சிறுநீரகம்
இறைவனின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமாவை. மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் விஷயங்கள் எத்தனை எத்தனை! மனித உடலின் இயக்கமும் அப்படித்தான் நம்மை வியக்க வைக்கிறது. அவரை விதை வடிவத்தில், சிறிதாக இருக்கும் சிறுநீரகம் (Kidney) தான் என்னவெல்லாம் செய்யுது.
உலகத்திலேயே மிகச் சிறந்த “ஃபில்டர்’ சிறுநீரகம்தாங்க. ஒரு நிமிஷத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து சம அளவில் இருக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. அமில – காரத் தன்மையின் சமநிலையைக் காக்கிறது. இவ்வளவுக்கும் மேல ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குப் பயன்படுதுங்க. சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாய்ட்டின் (Erythopoietin) என்ற ஹார்மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் குறை வரும்போது ரத்தசோகை ஏற்படுது.
இந்த நன்மை எல்லாம் கிட்னி செய்யுது, சரி, இதெல்லாம் செய்யாமப் போனால் என்ன நடக்கும்? அங்கதாங்க பிரச்சினையே ஆரம்பிக்குது! ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் ரத்தம் அசுத்தமாக இருக்கும். தேவையற்ற உப்பு, தாதுப்பொருள்கள் உடலில் பெருகும். இதனால் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்படும். இறுதியில் உடல் சமச்சீர் நிலையை இழந்து மரணம் ஏற்படும்.
இதுல வேடிக்கை பாருங்க, நம்மில் பலருக்கு சிறுநீரகம் எங்க இருக்குதுனே தெயாதுங்க. இனப்பெருக்க உறுப்புதான் சிறுநீரகம் எனத் தவறாக எண்ணுபவர்கள் பலர். இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். அதன் எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம். சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு ரொம்ப முக்கியமுங்க. அளவு குறைந்தோ அல்லது கூடியோ இருந்தால் சனி பிடித்துவிட்டான் என்று எண்ணிக் கொள்ளவேண்டியதுதான். ஏதோ ஒரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
புதிதாகப் பொருத்தப்பட்ட மாற்றுச் சிறுநீரகம் :
இதயம் எப்படி உடலின் ஆதார சுருதியாக உள்ளதோ அதுபோல் சிறுநீரகத்தின் ஆதார சுருதியாக இருப்பது ரத்த வடிகட்டிகள்(Nephrons)தான். இந்த வடிகட்டிகள் செயல்படவில்லையெனில் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என, இரண்டிலும் சேர்த்து மொத்தம் 20 லட்சம் வடிகட்டிகள் உள்ளன. இந்த வடிகட்டிகள் சல்லடை போன்றது. இதற்குள் பாய்ந்து வரும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி, சுத்தமான ரத்தத்தை மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது. எஞ்சிய கழிவுகள் சிறுநீர்ப் பையில் சேர்ந்து பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த வடிகட்டிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
சிறுநீரகப் பாதிப்புன்னா என்னங்க? நம் நாட்டைப் பொருத்தவரை உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்குத்தாங்க சிறுநீரகம் ரொம்ப பாதிக்குது. இந் நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிறுநீரகப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் இருந்தா என்னவாகும்? ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தா அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ரத்தக் குழாய்கள் சேதமடையும். ரத்தக் குழாய் சேதமடையும் போது சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகள் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு ஓரு நாள்களில் நடந்துவிடாது. பலர் தங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதே தெயாமல் விட்டுவிடுவார்கள். நாளடைவில் சிறுநீர் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு, வடிகட்டிகளும் சேதமடையும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயாளிகளுக்கும் இதே போலத்தான். ரத்தத்தில் சர்க்கரை அதிகக்கும்போது ஒருவித நச்சுப் பொருள் உருவாகிறது. இந்த நச்சுப் பொருள் ரத்தக்குழாய்களைச் சேதப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரக வடிகட்டிகளும் சேதமடைகின்றன.
கிருமித் தொற்று :
சிறுநீர்ப் பாதையில் தொற்றுக் கிருமிகள் தாக்கும்போது உடனே உய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் இதை அசட்டை செய்து விடுவார்கள். நாளடைவில் கிருமிகள் சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகளைப் பதம் பார்த்துவிடுகின்றன.
சிறுநீரகக் கற்கள் :
சிறுநீரகப் பாதிப்புக்கு மற்றொரு முக்கியக் காரணம் சிறுநீரகக் கற்கள். கற்கள்ன்னு சொன்னா ஏதோ அசி, பருப்புலே கிடக்கும் கல்லுனு நினைச்சுராதீங்க. உடலில் இயற்கையாக உருவாகும் ரசாயனப் பொருள்கள், சிறுநீரகம் அல்லது சீறுநீரகக் குழாயில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து கல்லா மாறிடுது. கல் உருவானால் சிறுநீர் வெளியேறுவது தடைபட்டு நாளடைவில் சிறுநீரக வடிகட்டிகள் பாதிக்கப்படும். இது தவிர வலி மாத்திரைகளைச் சாப்பிடுவது, சிலருக்கு மரபு ரீதியான பிரச்சினைகளாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு.
அறிகுறிகள் தெயாது :
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடனடியாக எந்த அறிகுறியும் தெயாது. இதனால்தான் பலர் ஏமாந்து போறாங்க. ஆரம்பத்திலேயே தெயாம போறதுனால சிறுநீரகங்கள் செயல்திறனை இழந்து டயாலிசிஸ் (செயற்கை முறையில் கழிவுகளை அகற்றுவது) செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறுதியில் வேறு வழியில்லை என்ற நிலையில் மாற்று சிறுநீரகத்தைத் தேட வேண்டியதாகிறது.
அறிகுறிகளை எப்படித் தெரிந்துகொள்வது ?
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். பசி இருக்காது. உடல் சோர்ந்து போவதுடன் எரிச்சல் ஏற்படும். கை, கால் மூட்டு அல்லது கணுக்காலில் வீக்கம் தோன்றும். ரத்த அழுத்தம் அதிகக்கும். ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் ரத்தசோகை வரும். வாந்தி, பசியின்மை போன்றவை வேறு காரணங்களாலும் வரலாம். என்னமோ ஏதோ என அலறவேண்டாம். சிறுநீரகத்தில்தான் பாதிப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய சிறுநீர்ப் பசோதனை செய்வது அவசியம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட 6 மாதத்துக்கு ஒரு முறை சிறுநீர்ப் பசோதனை செய்து கொள்வது நல்லது.
மைக்ராஸ்கோப் மூலம் :
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எளிய பசோதனை மூலம் முன்கூட்டியே கண்டுபிடித்துவிட முடியும். அதாவது சிறுநீல் புரதம் (ஆல்புமின்), சர்க்கரை, அதிகமாக இருந்தால் உஷாராகிவிடுங்கள். உடனடியாக சிறுநீரக சிறப்பு மருத்துவடம் சென்றுவிடுங்கள். “ஆல்புமின் ட்ரேஸ்’ என்று இருந்தால்கூட அலட்சியப்படுத்தி விடக் கூடாது. மருத்துவன் ஆலோசனைப்படி சிகிச்சை தேவையா – இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்.
சிறுநீரை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால் Cast என்ற பொருள் தெரியும். அதாவது சிறுநீரக வடிகட்டிகளின் செதில்கள் (இச் செதில்கள் பாம்பு தோல் உரித்ததுபோல் இருக்கும்.) சிறுநீல் இருந்தால், பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்ற முடிவுக்குவந்துவிடலாம்.
அதற்கு மேல் தேவைப்பட்டால் ரத்தப் பசோதனை மூலம் சிறுநீர்ப் பாதிப்பை உறுதி செய்துவிடலாம். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் ரத்தத்தில் பொட்டாஷியம் அதிகமாகவும் கால்ஷியம் குறைவாகவும் இருக்கும். சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கழிவுப் பொருள்கள் உடலில் வெளியேறாமல் இருந்தால் என்னவாகும். உடல் நிலை சீர்குலைந்து விரைவில் மரணம் ஏற்படும்.
டயாலிசிஸ் :
இந் நிலையில் சிறுநீரக வடிகட்டிகள் செய்த வேலையைச் செயற்கையான கருவி மூலம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவி மூலம் செயற்கை முறையில் கழிவுகளை வெளியேற்றுவதுதான் டயாலிசிஸ் ஆகும். டயாலிசிஸ் இரு வகைப்படும்.
ஹீமோடயாலிசிஸ், பெடோனியல் டயாலிசிஸ் என இரு வகை டயாலிசிஸ் உள்ளன. இரு வகை டயாலிசிஸ்களிலும் நிறை, குறைகள் உள்ளன.
ஹீமோடயாலிசிஸ் :
ஹீமோடயாலிசிஸ் முறையில் சிறுநீரகம் செய்ய வேண்டிய பணியை டயாலிசிஸ் இயந்திரம் செய்யும். நோயாளியின் ரத்தம் இந்த இயந்திரம் வழியாகச் செலுத்தப்படும். அங்கு ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமான ரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். இந்த டயாலிசிஸ் முறையில் உடல் முழுவதும் உள்ள ரத்தத்தைச் சுத்திகக்க 4 மணி நேரம் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டியதிருக்கும்.
ஹீமோடயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர்க் கட்டுப்பாடு உண்டு. டாக்டன் ஆலோசனைப்படி என்ன சாப்பிடலாம் எவ்வளவு சாப்பிடலாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். தொடர்ந்து ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிக்கு “ஃபிஸ்டுலா’ என்ற சிறு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். இந்த அறுவைச் சிகிச்சையில் நோயாளியின் கையில் உள்ள சிரையும் தமணியும் இணைக்கப்படும்.
பெடோனியல் டயாலிசிஸ் :
ஹீமோடயாலிசிஸில் முறையில் இயந்திரம் வழியாக ரத்தம் செலுத்தப்பட்டு சுத்திகக்கப்படுகிறது. ஆனால் பெடோனியல் டயாலிசிஸில், சுத்திகப்பு உடலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.
ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் டயாலிசிஸ் செய்து நீண்டநாள்கள் உயிர் வாழ வைக்க முடியும். ஆனால் அடிக்கடி டயாலிசிஸ் செய்வது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும். நீண்ட நாள்கள் டயாலிசிஸ் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராது.
எனவே சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு நிரந்தரத் தீர்வு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதுதான்.
மாற்று சிறுநீரகம் :
யங் எய்ட் கருவி போல கடையில் வாங்கிப் பொருத்தக்கூடியது அல்ல சிறுநீரகம். விபத்து உள்பட வேறு சில காரணங்களால் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவன் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்துவதே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. ஆனால் நம் நாட்டைப் பொருத்தவரை மூளை இறப்பு மூலம் சிறுநீரகம் தானம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
நெருங்கிய உறவினடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்துவதுதான் தற்போது அதிகமாக நடைமுறையில் உள்ளது.
ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு மட்டும் உயிர் வாழ முடியும். எனவே நெருங்கிய உறவினர் ஒருவன் ஒரு சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து நோயாளிக்குப் பொருத்தலாம்.
சிறுநீரமகத்தைத் தானம் கொடுப்பவர் முதலில் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாதவராக இருக்கவேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் இருக்கக்கூடாது. சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகத்தில் கிருமித்தொற்று இருக்கக்கூடாது.
எனவே தானம் கொடுப்பவன் சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை ரத்தப் பசோதனை உள்படபல்வேறு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தானம் கொடுப்பவன் சிறுநீரகம் நல்லா இருக்கு. உடனே ஆபரேஷன் செய்து எடுத்து நோயாளிக்குப் பொருத்திவிட முடியுமா?
நிச்சயமாக முடியாது. தானமாகக் கிடைக்கும் சிறுநீரகத்தை நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளவேண்டும். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மிக முக்கியமான விஷயம் இதுதான். இல்லையெனில் எல்லாம் வீணாகிவிடும்.
தானம் கொடுக்கப்படும் சிறுநீரகம் நோயாளியின் உடலுக்குப் பொருந்துமா எனக் கண்டறிய பல்வேறு சோதனைகள் உள்ளன.
ரத்தப் பிவு சோதனை: சிறுநீரகம் கொடுப்பவன் ரத்தப் பிவும் பெற்றுக்கொள்பவன் ரத்தப் பிவும் ஒரே வகையைச் சார்ந்ததா அல்லது பொருந்தும் வகையைச் சார்ந்ததா எனத் தெந்து கொள்ளவேண்டும்.
பொருத்தும் ரத்தப் பிவுகள் :
ஓ – ஓ ஏ – ஏ அல்லது ஓ பி – பி அல்லது ஓ ஏபி – ஏபி, ஓ, ஏ, அல்லது பி.
ரத்தப் பிரிவு பொருந்திவிட்டால் அடுத்து திசுப் பசோதனை. தானம் கொடுப்பவன் திசு வகைகளும் நோயாளியின் திசு வகைகளும் ஒத்த தன்மை உடையனவா எனப் பசோதிக்கவேண்டும். பொதுவாக மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் சிறுநீரகத்தைவிட நெருங்கிய உறவினர்களிடம் (பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தோர்) இருந்து பெறப்படும் சிறுநீரகம் அதிகப் பொருத்தம் உள்ளதாக இருக்கும். இருப்பினும் 100 சதவீதம் மிகச் சயாகப் பொருந்தும் சிறுநீரகம் கிடைப்பது மிக அது. எனவே தான் சிறுநீரகம் நிராகக்கப்படாமல் இருக்க உய மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டியுள்ளது.
எதிர் ஒப்பீட்டு முறை பசோதனை (Cross Match Test) :
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன் இறுதியாகச் செய்யப்படும் பசோதனை இதுதான்.
ரத்தப் பிவும் திசுக்களின் வகையும் ஒத்திருந்தாலும் வேறு சில காரணங்களால் சிறுநீரகம் நிராகக்கப்படலாம். இவ்வாறு நிராகக்கப்படுவதைத் தவிர்க்க எதிர் ஒப்பீட்டு முறை (Cross Match Test)என்ற பசோதனை செய்யப்படுகிறது. இதில் தானம் கொடுப்பவன் ரத்த அணுக்களும் நோயாளியின் ரத்த அணுக்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து பசோதிக்கப்படுகிறது.
இப் பரிசோதனையில் ரத்த அணுக்கள் ஒன்றை ஒன்று தாக்கி எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவரது சிறுநீரகத்தைப் பொருத்தக்கூடாது. ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் போர்க்குணமே இதற்குக் காரணம். அன்னியப் பொருள்களை எதிர்த்துப் போடும் நோய் எதிர்ப்பு அணுக்கள் மாற்று சிறுநீரகத்தையும் எதிர்க்கும். ரத்த அணுக்கள் ஒத்துப் போய்விட்டால் எதிர்ப்பு பெரிதாக இருக்காது.
4 மணி நேரம் சிகிச்சை :
எல்லாச் சோதனைகளிலும் பொருத்தம் சரியாக இருந்தால், இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதுதான். சாதாரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 3 முதல் 4 மணி நேரம்பிடிக்கும். உறவினடம் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை முடிந்த உடனே சிறுநீரகம் வேலை செய்யத் தொடங்கிவிடும். உறவினர் அல்லாதவர்களிடம் பெறப்படும் சிறுநீரகம் முதலில் மிக மெதுவாகவே வேலை செய்யும். சில சமயங்களில் வேலை செய்ய 5 நாள்கள் முதல் 5 அல்லது 6 வாரங்கள் கூட ஆகலாம்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டும். சைக்ளோஸ்ப்ன் ஏ, பிரட்னிஸôல், அஸதியோபன் போன்ற மருந்துகளைச் சாப்பிடவேண்டியதிருக்கும். இந்த மருந்துகளினால் பக்க விளைவுகள் உண்டு. இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. உணவுக்குப் பின்னரே இந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டும். இத்தகைய மருந்துகள் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதால் பசி அதிகக்கும். அதன் காரணமாக அதிக உணவு உட்கொள்வதால் உடல் எடை அதிகக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாட்டினால் உடல் எடை அதிகத்தலைக் கட்டுப்படுத்தலாம்.