சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுகிறதா?
[ சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும்.
வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.]
புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்துள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் இந்த சுரப்பி, அடிவயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறுவயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது.
முறுக்கிய மீசை, முறுக்கேறிய கைகள், திரண்ட தோள்கள், தீர்க்கமான பார்வை என, ஆண்மைக்கு அடையாளம் கொடுப்பது, “டெஸ்டோஸ்டீரோன்’ என்ற ஹார்மோன். ஆண் பருவ வயதை அடையும்போது, இந்த ஹார்மோன் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் தான், சுருங்கிக் கிடக்கும் புராஸ்டேட் சுரப்பியை வளர்ச்சி பெற செய்கிறது.
இவ்வாறு வளர்ச்சி பெறும் புராஸ்டேட் சுரப்பியில், சுரக்கும் ஒரு வகை திரவம், விந்தணுக்கு ஊட்ட சத்தாகள்ளது. உடலுறவு நேரங்களில், ஆண் உயிரணுக்கள் எளிதாக நீந்திச் செல்ல இந்த திரவம் உதவியாக உள்ளது. ஆண் உயிரணுவுக்கு ஊட்டச் சத்தை அளிக்கும் புராஸ்டேட் சுரப்பி, வயதான நிலையில், “மக்கர்’ செய்ய தொடங்குகிறது. இந்த சுரப்பி வீக்கம் அடைவதால் சிறுநீர் கழிப்பது தடை படுகிறது. சிலருக்கு இந்த சுரப்பியில் புற்று கட்டி உருவாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சிறுநீர் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய், புராஸ்டேட் சுரப்பிக்கு உட்புறமாக வந்து இனப்பெருக்க உறுப்பை அடைகிறது. இதனால், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால், இச்சுரப்பிக்கு உட்புறமாக செல்லும் சிறுநீர் குழாய், இறுக்கமடைந்து, சிறுநீர் வெளியேறுவது தடைபடும். புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது வீக்கத்தை எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனால் அதுவே புற்றுக்கட்டியாக இருந்தால் ஆபத்து.
புராஸ்டேட் சுரப்பி வீக்க மடைய காரணம் என்ன?
புராஸ்டேட் சுரப்பி வீக்கமடைய இதுதான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வயதாகும்போது, ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற நிலையே புராஸ்டேட் சுரப்பில் வீக்கம் ஏற்பட காரணம் என கருதப்படுகிறது. பொதுவாக, 40 வயதுக்கு முன், புராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதில்லை. 50 வயதுக்கு மேற்பட்டோரில் பாதி பேருக்கு, ஏதாவது ஒரு வகையில் புராஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.
புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால், அச்சுரப்பிக்குள் புகுந்து வரும் சிறுநீர் குழாய் இறுக்கப்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. சிறுநீர் வெளியேறுவது தடைபட்டால், உடலின் இயக்கமும் பாதிக்கப்படும்.
அறிகுறிகள் என்ன?
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். ஆனால், சிறுநீர் உடனடியாக வெளியேறாமல் தாமதம் ஏற்படும். சிலருக்கு சொட்டு, சொட்டாக சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்த, பின்பும் சிறுநீர் தானாக வெளியேறும். இரவில், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்த பாதிப்புகள் இருந்தால் புராஸ்டேட் சுரப்பி வீக்கமாக இருக்கும்.
சாதாரண வீக்கத்துக்கு சிகிச்சை என்ன?
சாதாரண வீக்கம் எனில் மருந்து கொடுத்து வீக்கத்தை குறைக்கலாம். சிலருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிகிச்சைக்கு பின் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழலாம்.
புராஸ்டேட் புற்று யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
மது பழக்கம், கொழுப்பு மிகுந்த மாமிசங்களை சாப்பிடுபவர்கள், பாரம்பரியத்தில் அப்பா, தாத்தாவுக்கு இருந்தால், பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தும் விவசாயிகள், பெயின்டர்கள், டயர் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு, புராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு, புராஸ்டேட் புற்று வர வாய்ப்பு குறைவு. மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும், இந்நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஜப்பானியர்கள் அதிகம் மீன் சாப்பிடுவதால், அவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் வருவது குறைவு.
புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை உறுதிப்படுத்துவது எப்படி?
முதல் கட்டமாக ஆசன வாய் வழியாக செய்யப்படும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை மிக முக்கியமானது. இந்த சோதனையில் புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் தெரிந்துவிடும். அந்த கட்டி கல் போன்று கடினமாக இருந்தால் அது புற்றுக்கட்டி என தீர்மானிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நோயாளியின் தேவைக்கு ஏற்ப, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மூலம் நோய் உறுதி செய்யப்படும். மேலும் புற்று கட்டியா என்பதை உறுதி செய்ய திசு பரிசோதனையும் செய்யப்படும். பொதுவாக புற்றுக் கட்டி புராஸ்டேட் சுரப்பியின் வெளிப்புற பகுதியில் தோன்றும்.
இதுதவிர, சிறுநீர் வெளியேறும் வேகம், அடர்த்தியைக் கொண்டும் புராஸ்டேட் சுரப்பியில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் பையிலிருந்து, சிறுநீர் முழுமையாக வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாமல் தேங்கியிருந்தால், பிரச்னை உள்ளது என முடிவு செய்யப்படுகிறது. சிறுநீர் வெளியேறும் தன்மையை அறிய “யுரோ ப்ளோ ஸ்டடி’ சோதனை உள் ளது.
சிகிச்சை என்ன?
புராஸ்டேட் சுரப்பியில் உள்ள கட்டி, புற்று கட்டியாக இருந்தால், அதன் வளர்ச்சியைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது. ஆரம்ப நிலையில் இருந்தால், புராஸ்டேட் சுரப்பி முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளியின் உடல் நிலை, அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றதாக உள்ளதா என பரிசோதிக்கப்படும். தகுதியாக இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆண் ஹார்மோனான, டெஸ்டோஸ்டிரோன், புராஸ்டேட் புற்றுக்கு ஊக்கமளித்து மேலும் வளர செய்வதால், அதைத் தடுக்க, ஹார்மோன் உற்பத்தியாகும் விதைப் பைகள் அப்புறப்படுத்தப்படும். புற்று நோய் முற்றிய நிலையில், கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். நோய் பாதித்த இடத்தில், துல்லியமாக கதிரியக்க சிகிச்சையளிக்கும் வகையில், நவீன பிரேகி தெரபி சிகிச்சை உள்ளது. உலகில் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புராஸ்டேட் புற்று வருவது குறைவு. பெரும்பாலும், 60 வயதுக்கு மேல் வரும். அப்படியே வயோதிகத்தில் நோய் ஏற்பட்டாலும், மிக மெதுவாகத்தான் பரவும்.
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்ஸ அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
கட்டுரை உதவி: ஆர். ஜெயரமன், தலைவர் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை, சென்னை.