Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எறும்புகளுக்கும் மரியாதை செலுத்தும் பண்பு உண்டு!

Posted on September 22, 2011 by admin

எறும்புகளுக்கும் மரியாதை செலுத்தும் பண்பு உண்டு: புதிய ஆய்வு!

மனிதர்களைப் போலவே எறும்புகளும், வயதான எறும்புகளுக்கு மரியாதை செய்கின்றன. மேலும், கடினமான வேலைகளை செய்வதில் இருந்து வயது முதிர்ந்த எறும்புகளை விடுவிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுறுசுறுப்புக்கும், ஒழுங்கிற்கும், கூட்டு முயற்சிக்கும் உதாரணமாக எறும்பை கூறலாம். எறும்புகளில் சித்தெறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு, கரையான் உள்ளிட்ட பல வகைகள் இந்தியாவில் உள்ளன. மனிதர்களைப் போலவே, எறும்புகளும் அவற்றிற்கென ஒரு சமூக அமைப்பை கொண்டவையாக உள்ளன. வளை தோண்டி முட்டையிட்டு கூட்டமாக வாழ்கின்றன.

மத்திய அமெரிக்காவில் காணப்படும் இலைகளை துண்டிக்கும் எறும்புகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடந்தது. இதில், இளைய மற்றும் உடல் வலிமை மிக்க எறும்புகள் கொண்ட கூட்டம், இலைகளை துண்டிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. இவை செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு, தங்களின் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த எறும்புகளின் பற்கள் கூர்மையாக இருப்பதால் விரைவாக இலைகளை கடித்து துண்டாக்குகின்றன.

வயதான எறும்புகளின் பற்கள் கூர்மை இழந்து விடுகின்றன. இதனால் இலைகளை துண்டிக்கும் பணிகளை இளைய மற்றும் பலம் பொருந்திய எறும்புகள் மேற்கொள்கின்றன. உணவுகளை வளைகளுக்கு கொண்டு செல்லுதல், உணவை பாதுகாத்தல் போன்ற பணிகளை பற்கள் கூர்மை இழந்த, வயதான எறும்புகள் செய்கின்றன.

இந்த வகையில், எறும்புகளும் மனிதர்களை போன்று வயதான எறும்புகளுக்கு மரியாதை கொடுக்கின்றன. இலைகளை துண்டிக்கும் எறும்பு கூட்டத்தில், செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு பணிகளை எறும்புகள் மேற்கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ள, தகவல்களை ஓரிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். எறும்புகளின் செயல் வேகம் அவற்றின் பற்கள் மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து உள்ளது. பற்களை கூர்மையாக வைத்துள்ள எறும்புகள், எறும்பு கூட்டத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“எறும்புகளுக்கு இலைகளை துண்டிப்பது கடினமான பணி. இளைய மற்றும் உடல் பலம் வாய்ந்த எறும்புகளின் தடைகள் பலமாகவும், “வி’ வடிவத்திலும், பற்கள் கூர்மையான சவரக்கத்தி முனை போல் இருப்பதாலும் இலைகளை துண்டித்து விடுகின்றன. ஆனால், காலப்போக்கில் பற்களின் கூர்மை மழுங்கி விடுகின்றன. இதனால் இலைகளை கடிக்கும் வேகம் இவற்றிற்கு குறைந்து விடுகிறது’ என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஸ்சோபீல்ட்.

எறும்புகளின் வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்:

1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்;கின்றன. மேலாளர்கள் (Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen),உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.

3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக் கொள்கின்றன.

4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.

5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி, பண்டமாற்றும் செய்து வருகின்றன.

6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.

7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது

”அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?”

”சிந்தித்துப்பார்க்கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது.” (அல்குர்ஆன்)

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 6 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb