‘உன் நச்சரிப்பு தாங்க முடியல’
(( சுவையான ஆய்வு ))
`உன் நச்சரிப்பு தாங்க முடியல’ அடிக்கடி கேட்கும் வசனம் இது. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், உறவுகளில் விரிசல் விழவும் காரணமாக இருப்பது இந்த நச்சரிப்பு. தொண தொண என அரிப்பதில் ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. இப்படி நச்சரிக்கும் ஒவ்வொரு வரும் நாம் அவரின் / அவளின் நன்மைக்குத் தானே சொல்கிறோம் என எண்ணுகிறார்கள். `நாம் சரியாகத்தானே செயல்படுகிறோம், பிறகு ஏன் நம்மை புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்?, இனி நானும் அவர் சொல்வதை கேட்க மாட்டேன்’ என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். இதுதான் விரிசலின் அடித்தளம்.
o மனைவி தொணதொணப்பு உங்களை பாடாய்ப்படுத்துவதாக கருதுகிறீர்களா? `உடற்பயிற்சி செய்யுங்கள். குடிக்க வேண்டாம். வெளி உணவுகளை உண்ண வேண்டாம். இந்தாங்க மருந்து சாப்பிடுங்க’ இப்படியெல்லாம் அவர்கள் சொல்லாவிட்டால் உங்களால் இப்போதிருப்பதுபோல் நலமாக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். பெண்கள், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யாதீர்கள்? என்று நச்சரிப்பதெல்லாம் நன்மையாக முடிகிறது என்று உணர முடிகிறதல்லவா? ஆண்கள் நலமாக இருப்பதற்கும், ஏன் உயிரோடு இருப்பதற்கும் கூட பெண்களின் நச்சரிப்பு காரணம் என்று சொல்லலாம்.
o ஆண்களும் நிச்சயமாக தொணதொணக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக மனைவியை குறைகூறுகிறார்கள், தப்பு கண்டுபிடிக்கிறார்கள், குற்றம்சாட்டி முனகுகிறார்கள். பெண் ணின் நன்மைக்காகத்தான் அவர்களும் இதைச் செய்கிறார்கள். ஆண்களின் பார்வையில் தொணதொணப்பு எனப்படுவது மறந்த விஷயங்களை மறைமுகமாக அல்லது எதிர்மறை யாக நினைவூட்டுதல் ஆகும். `மனைவியின் தொணதொணப்பு தான் என் வாழ்வின் ஒரே பிரச்சினை’ என்று புலம்பும் குடும்பஸ்தர்கள் ஏராளம். நச்சரிப்பு தாங்காமல் மனைவியை கொலை செய்ததாக குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.
o பெரும்பாலும் தொணதொணத்தல் மற்றவரை நேர்வழிப்படுத்தவே சொல்லப்படுகிறது. நாம் நச்சரிக்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிந்தா லும் அதனால் நன்மை விளையும் என்று எண்ணி தொடர்ந்து தொணதொணக்கிறார்கள். ஆனால் நச்சரிக்கப்படுபவருக்கு இது சுத்தமாக பிடிப்ப தில்லை. ஏனெனில் அவர் ஓய்வாக இருக்க விரும்பும் நேரத்தில் இது நடப்பதால் எரிச்சலை கிளப்பி விடுகிறது. அதில் இருந்து தப்பிப்பதற் காக அவர் உம்மென்று இருப்பார். அல்லது டி.வி., கணினியில் மூழ்குவார். ஆனால் இது நச்சரிப்பவருக்கு மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முரண்பாடும், விரிசலும் ஏற்படுகிறது.
o பெண்களே அதிகம் தொணதொணப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அவர்களின் மூளை அமைப்பில் பேச்சுத்திறன் பகுதி பரந்து விரிந்துள்ளது. இதனால் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சும் பல விஷயங்கள் கலந்ததாக இருக்கிறது. இதை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாததால் அவர்கள் பலவற்றை மறந்து விடுகி றார்கள். இதனால் பெண்களின் ஞாபகப்படுத்தலும், நச்சரித்தலும் தொடர்கிறது. அவர்க ளுக்கு அந்த சிறுசெயலின் தொடர்ச்சியில் வாழ்க்கை இருப்பதால் பெண்கள் அதை ஞாபகப்படுத்தியே தீர வேண்டியுள்ளது. இதை ஆண்கள் புரிந்து கொள்ளாத போது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது.
o தனது பணியில் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் உள்ள பெண்கள் அதிகம் தொண தொணப்பது இல்லையாம். தீவிர காதலில் இருக்கும் பெண்களும் அதிகம் நச்சரிக்க மாட் டார்களாம். அவர்கள் காதல் கற்பனைக் காட்சி களில் லயித்து இருப்பதாலும், காதலருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாலும் தொண தொணப்பு குறைகிறது. கவர்ச்சியான பெண்கள் தங்கள்அழகை மேம்படுத்திக் கொள்வதிலேயே அதிக அக்கறையுடன் இருப்பதால் அவர்கள் யாரிடமும் தொணதொணப்பது இல்லையாம். ஆனால் உறவில் ஈடுபடும்போது மட்டும் இவர்களின் தொணதொணப்பு அதிக மிருக்கிறதாம்.
o மிக நெருக்கமான உறவுகளுக்குள்தான் தொணதொணப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள அம்மாவோ, மனைவியோ அதிகம் தொணதொணக்கிறார்கள். பொது இடத்தில் வைத்து ஏதாவது ஒன்றை காரணம் காட்டி ஏற்கனவே நடந்த அற்ப விஷயங்களையெல்லாம் அள்ளிவிடுவது பெண்களின் குணம். இது ஆண்களுக்கு அறவே பிடிப்பதில்லை. பெண் கள் பல விஷயங்களை மறைமுகமாக சொல்கிறார்கள். இதுவும் பிரச்சினைக்கு காரணம். வெளிப்படையாக சொல்வதே ஆண்களை பொறுத்தவரை பிரச்சினைக்குத் தீர்வு காண வசதியாக இருக்கும்.
o தொணதொணப்பின் அடித்தளம் உண்மை சார்ந்தது. வெறுப்பு, வேறுபாடு, எதிர்பார்ப்பு எல்லாம் அடங்கிய உண்மை தான் நச்சரிப்பு. எனவே தொணதொணப்புக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட இருவருமே ஏற்றுக்கொள்ளும்போதுதான் தீர்வு கிடைக்கும். பிரச்சினையை விளக்கும் பேச்சானது, 1. அவரது தவறான நடத்தையை விளக்குவதாகவும், 2. உங்கள் நிலைமையை புரிந்து கொள்ள வைப்பதாகவும், 3. உங்களின் பாசத்தை வெளிப்படுத்துவ தாகவும், 4. அவரது நடத்தையால் ஏற்படும் பின் விளைவை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்தால் சுமூக தீர்வு கிடைக்கும். உறவு விரிசல் ஏற்படாது.
o பொறுப்பான பெற்றோர் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையால் இயல்பாகவே தொணதொணக்கிறார்கள். பிள்ளைகள் சரியாக நடக்காததற்கு பெற்றோரே காரணம் என்று சொல்லலாம். ஏனெ னில் அவர்களின் வளர்ப்பு முறையே குழந்தை களின் வாழ்க்கை முறையாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை குறை சொல்வதால் தீர்வு கிடைக் காது. அவர்கள் முரண்டு பிடிப்பார்கள், உங்களை வெறுக்கவும், விலகிச் செல்லவும் துணிவார்கள். எனவே பெற்றோர் நச்சரிப்பதற்குப் பதிலாக உறுதி யான நடவடிக்கை, சிறிய தண்டனையின் மூல மாக குழந்தைகளை வழிநடத்தினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக மலரும்.
o பல நேரங்களில் தொணதொணப்பு பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. நீ, நான், எனது என்ற சொற்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் பிரச்சினைகளை அணுகினால் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஏனெனில் நீ என்ற சொல் தன்னை மேல்நிலைப்படுத்தி மற்றவரை குறைகூறுவதாக அமைகிறது. `நீ என் மீது அக்கறையில்லாதவன்’ என்பதற்குப் பதிலாக, `நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கிறேன், என்னை புரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்வது உங்கள் பேச்சை கேட்கவும், தேவையை நிறைவேற்றவும் வைக்கும். மனைவி தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்ததுபோல பேசுகிறாள் என்று நினைப்பது ஆசையை அறுத்து பிரிவை அதிகரிக்கும்.