[ தர்ஹாவுக்கு வழி காட்டும், ஈமானை குழிதோண்டிப்புதைக்கும் அறிஞர்களாக உலா வரும் பலர்; அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக இறந்துபோன மனிதர்களை தலையில் வைத்துக் கொண்டாடுவதைக் காணும் பெண்களுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்… அப்படி இருக்கையில் ‘எதில் இருந்தால் என்ன?’ என்று தவறாக விளங்கிக்கொள்வதும் ஒரு காரணம் எனலாம்.
ஈமான் மட்டும் வலுவாக இருந்தால் உயிரே போனாலும் எந்த பெண்ணும் இஸ்லாத்தைவிட்டு வெளியேர மாட்டாள். நமது பெண்களில் எத்தனைப் பேருக்கு ஸஹாபிப் பெண்மணிகளின் வீரமிக்க தியாக வரலாறு தெரியும்? அதைப்பற்றியெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக மிக குறைவு என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சில மஸ்ஜித்களில் பயான் எனும் பெயரில் ஆதரமில்லாத இறைநேசர்களின் கட்டுக்கதைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஸஹாபாக்கள் – ஸஹாபிப்பெண்மணிகளின் வரலாறுகளுக்கு கொடுப்பதில்லை என்பதை மறுக்கும் துணிவு எவருக்கேனும் உண்டா? ]
பூஜை செய்யும் முஸ்லீம் பெண்கள்!
அகில பாரதீயவித்யார்த்தி பரிசத் எனும் பெயரில்செயல் படும் ஃபாசிச காவி கூட்டத்தின் மாணவஅமைப்பின் உழைப்பின் பலனை பாரீர். இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது. ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் ஃபாசிச காவிகளை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.
எச்சரிக்கை சகோதரர்களே! பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள். அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள். ஈஸி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈஸி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெஸேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர். எனவே தயவு செய்து ஈஸி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள் சென்று செய்துகொடுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை. ”இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் முஸ்லிம்கள் இல்லை” என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?, இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது? இதன் பின்னணி என்ன? என்பதனை சிந்திக்க வேண்டுகிறேன்.
சங்கபரிவார பயங்கரவாதிகளின் நூறாண்டு செயல் திட்டத்தின் விளைவு தான் இது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தியா இந்து தேசம்.நீ இங்கே வாழ வேண்டுமெனில் தொப்பி தாடியுடன் நாமும் இட்டுக்கொள். அல்லாஹு அக்பர் என்பதுடன் ஜெய் ஸ்ரீ …. என்றும் சொல். அப்படியெனில் மட்டுமே நீ இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமகனாய் வசிக்க முடியும் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்து அதை செயல்படுத்தும் வெறியோடு பல பிரிவுகளாய் பிரிந்து ஆனால் ஒரே நோக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ். எனும் ஒரே தலைமைக்கு கட்டுப்பட்டு அதி தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.
அரசு துறை அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம், மீடியா,இணையதளம் இப்படி எல்லாவகையிலும் செயல்பட்டு வருகின்றனர். நமக்கோ இயக்க சண்டை போடவும், அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அதை பரப்புவது, பல பிரிவுகளாய் பிரிந்து செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது. ஏதோ இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கவில்லை. சமீப காலமாய் இது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கூட பழனி, சபரி மலைக்கு பாதயாத்திரை செல்வது, விநாயகர் சதுர்த்தி அன்று வரவேற்பு செய்வது, நம் பெண்கள் ஹிந்து சமூகத்தை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த பாஜக தயாராகிவிட்டது. பிரசாரமும் சமூக வலைத்தளங்கள் மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நமது நிலையோ சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள். சமுதாய நலனுக்கு என்று சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து இந்த சமுதாயம் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம். இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள். சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்.
– அம்ஜத் கான்
ஏன் இந்த நிலை? தீர்வென்ன இதற்கு?
சகோதரர் அம்ஜத் கான் அவர்களின் சமுதாய அக்கரைக்கு அல்லாஹ் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக. அதே சமயம் அவர் குறிப்பிட்டுள்ளதுபோல் சமுதாய ஒற்றுமையின்மை மட்டுமே இதற்குக் காரணமல்ல. வேறு சில மிக முக்கிய காரணங்கள் உள்ளன:
முதலாவது வழிதவறிப்போகும் குடும்பத்தைச்சார்ந்த ஆண்கள்; அதுவும் குறிப்பாக குடும்பத்தின் பொருப்புதாரியான தந்தை மற்றும் கணவன்மார்கள். முழுப்பொருப்பும் இவர்களைச்சார்ந்ததே. அந்த முழுப்பொருப்பை அவர்கள் நிறைவேற்ற சமூக அமைப்பு சில நேரம் தடையாக இருப்பதும் உண்மை.
அடுத்து ஈமானை வலுவூட்டும் வகையில் பெண்கள் மார்க்கச் சொற்பொழிவை கேட்கும் சந்தர்ப்பத்தை சரியான முறையில் வழங்க வழிவகை செய்யாத; பெண்கள் அல்லாஹ்வின்மீது உறுதியான அசைக்கமுடியாத நம்பிக்கையை ஏற்படுத்த தவறும் சமூக அமைப்பும் ஒரு காரணம்.
தர்ஹாவுக்கு வழி காட்டும், ஈமானை குழிதோண்டிப்புதைக்கும் அறிஞர்களாக உலா வரும் பலர்; அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக இறந்துபோன மனிதர்களை தலையில் வைத்துக் கொண்டாடுவதைக் காணும் பெண்களுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்… அப்படி இருக்கையில் ‘எதில் இருந்தால் என்ன?’ என்று தவறாக விளங்கிக்கொள்வதும் ஒரு காரணம் எனலாம்.
ஈமான் மட்டும் வலுவாக இருந்தால் உயிரே போனாலும் எந்த பெண்ணும் இஸ்லாத்தைவிட்டு வெளியேர மாட்டாள். நமது பெண்களில் எத்தனைப் பேருக்கு ஸஹாபிப் பெண்மணிகளின் வீரமிக்க தியாக வரலாறு தெரியும்? அதைப்பற்றியெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக மிக குறைவு என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சில மஸ்ஜித்களில் பயான் எனும் பெயரில் ஆதரமில்லாத இறைநேசர்களின் கட்டுக்கதைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஸஹாபாக்கள் – ஸஹாபிப்பெண்மணிகளின் வரலாறுகளுக்கு கொடுப்பதில்லை என்பதை மறுக்கும் துணிவு எவருக்கேனும் உண்டா?
பெண்கள் ஊர் சுற்றுவதை தடை செய்ய முடியாத சமூகம், இன்னும் சொல்லப்போனால் அவர்கள் சினிமா கொட்டகைகளில் நேரத்தைக் கழித்தாலும் தடை செய்யாத சமூகம் அவர்கள் இறையில்லத்திற்கு வந்து இறைநம்பிக்கையின் காற்றை சுவாசிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்குவதை தடை செய்யும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்யும். இதை கூறும்போது உடனே ஒரு சிலர் “மஸ்ஜித்களுக்கு பெண்களை அனுமதித்தால் அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என்று மறுப்பு சொல்லக்கூடும். அவர்கள் இப்படிச் சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் – அதுவும் எப்படிப்பட்ட தூதர்; அனைத்துக்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அகிலத்திற்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் தங்களுக்குள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று தான் அர்த்தம்.
”பெண்கள் மஸ்ஜிதுக்கு வர விரும்பினால் அவர்களை தடை செய்யாதீர்கள் எனும் இறைத்துதர் அவர்களின் சொல்லுக்கு சரியான விளக்கம் பெறாததால் இன்று நமது சமூகப்பெண்கள் மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அருகிப்போய் நிற்கிறார்கள் என்பதுமட்டுமின்றி மஸ்ஜிதில் தொழும்போது ஏற்படும் மன ஓர்மை, இறைபக்தி வீட்டில் தொழும்போது கிடைப்பதில்லை என்பதை ஒவ்வொரு ஆணும் அப்பட்டமாக உணரும்போது அந்த வாய்ப்பினை பெண்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது எந்த வகையில் சரியானது?
மார்க்கத்தை விளங்குவதற்கான; ஈமானை பலப்படுத்துவதற்கான வாசல்களை அடைத்துவிட்டு அவர்கள் வேறு பாதையை நோக்கிப் போவதைப்பார்த்து விட்டு குய்யோ முறையோ என்று புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கிறது? சொல்லுங்கள்!
நமது சமுதாயப்பெண்கள் வழிதறாமல் இருக்க வேண்டுமானால் அவர்களது ”ஈமான் – இறைநம்பிக்கை” உறுதியாக இருக்கத் தேவையான அத்தனை காரியங்களையும் தாமதமின்றி செய்ய வேண்டியது ஒவ்வொரு ஜமாஅத்தின் முக்கிய கடமை என்பதை மறந்திட வேண்டாம். அல்லாஹ் நல்லுதவி செய்வானாக, ஆமீன்.
– எம்.ஏ.முஹம்மது அலீ, Adm. nidur.info