மகிழ்ச்சியான உறவுக்குப்பின் முகம் மட்டுமல்ல, உடம்பும் மலரும்!
[ மனைவியுடன் உடலுறவு முடிந்த அடுத்த நிமிடமே தூங்கிவிடும் பழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கள் மனைவியை தூக்க மாத்திரையாகதான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
நல்ல தாம்பத்திய உறவை வழக்கமாக கொண்டிருக்கும் தம்பதிகள், படுக்கையில் புறமுதுகு காட்டும் மற்ற தம்பதிகளை விட நன்றாக, நிம்மதியாக தூங்குகிறார்கள் என்கிறது பாலியல் மருத்துவம்.
கணவன்-மனைவி இருவருக்கும், தனக்கோ தனது துணைக்கோ எந்தவிதமான பாதிப்போ, கெடுதலோ ஏற்படாமல் முழு ஈடுபாடோடு மனமொத்து ஈடுபடுவதே “நார்மல் செக்ஸ்”. இது ஜோடிக்கு ஜோடி மாறுபடும். இருந்தாலும் அதுதான் நார்மல். அறிவியில் ரீதியாகவும், மருத்துவ ரீதியிலான கருத்தும் இதுதான்.
உடலுறவின் சிகரத்தை தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும் போது மனம் அமைதியில் மூழ்கி இருக்கும். இதுபோன்ற சந்தர்பம் வேறு எப்பொழுதும் கிடைக்காது. அந்த நேரத்தில் மனம் விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் அன்பு ஊற்றெடுக்க வைக்கும். பாசப்பிணைப்பை அதிகமாக்கும், ]
தம்பதிகளுக்கு இடையிலான மகிழ்ச்சியான உறவுக்குப்பின் முகம் மட்டுமல்ல உடம்பும் மலரும்.
எல்லாவித வலிகளுக்கும் ஓர் அற்புத அரும்மருந்து உடலுறவு. ஆனால் இவையெல்லாம் அன்பால் இருமனம் இணையும் போது நிகழும் உச்சக்கட்ட இன்பத்தில்தான் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும் என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோருமே தோற்றுபோய் இருக்கிறார்கள்.
“அது ஒரு தும்பல் மாதிரி” ஆரம்பித்த பிறகு நிலைகொள்ளாமல் தவிக்கும். எப்பொழுது வெளிப்படுமோ என்று பதற்றப்பட வைக்கும், முடிந்ததும் அமைதியாகிவிடும் என்று கூறும் அவர் “அப்படியும் கூட திருப்தி அடையவில்லை, அனுபவித்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அது”. அந்த சுகம் எப்படி பட்டது என்றால் யாராலும் சொல்ல முடியாது என்கிறார் வாத்ஸாயனர்.
உறவில் ஆணுக்கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு தெரியாது. பெண்ணுக்கு இதுபோல் எந்த திரவமும் வெளியேறுவதில்லை. ஆனால் அவளும் சுகம் அடைகிறாள். அது எப்படிப்பட்ட பரவச இன்பம் என்பது ஆணுக்கு தெரியாது. இதை எப்படி விவாதிப்பது? எப்படி எழுதுவது? என்று தவித்துபோகிறார் வாத்ஸாயனர். மேலும் அவர், உறவு எந்த கணதில் முழுமை பெறுகிறது என்பதையும் அலசுகிறார்.
“பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடம் இருந்து ஆண் அனைத்து இன்னும் வேண்டும் என்று செயல்படுவாள்” என்கிறார். “வாத்ஸாயனர் காலத்தில்” உடலுறவின் உச்சக்கட்டத்தில் ஆண்களுக்கு விந்தணு வெளியேறுவது போல், பெண்களுக்கும் எதோ ஒரு திரவம் வெளியேறும் என்று மேற்கத்திய நிபுணர்கள் நம்பினார்கள். செக்ஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகமான பிறகுதான், அப்படி எதுவும் பெண்ணிடமிருந்து வெளிப்படவில்லை என்று நம்பத்தொடங்கினார்கள். ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவதில்லை என்று சொன்னார்கள்.
உடலுறவில் ஆண்களுக்கு பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கட்டாயமாக ஓய்வு வேண்டும். மீண்டும் உறவுக்கு முயற்சிக்கும் போது தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. உறவுக்கு முந்தைய விளையாட்டில் தாமதமாக வசப்பட்டாலும் கூட, உறவில் அவர்களிடமிருந்து திரவமாக வெளியேறுவது நடைபெறாத காரணத்தால் ஒரே நிமிடத்தில் கூட திரும்பவும் இன்னொருமுறை உறவில் உச்சக்கட்டத்தை அடைய அவர்களால் இயலும். இதனால்தான் உறவு முடிந்ததும் விலக முயலும் ஆணை இறுக்கமாக அனைத்து கொள்கிறாள் பெண் என்று நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள்.
செக்ஸ் உறவு முடிந்த அடுத்த நிமிடமே தூங்கிவிடும் பழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கள் மனைவியை தூக்க மாத்திரையாகதான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலடிக்கிறார்கள். “வாத்ஸாயனர் ” இது மிகவும் தவறு என்கிறார். உறவு முடிந்த களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டி திரும்பி படுக்கக்கூடாது, இருவரும் அன்போடு கட்டித்தழுவி முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தை தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமில்லாத அன்புதான் அதில் இருக்க வேண்டும். உடலுறவின் சிகரத்தை தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும் போது மனம் அமைதியில் மூழ்கி இருக்கும். இதுபோன்ற சந்தர்பம் வேறு எப்பொழுதும் கிடைக்காது. அந்த நேரத்தில் மனம் விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் அன்பு ஊற்றெடுக்க வைக்கும். பாசப்பிணைப்பை அதிகமாக்கும் என்கிறார் “வாத்ஸாயனர்”.
நல்ல தாம்பத்திய உறவை வழக்கமாக கொண்டிருக்கும் தம்பதிகள், படுக்கையில் புறமுதுகு காட்டும் மற்ற தம்பதிகளை விட நன்றாக, நிம்மதியாக தூங்குகிறார்கள் என்கிறது பாலியல் மருத்துவம். அதற்கும் ஆக்சிடோசினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். உறவின் உச்சத்தின் போது சுரக்கும் ஆக்சிடோசின் இயல்பான, தெளிவான அதே நேரம் உற்சாகமான மனநிலையைத் தருகிறது என்கிறார்கள். அதேநேரம் பயத்தையும் படபடப்பையும் குறைக்கிறதாம்.
அடிக்கடி உறவு கொள்வது மன அயுத்தத்தை மட்டும் அல்ல, உயரும் ரத்த அயுத்தத்தையும் கட்டு படுத்துகிறதாம். மேலும் மருத்துவம் சொல்கிறது, அடிக்கடி ஜலதோஷம்,”புளு காய்ச்சல்”என்று அவதிப்படுபவர்களுக்கு செக்ஸ் சரியான தீர்வு என்கிறார்கள். செக்சாலாஜிஸ்டுகள். காரணம் உடம்பின் நோய் எதிர்ப்புத் தன்மையைத் தூண்டி, வேலை செய் என்று உற்சாக படுத்துகிறதாம் செக்ஸ். வாரந்தோறும் குறைந்தபட்சம் இருமுற உறவு கொள்வது “இம்யூனோ குளோபுலின் ஏ” என்ற எதிர் உயிரி உருவாக்கத்தை ஊக்குவிக்கிரதாம். ஜலதோஷம் மற்றும் பொதுவான நோய் தொற்றுகளுக்கு எதிரான தடுப்புச் சுவராக செயல்படுகிறது “இம்யூனோ குளோபுலின் ஏ”.
செக்ஸின் போது சுரக்கப்படும் எண்டார்பினை, தீயவிளைவுகள் இல்லாத இயற்கை போதைபொருள் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஒரு நல்ல திருப்தியான உறவுக்குப் பின், தம்பதியற்குள் அவரவரை பற்றியும், தங்கள் வாழ்க்கையை பற்றியும் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் எழும்புகிறதாம்.
“நான் தான் உலகத்திலேயே மகிழ்ச்சியான ஆள்”என்று மனம் துள்ளும் என்கிறது மருத்துவம். இதற்கு காரணம் செக்ஸின் போது சுரக்கப்படும் எண்டார்பின் என்ற இயற்கை போதை பொருள் போன்ற இந்த திரவம் தான். தீவிரமான உறவுக்கு பின், ஆரோக்கியம் அழகு தரும் எண்ணங்களால் மனிதனின் தேகம் பூக்கிறது என்று செக்ஸாலாஜி கூறுகிறது. அதிகரிக்கும் ரத்த ஓட்டம் தேகத்துக்கு ஓர் ஆரோக்கியமான மினுமினுப்பை தருகிறது. தம்பதிகளுக்கு இடையிலான சந்தோஷமான உறவுக்குப்பின் முகம் மட்டும் மலராது, உடம்பும் தான் என்கிறார்கள். உடம்பை கச்சிதமாக வைத்திருக்க செய்யும் உடற்பயிற்சிகளும், யோகாவும் செக்ஸிற்கு முன்னாள் தோற்று போகும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். காரணம் ஒரு விறுவிறுப்பான செக்ஸ் செயல்பாடு, கலோரிகளை எரித்து எடை குறைவுக்கு உதவுகிறதாம்.
செக்ஸின் போது 30 நிமிடங்களில் 150 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. சராசரியாக தம்பதிகள் வாரம் மும்முறை 25 நிமிடங்கள் உறவு வைத்துகொள்கிறார்கள் என்று கணக்கிட்டு 450 கலோரிகள் எரிக்கபடுகின்றன என்கிறார்கள். உற்று கவனித்தால் செக்ஸிற்கு பிறகு மனிதனின் புலன்கள் கூர்மையாவதை உணர முடியும்.
குறிப்பாக உறவின் பின் “புரோலாக்டின்”என்ற ஹார்மோன் உற்பத்தி விறுவிறுப்படைகிறது. அது மூளையில் மோப்பம் பிடிக்கும் பகுதியான “ஆல்பாக்டரி”பகுதியில் புதிய நியூரான்கள் தோற்றத்தை தூண்டுகிறதாம். அதனால் செக்ஸுக்கு முன்பை விட செக்ஸுக்கு பின்பு நன்றாக நுகர முடியும், அதுமட்டுமின்றி உறவின் போது நாடித்துடிப்பு 70-ல் இருந்து 150 வரை கூடுகிறது. பாலுறவின் போது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. ஆக மூளைக்கு பாயும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. உடம்பு முழுவதும் புத்துணர்வு ஊட்டும் புது ரத்தம் பாய்கிறது. அதே நேரம் பழைய கழிவு பொருட்கள் வெளியேற்ற படுகின்றது. இப்படி இருவர் அன்பால் நெருங்கும் உடலுறவால் ஆரோக்கியத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
செக்ஸின் அடிப்படியே ஆசைதான். சாதாரணமான நேரங்களில், மனிதன் மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு செக்ஸ் அவசியப்படுவதில்லை. ஆனால் அவன் எண்ணம் செக்ஸ் பக்கம் திரும்பும் போது மட்டும் தான், அவன் உடல் கூறுகள் அவன் எண்ணத்திற்கு ஏற்ப உறுப்புகளையும் தயார்நிலை படுத்துகிறது. மனம் நினைக்க வேண்டும் உடல் ஒத்துழைக்க வேண்டும்.
“நார்மல் செக்ஸ்” என்றால் என்ன?
கணவன்-மனைவி இருவருக்கும், தனக்கோ தனது துணைக்கோ எந்தவிதமான பாதிப்போ, கெடுதலோ ஏற்படாமல் முழு ஈடுபாடோடு மனமொத்து ஈடுபடுவதே “நார்மல் செக்ஸ்”. இது ஜோடிக்கு ஜோடி மாறுபடும். இருந்தாலும் அதுதான் நார்மல். அறிவியில் ரீதியாகவும், மருத்துவ ரீதியிலான கருத்தும் இதுதான். ஆனால் எல்லாவற்றையும் மனித எண்ணங்கள் தான் நிர்ணயிக்கின்றன என்பதுதான் உண்மை.
Thanks regards to Dr. V.C.Vadivudaiyan.