தற்காலப் பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணம் என்ன?
[ பெற்றோர்களிடையே பிரச்சனை இருந்தால் அந்த குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றன. குறிப்பாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகள் விரைவாக பூப்படைகின்றனர்.
பெற்றோர்கள் பிரச்சனை குழந்தைகளின் மனநலத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன்கள் சுரப்பில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அது குழந்தையை பூப்படையச் செய்துவிடுகிறது.
மேலும் தந்தை இல்லாத, தந்தை வெளியூரில், வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளும் விரைவில் பூப்படைகின்றார்களாம். இதற்கு காரணம் தந்தை என்ற ஆணின் பாசமான அரவணைப்பு இல்லாததால் கார்மோன்களின் செயல்பாடு குழப்பமடைகிறது. இதனால் சீக்கிரம் குழந்தைகள் பூப்படைகின்றனர் என்கிறார்கள்.
இது தவிர தொலைக்காட்சியும் ஒரு முக்கிய காரணியாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தினமும் 3 மணி நேரம் டி.வி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் விரைவில் பூப்படைகின்றனர் என்று இத்தாலிய அறிஞர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும் பெண்கள் விரைவில் பூப்படைவது நல்லதுக்கு அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். உடலும், மனமும் சேர்ந்து ஒன்றாக வளர வேண்டும். மனதளவில் குழந்தையாக இருப்பவர், உடல் அளவில் பெண்ணாக இருப்பது பல ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.]
தற்காலப் பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணம் என்ன?
மனிதனும் பூமியும் ஒன்றுதான். பூமியில் நீர் ஊற்று உள்ளதைப்போல் மனித உடலும் கார்மன் சுரப்பிகளைக் கொண்டது. அந்த சுரப்பிகளை சுரக்க செய்வது அவன் எண்ணங்களே. எண்ணங்கள் கார்மோன் சுரப்பிகளை தூண்டசெய்து “எண்ணங்களைப் போல் வாழ்க்கை” என மானிடனை தூண்டி விடுகிறது.
ஆதிமனிதன் உடலுறுப்பு மீது அதிக காமப்பார்வை செலுத்தவில்லை. ஆனால் நாகரிக மனிதனோ சுற்று சூழலால் அதிக அளவில் சிறு வயது முதலே அவனின் கார்மோன்கள் தூண்டபட்டுவிடுவதால் தான் உடலுறவுக்கு விரைந்து முதுர்ச்சி அடைந்துவிடுகிறான். உதாரணமாக ஒரு பெண் பூப்படைந்த பின்னர்தான் பெண்ணிற்கேற்ற அம்சங்களை பெற துவங்குகிறாள்.
பொதுவாக பூப்படையும் வயது என்பது அவர்களின் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பரம்பரையை பொறுத்தது. ஆனால் சமீப காலங்களில் பெண்கள் பூப்படையும் வயது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. 19-ஆம் நூற்றாண்டில் பெண்ணின் பருவ வயது 16 வயதாகவும், ஆண்களுக்கு 18 வயதாகவும் இருந்தது. அறிவியல் வளர்ச்சியும், மருத்துவ வளர்ச்சியும் இணைந்து பருவ வயதை குறைத்துவிட்டது.
தற்போது பெண்களுக்கு 14 வயதாகவும், ஆண்களுக்கு 16 வயதாகவும் உள்ளது. ஆனால் அந்த கணக்கை மீறி பல்வேறு பூப்படைதல்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, அதிகமாக மருந்து உட்கொள்ளும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தையின் பருவ வயது மிகவும் குறைவாக உள்ளது.
லண்டனில் பிறந்த “லூசியாரீட்”என்ற சிறுமிதான் இதுவரை குறைந்த வயதில் பூப்படைந்ததாக கருதப்படுகிறது. அவளுக்கு தற்பொழுது வயது 14, அவள் 6 வயதிலேயே பூப்படைந்துவிட்டாள். அதன் பின், அவள் சந்தித்த பிரச்சனைகளை அவளே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறாள். “நான் பூப்படைந்து விட்டேன் என்பதே எனக்கு தெரியாது, என்னை பார்த்த என் தாய் தான் அதை கண்டுபிடித்தார். சில நாட்கள் வீட்டில் இருந்தேன். பின்னர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்ள ஆசிரியர்களிடம், எனது பிரச்சனையை பற்றி ஏற்கனவே எனது தாய் கூறி இருந்தார். ஒவ்வொருமுறையும் எனக்கு மாதவிடாய் வரும் போதும், நான் தனியாக இருப்பதாக உணர்வேன். என்னை சுற்றியுள்ள மாணவிகளுக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. எப்படியோ எனது பள்ளி வாழ்வை கடந்து வந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறாள்.
பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தவர்கள், அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்கின்றனர். அதில் ஒன்று “டாக்சிக் அமிலம்” அடங்கிய மருந்துகளை தாயார் உட்கொல்வதுதான் முக்கிய காரணம். இதை தவிர மன ரீதியிலான காரணங்களும் உள்ளனவாம்.
பெற்றோர்களிடையே பிரச்சனை இருந்தால் அந்த குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றன. குறிப்பாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகள் விரைவாக பூப்படைகின்றனர். பெற்றோர்கள் பிரச்சனை குழந்தைகளின் மனநலத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன்கள் சுரப்பில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அது குழந்தையை பூப்படையச் செய்துவிடுகிறது.
மேலும் தந்தை இல்லாத, தந்தை வெளியூரில், வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளும் விரைவில் பூப்படைகின்றார்களாம். இதற்கு காரணம் தந்தை என்ற ஆணின் பாசமான அரவணைப்பு இல்லாததால் கார்மோன்களின் செயல்பாடு குழப்பமடைகிறது. இதனால் சீக்கிரம் குழந்தைகள் பூப்படைகின்றனர் என்கிறார்கள்.
இது தவிர தொலைக்காட்சியும் ஒரு முக்கிய காரணியாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தினமும் 3 மணி நேரம் டி.வி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் விரைவில் பூப்படைகின்றனர் என்று இத்தாலிய அறிஞர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும் பெண்கள் விரைவில் பூப்படைவது நல்லதுக்கு அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். உடலும், மனமும் சேர்ந்து ஒன்றாக வளர வேண்டும். மனதளவில் குழந்தையாக இருப்பவர், உடல் அளவில் பெண்ணாக இருப்பது பல ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உரிய வயதில் பெண் பூப்படை வேண்டும் என்றால், அவரது தாயானவர் உணவு பழக்கத்தை முறைபடுத்த வேண்டும். டாக்சிக் அமிலம் அதிகமுள்ள மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
குழந்தை பிறந்த பின்னர்,அந்த குழந்தை பருவ வயதும் வரும் வரை, அந்த குழந்தையின் பெற்றோர் இடையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். தந்தை, அண்ணன் என்று பாச மிகு ஆண்கள் உடன் இருப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுற்றுச்சூழல் சரி இல்லை எனில் தவறான எண்ணங்கள் உடலின் கார்மோன்களை தவறுதலான எண்ணங்களுக்கு தூண்டப்படுகிறது என்பதே உண்மை.
Thanks regards to Dr. V.C.Vadivudaiyan.