எங்கே செல்லும் இந்தப் பாதை?
அதிரை ஃபாரூக்
அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.
சிதம்பரம் அருகில் கிள்ளை என்ற கிராமத்தில் தான் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு ”’மஹா மாரியம்மன் ஆலயம்” என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலை, மாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்த, பக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.
உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க? பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா.
பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது.
கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்;ள முடியுமா?
இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்;.
காரணம் கணவில் தோன்றி ஆலயம் அமைக்கக் கூறியதாக கரடி விடுவதெல்லாம் மற்ற மதத்தவர்களை விட நம்மவர்களிடம் அதிகம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் தர்ஹாக்களின் வரலாறுகளில் 100 சதவிகிதம் பஷீரா விடும் கணவு புருடாவாகவே இருக்கும்.
வள்ளலாரா? வல்லோன் ரஹ்மானா?
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அமானுல்லாஹ் என்பவர் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னைக்கு வேலை தேடிச் சென்றுள்ளார் ஃபோட்டோகிரப்பராக வேலையும் கிடைத்துள்ளது அதனால் பிறரிடம் யாசிக்க வேண்டியத் தேவை இல்லாத அளவுக்கு வயிறு நிறைந்துள்ளது இதற்கே இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார் அமானுல்லாஹ்.
இதுவும் கிடைக்காமல் கூலித் தொழில் பார்த்தும் யாசித்தும் பிழைக்கக் கூடியவர்கள் எத்தனையோப் பேர் இதையாவது இறைவன் கொடுத்தானே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதைக் கண்டிருக்கிறோம்.
ஃபோட்டோ கிராஃபராக வேலை கிடைத்ததில் அமானுல்லாஹ்வுக்கு வயிறு மட்டும் நிறைந்து வங்கிக் கணக்கு நிறையாமல் இருந்தது வருத்தத்தை அளித்திருக்கிறது. வங்கிக் கணக்கை நிறைக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமானுல்லாஹ்விடம் திடீரென சந்தித்த ஏழுமலை என்கிற சகோதரர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரை தரிசித்தால் காசு கூரையைப் பிய்த்துக்கொண்டுக் கொட்டும் என்றுக் கூற இது தான் சிறந்த வழி என்று அமானுல்லாஹ்வுக்கு பொறி தட்ட வள்ளலாருக்கு கோயில் கட்டி உண்டியலை நிறைத்து அதன் மூலம் வங்கிக் கணக்கை நிறைப்பதற்கும் ஒரு சாய்பாபாவைப் போலவோ, நித்யாணந்தாப்போலவோ, பாபா ராம்தேவைப் போலவோ ஆவதற்கும் ஆசைப்பட்டுவிட்டார் அமானுல்லாஹ்.
வள்ளலாரின் பக்தர்கள் நிறைந்துள்ள வடலூருக்கு ஏழுமலையுடன் சென்று வள்ளலாரின் சரித்திரத்தை தெரிந்து கொண்டுத் திரும்பியதும் தாமதமின்றி வள்ளலாருக்கு கோயில் கட்டி தினந்தோறும் பூஜை செய்து அன்னதானமும் வழங்கி வியாழன் தோறும் சிறப்பு சொற்பொழிவு நடத்த ஆரம்பித்து விட்டார் அமானுல்லாஹ்.
வள்ளலாரை தரிசித்து விட்டு வந்தப் பின்னர் தான் சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்ததாக நிருபர்களிடம் புருடா விட்டுள்ளார் அமானுல்லாஹ்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933)
உலக வாழ்வு அழியக் கூடியதே மறுமை வாழ்வே நிரந்தரமானது என்ற உயர்ந்த கோட்பாட்டை உடைய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த இவர்கள் நிரந்தரமில்லாத உலக சுகபோக வாழ்விற்காக உயர்ந்த கொள்கையை விட்டுக் கொடுத்து வழி கெடுவதற்கு எது காரணம் ?
கடவுள் பெயரைக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி ஏராளமான செல்வங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார்கள் மட்டும் காரணமல்ல.
மாறாக தர்ஹா கட்டி அதில் மன்னறை அமைத்து> ஊதுவத்தி சாம்ப்ரானிக் கொளுத்தி இல்லாத அவ்லியா பெயரில் ஃபாத்திஹா ஓதி பக்தர்களுக்கு மயில் இறகால் மண்டையில் தடவி விட்டு உண்டியலுக்கு பாதி தனக்குப் பாதியை ஒதுக்கி வயிறு வளர்க்கும் முஸ்லீம் பெயர் தாங்கிகளும் அவற்றிற்கு வாக்காலத்து வாங்கும் ஜமாலியாக்களும் முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் வெடித்து சில தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது பல தர்ஹாக்கள் டம்மியாக்கப்பட்டு வெளி ஊர் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக்கப்பட்டது. இதைக் கண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வடிவில் தமிழகத்தில் கால் ஊண்டினான்.
மனிதர்கள் எழுதிய மத்ஹப் சட்டங்களை உண்மைப் படுத்தியும்> ஏகஇறைவனுக்கு இணைவைக்கும் தர்ஹா வழிப்பாட்டை ஆதரித்தும் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் உளறியதை தொலைகாட்சியில் வெளியிடுவதால் அது கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு உற்சாகமூட்டியது. அதனால் கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் கூட்டம் முஸ்லீம்களிலும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.
பீஜேயை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் கேடு கெட்ட செயலில் இவர்கள் இறங்கிக் கொண்டிருப்பதால் அமானுல்லாஹ் ஜின்னா – பஷீரா தம்பதிகள் போல் இன்னும் பலர் நேர்வழியை விட்டு விலகி வழிக்கேட்டில் வீழ்வதற்கு காரணமாக அமைந்தால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மரணத்தருவாயில் கூறிய அல்லாஹ்வின் லஃனத்திற்கு இவர்கள் அஞ்சிக்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (நோய் அதிகமாம்) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே’ரூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்” என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள். என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அறிவித்தார்கள். (நூல்: புகாரி 5815, 5816)