Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை

Posted on October 4, 2011 by admin

மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை

[ o கோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது.

o எத்தகைய துரோகமும் முஸ்லிம்களுக்கு அச்சத்தை தராது.

o தங்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத குழுவினரை சட்டம் காப்பாற்றாது.]

தேவையற்ற பிரிவினை!

எனதருமை சகோதரர்களே! நீங்கள் இன்று நமது நாட்டை விட்டு புறப்படுகிறீர்கள். இதனால் ஏற்படும் இழப்பு உங்களுக்கு தெரியாது. இனி இந்திய முஸ்லிம்கள் பலவீனமாகி விடுவர். இந்துக்கள் உங்களது மதத்துடன் வேறுபாடு கொண்டவர்கள். ஆனால் ந மது சாதீய முரண்களில் தலையிடுவதில்லை. ஆனால் பாக்கிஸ்தானில் இனி நீங்கள் ஜாதி மோதல்களில் சிக்கிக் கொள்வீர்.

சில முஸ்லிம்கள் பிரிட்டிஷ்காரர்களுடன் கை கோர்த்துக் கொண்டது எனக்கு வருத்தமளிக்கிறது. முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைத்து, பலவீனப்படுத்தி விட்டனர். நம்மிடையே ஒன்றே ஒன்றுதான் எஞ்சியுள்ளது. அதுதான் இஸ்லாம்.

நாம் இஸ்லாத்தை காப்பாற்றியுள்ளோம். இந்தியாவில் இஸ்லாமிய ஒளி, சூரியன் இனி மறையப் போவதில்லை.

தங்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத குழுவினரை சட்டம் காப்பாற்றாது. சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்கெடுக்காதவர்கள் பாக்கிஸ்தானை உருவாக்கினர்.

சுயநலத்துடன் செயல்பட்டு முஸ்லிம்களை பிரிக்கும் பிரிட்டிஷ் சூழ்ச்சிக்கு இரையாகி விட்டனர். பாதகம் நிகழ்ந்துவிட்டது. அரசியல் நிர்வாகம், சமூக பலவீனம் இரண்டிலும் கவனம் செலுத்தவில்லையெனில், இரண்டு நாட்டு முஸ்லிம்களும் காப்பாற்றிக் கொள்ள முடியாது.

பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்களாக கருதிக் கொள்வர். இனி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது சிரமமாகிவிடும். இனி இரண்டு நாடுகளும் ராணுவ வளர்ச்சியில் கவனம் செலுத்தும். சமுதாய வளர்ச்சி நடவாது.

நான் உங்களை அழைத்தேன். நீங்கள் எனது நாக்கை துண்டித்தீர். இருகரம் நீட்டினேன். கைகளை வெட்டி சாய்த்தீர். நகர இயலாமல் கால்களை வெட்டிவிட்டீர். மாற்றம் விரும்பினேன். எனது முதுகெலும்பை நொறுக்கி விட்டீர். இந்த டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உங்களை கேள்வி கேட்கிறது. உயரமான மினரா உமது சரித்திர புகழை கூறுகிறது. மூதாதையரின் கல்லறை கேட்கிறது எங்கு செல்கிறீர்? ”அல்லாஹு அக்பர்…” பாங்கோசை விட்டு ஓடுகிறீர்கள்.

மூளையைக் கொண்டு சிந்திப்பீர். யாருடைய இரக்கத்தை நம்பி பிரிந்து ஓடுகிறீர். இன்று எல்லைக்கோடு விழுந்தது. அச்சத்தால் நிரம்பியுள்ளீர். துப்பாக்கியை சுடுவதற்கு அழுத்தும்போது எதிரி படும் வேதனையில் 10 சதவீதத்தையும் முஸ்லிம் மரண தறுவாயில் படக்கூடாது.

கோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது. எத்தகைய துரோகமும் முஸ்லிம்களுக்கு அச்சத்தை தராது. சிலர் ஓடி விட்டனர். நமது கரத்தை தட்டிவிட்டனர். இதில் வியப்பு ஏதுமில்லை. ஹிஜ்ரத் செய்ய முற்படுவோர் சிந்திக்க வேண்டும். உமது ஈமானை காப்பாற்ற முடியாது. எங்கே போகிறீர் எதற்காக போகிறீர்.

– மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை.

தமிழில் : ஆரெம்

ஜூலை 2011 முஸ்லிம் முரசு

source: http://jahangeer.in/?paged=6

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 71 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb