமாக்கள், டிவி நாடகங்கள் எல்லாம் ஆண்களையும் அவர்தம் பெற்றோர்களையும் இப்படி ஏசித்தான் ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கினார்கள்.
சரி அப்படியென்றால் இந்தக்காலத்தில் அதிக மாதச்சம்பளம் கொடுக்கும் ஆணுக்குத் தான் என்னைத் தருவேன் என்றும், சொந்த வீடும் சொகுசு வாழ்க்கையும் கொடுக்கும் ஆண் யாரோ அவனுக்குத் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்ணையும் கன்னித்தன்மை வியாபாரிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? மாதம் இவ்வளவு பணம் தர முடிந்தால் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்களை வாடகை மனைவிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது? கல்யானம் என்ற பெயரில் கன்னித் தன்மை வியாபாரம் செய்யத்தான் பெண்கள் கல்விகற்றார்களா? என்ற கேள்வி எழுகிறது.
சொகுசான சுகபோகம் கொடுக்கும் பணம் வாய்த்தவனுக்கே என்னைத் தருவேன் என்று கூறும் குடும்பப் பெண்ணுக்கும், பணம் கொடுத்தால் என்னைத் தருகிறேன் என்று கூறும் வேசிப்பெண்ணுக்கும் வித்தியாசம் என்ன இருக்க முடியும்?. ஒரே ஒரு வித்தியாசம் தான். முன்னவளுக்கு ‘மன்த்லி பேமென்ட்’, பின்னவளுக்கு ‘ஒன் டைம் பேமென்ட்’. காசில்லாதவனுக்கு ரெண்டுமே கிடைக்காது. அது தானே நிதர்சனம். காசில்லாமல் கூப்பிட்டால் வேசியும் கிடைக்கமாட்டாள், பெண்டாட்டியும் கிடைக்கமாட்டாள் என்றால் இருவகைப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லை.
ஆனால் இன்றைய கல்யாணச்சந்தை இது தான். அது தான் நிதர்சனம். இன்றைய கல்யாணங்கள் பெண்களாலேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆம், கல்யாணம் என்ற பெயரில் கன்னித்தன்மை வியாபாரம் நடக்கிறது. பணமிருப்பவன் வாங்குவான். பணமில்லாதவன்….???
இதில் பரிதாபம் என்னவென்றால், வரதட்சனைக் கொடுமைக்காக பேசுவதற்கு ஊடகங்கள், சினிமாக்கள், மாதர் சங்கங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய பெண்கள் கல்யாணம் என்ற பெயரில் நடத்தும் கன்னித்தன்மை வியாபாரத்தை விமர்சித்து எழுதவோ, பேசவோ எந்த ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ சமூக ஆர்வலர்களோ இல்லை. தாய்குலத்திற்காக பேசினால் ஓட்டு கிடைக்கும், படம் எடுத்தால் ஓடும். ஆனால் ஆண்களுக்காக பேசினால் காசு பேராது. தேங்காய் மூடி கேஸாகிவிடும். போதாக்குறைக்கு மாதர்குல திலகங்களின் எதிர்ப்புகளையும் வாங்க வேண்டியிருக்குமே! அதனால் அமைதி காக்கின்றனர் போலும்.
ஆண்கள் கூட பெரும்பாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வெட்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. வெளிப்படையாக தாங்கள் திருமணம் செய்ய கஷ்டப்படுகிறோம் என்று கூறிவிட்டால் பெண்களிடம் தோற்றுப்போய் விட்டோம் என்ற தோற்றம் உண்டாகிவிடுமே என்ற ஈகோ தடுக்கலாம்! அதனாலேயே நிறைய ஆண்கள் இது விஷயமாக வெளிப்படையாக வாய்திறப்பதில்லை.
அப்படியென்றால் பணம் குறைவாக இருக்கும் ஆண்கள் யாருக்கும் திருமணம் நடப்பதே இல்லையா! நல்ல பெண்களே கிடையாதா என்று கோபப்பட்டு கும்மியடிக்க கிளம்பி விடாதீர்கள். மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய கல்யாணச் சந்தையின் பொது விதிகள். தங்களிடமே குறை இருக்கும் பெண்கள் சில சமரசங்களுடன் சில ஆண்களை ஏற்றுக்கொள்கிறார்கள். மனப்பூர்வமாக வாழ்கிறார்களா என்பது பெண்களுக்கே வெளிச்சம்! இல்லையென்றால் முருங்கை மரம் தான்! ஒரு சில விதி விலக்குகளும் அவரவர் நிறை குறைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து கட்டிக்கொள்வதும் ஆங்காங்கே சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பொதுவான சமூகத்தின் நிலையென கொள்ள முடியாது.
இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய சமூகத்தில் நடுத்தர குடும்பங்களின் ஆண் பிள்ளைகளும் அவர்தம் குடும்பங்களும் எதிர் கொள்ளும் சங்கடங்களைப் பற்றிய ஒரு அலசலே!
இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு திருமணம் என்பதன் செலவைக் குறைக்க மொத்த சமூகமும் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது வீட்டு விசேஷம் என்ற நிலை வரவேண்டும். அவரவர் வீட்டுப் பூஜை அரையில் பெற்றோர், அவர் உடன் பிறந்தோர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற சிரிய வட்டதின் முன்பாக ஒரு மாலையை மாற்றினோமா அவரவர் விருப்பப்படி தாலி கட்டுவதோ, மோதிரம் போடுவதோ செய்துகொண்டு அப்படியே வீட்டிலேயே சப்பிட்டு அடுத்த நாள் காரியத்தைப் பார்த்தோமா என்று இருக்கத் துவங்கினால் திருமணம் என்பது எல்லோருக்கும் எளிதாக நடக்கும். ஆனால் திருமணம் என்பது ஒரு சமூக நிகழ்வாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு விட்டதால் அந்நிகழ்வு அதிக செலவு பிடிக்கும் காரியமாகிவிட்டது.
சில லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்ய வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்திற்கு வரப்போகும் வரன் அந்த அளவிற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டாகிறது. இதுவே பின்னால் ஒரு வரன் தேடும் குறியீடாக மாறி சமூகத்தைப் பாதிக்கிறது. செலவில்லாத் திருமணமே இப்பிரச்சனைக்கு ஒருவகையில் தீர்வாக அமையக்கூடும். பஞ்சாபில் சீக்கிய குருமார்கள் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்கள். அதாவது அதிக செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்வது தடை செய்யப்படுகிறது என்றும், திருமணம் மிக எளிமையாகவே நடக்க வேண்டும். மீறுவோர் தமது மதக்கோட்பாடுகளை மீறுவதாக விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். காரணம் கல்யாணம் காஸ்ட்லியாகி விட்டால் காசில்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதே!
எது எப்படியோ…! கணவன் மனைவி என்ற தாம்பத்திய உறவை முடிவு செய்ய பணம் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்படக் கூடாது என்பதை இருபாலரும் உணர்ந்தாலொழிய இதற்குத் தீர்வு கிடைப்பது கஷ்டமே!