முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்
ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான், தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி
வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத்.
முன்னுரை
பிரிவு – 1 பொதுவான சட்டங்கள்
இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை
இஸ்லாத்தில் பெண்கள் நிலை
இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்
பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
பிரிவு – 2 பெண்களின் உடல் அலங்காரம்
பெண்ணின் தலைமுடி அலங்காரம்
பெண்கள் முடிக்கு சாயமடித்தல்
பிரிவு – 3 மாதவிடாய் பிரசவம் பற்றியது
மாதவிடாய்
மாதவிடாய்க்கான வயது
மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்
மஞ்சள் கலங்கல் நிற இரத்தம்
மாதவிடாய் முடிவை அறிவது
உதிரப்போக்கு
உதிரப்போக்குள்ள பெண் கடைபிடிக்க வேண்டியவை
பிரசவ இரத்தம்
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்
மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்
கருக்கலைப்பு
பிரிவு – 4 பெண்களின் ஆடைபற்றிய சட்டங்கள்
1. இஸ்லாமியப் பெண்களின் ஆடை
2. பர்தாவின் பலன்கள்
பிரிவு – 5 பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச்சட்டங்கள்
முழுமையாக பர்தா அணிதல்
வெளியில் செல்லும்போது நறுமணம் பூசுதல்
ஆபரணங்கள் அணிந்து வெளியே செல்லுதல்
பெருநாள் தொழுகைக்கு பெண்கள் செல்லுதல்
பிரிவு – 6 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்
ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லுதல்
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்தல்
ஒப்பாரிவைத்தல்
பிரிவு – 7 நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்
பெண்கள் நோன்பை விடுவதற்கான காரணங்கள்
யார் மீது நோன்பு கடமை
கர்பமும் பாலூட்டலும்
எச்சரிக்கை
பிரிவு – 8 பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்
பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள்
பெண்களின் இஹ்ராம்
பெண்கள் தல்பிய்யா சொல்லுதல்
பெண்கள் தவாஃப் செய்தல்
ஹஜ்ஜின் போது மாதவிடாய்ப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
எச்சரிக்கை
பிரிவு – 9 கணவன், மனைவி சம்பந்தப்பட்ட சட்டங்கள்
திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல்
பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியம்
திருமணத்தை விளம்பரப்படுத்துதல்
கணவன், மனைவியை வெறுத்தல்
மனைவி, கணவனை வெறுத்தல்
திருமண ஒப்பந்தம் நடந்தபின்
இத்தாவின் வகைகள்
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை
இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம்
நறுமணம் உபயோகித்தல்
உடல் அலங்காரம்
ஆடையில் அலங்காரம்
ஆபரணங்கள் அணிதல்
பிரிவு – 10 பெண்ணின் கண்ணியத்தையும், கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
கற்பைக் காத்தல்
அன்னிய ஆணுடன் தனிமையில் இருத்தல்
கைலாகு செய்தல்
முடிவுரை
முன்னுரை :
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினான். மேலும் அவன் தான் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் ஜோடிகளையும் படைத்தான். வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்று நான் சான்று பகர்கிறேன். ஆரம்பத்திலும் இறுதியிலும் அவனுக்கே புகழனைத்தும். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள் என்றும் நான் சான்று பகர்கிறேன். அவர்கள் (மிஃராஜ் இரவு அன்று) வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அல்லாஹ்வின் மகத்தான அத்தாட் சிகளை அங்கு கண்டார்கள்; அவர்கள் மீதும், சிறப்பு மற்றும் புகழுக்குரிய அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்களின் மீதும் அல்லாஹ் சாந்தியும், சமாதானத்தையும் பொழிவானாக!
ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான இடம் இருக்கிறது. பெண்கள் தொடர் பான சட்டங்கள் இஸ்லாத்தில் அதிகமாக உள்ளன. பெண்களுக்கென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அறிவுரை களைக் கூறியுள்ளார்கள். ‘அரஃபா’ பெரு வெளியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய உரையில் பெண்களுக்கென சில உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இவை அனைத்தும் எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தெரிவிக் கின்றன.
தற்காலத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்படு கிறது; அவர்களின் கண்ணியம் பறிக்கப்படுகிறது அவர் களின் அந்தஸ்துகள் மறுக்கப்படுகின்றன. இப்படிப் பட்ட காலச்சூழலில் இஸ்லாம் கூறும் பெண்களுக்குரிய உரிமைகள் கடமைகள் ஆகியவற்றை அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுவது அவசியமாகிறது. எனவே அவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டி, வெற்றிக்கான வழியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட சில சட்டங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் நாம் மேற் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என நான் நம்புகிறேன். சமுதாயத்திற்கு இது ஒரு சிறிய பங்களிப்பு என்றாலும் இது ஒரு குறைவான முயற்சி. அல்லாஹ் இதைப் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாக! இவ்வகையில் நான் மேற்கொண்டுள்ள முயற்சி ஆரம்பக்கட்ட மாகும். இதைவிடவும் விரிவான சிறப்பான முயற்சிகள் தொடர நான் ஆசைப்படுகிறேன்.
நான் இந்நூலில் பின்வரும் விஷயங்களை விளக்கியுள்ளேன்.
முதல் பிரிவு : பொதுவான சட்டங்கள்
இரண்டாம் பிரிவு : பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது
மூன்றாவது பிரிவு : மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவம் சம்பந்தப்பட்டது
நான்காவது பிரிவு : ஆடைகள் மற்றும் பர்தாசம்பந்தப்பட்டது.
ஐந்தாவது பிரிவு : பெண்களின் தொழுகை முறைகளை பற்றியது
ஆறாவது பிரிவு : பெண்களுக்குரிய ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து.
ஏழாவது பிரிவு : நோன்பில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றியது.
எட்டாவது பிரிவு : ஹஜ் உம்ராவில் பெண்களுக்குரிய சட்டங்கள் பற்றியது.
ஒன்பதாவது பிரிவு : கணவன் மனைவி சம்பந்தமானது.
பத்தாவது பிரிவு : பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றியது.
பிரிவு 1 – பொதுவான சட்டங்கள் :
1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :
1400 ஆண்டுகளுக்கு முன்பு ப+மியில் வாழ்ந்த அரபியர்களும் பிற இனமக்களும் அறியாமையில் வீழ்ந்திருந்தனர். இஸ்லாத்திற்கு முன்புள்ள காலம் என இதனையே நான் குறிப்பிடுகிறேன். மனிதர்களை நேர்வழிப்படுத்தக்கூடிய இறைத்தூதர்கள் இல்லாதிருந்து, எல்லா வழிகளும் அழிந்து போய்விட்ட காலம். அப் போது அல்லாஹ் அவர்களின் பால் திரும்பிப்பார்த்தான்.
”வேதம் அருளப்பட்டவர்களில் சிலரைத் தவிர அரபியர்கள் மற்றும் அரபியர் அல்லாதவர்கள் உள்ளிட்டு அனைவரின் மீதும் இறைவன் கோபப்பட்டான்.” (அல் ஹதீஸ்)
இக்காலக் கட்டத்தில் பெண்ணினம் தன் உணர்வுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக அரபிய இனப் பெண்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளாம் இருந்தார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பவர்களாய் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர். வேறு சிலர் (தங்களின் பெண்களையே) இழிவாகவும் கேவலமாகவும் உயிர் வாழ அவர்களை விட்டு வந்தனர்.
இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: ”அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந் துள்ளது என நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவன் கோபமடைந்துவிடுகிறான். எதனைக் கொண்டு அவன் நற்செய்தி கூறப்பட்டானோ (அதைத் தீயதெனக் கருதி) அக்கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். இழிவோடு அதை உயிர் வாழவைப்பதா, அல்லது (உயிரோடு) அதை மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மா னிப்பது மிகவும் கெட்டது?” (அல்குர்ஆன் 16:58,59)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ”உயிருடன் புதைக்கப் பட்டவள் ( பெண்குழந்தை), ‘எந்தக் குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்’ என வினவப்படும் போது.” (அல்குர்ஆன் 81:8,9)
சிசுவதை என்பது பிறந்த பெண்குழந்தையை உயிரோடு பூமிக்குள் புதைத்து கொலை செய்வதாகும். அப்படியே ஒருபெண் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாழ ஆரம்பித்தாலும், அவள் மிகவும் இழிவான முறையில்தான் வாழமுடியும். அவளுடைய உறவினர்கள் எவ்வளவு தான் சொத்துக்களை விட்டுச் சென்றாலும் அதில் அவளுக்கு வாரிசுரிமை இருக்கவில்லை. அவள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தேவையுடைய வளாக இருந்தாலும் சரியே. அன்றைய மக்கள் ஆண் களுக்கு மட்டுமே வாரிசுரிமை வழங்கிவந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் இறந்துபோன கணவன் விட்டுச் சென்ற அனந்தரச் சொத்துக்களில் ஒன்றாகப் பெண்ணும் கருதப்பட்டாள். அதிகமான பெண்கள் ஒரே கணவனின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். காரணம் அன்றைய ஆண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய பெண்களை மட்டும் மனைவியாக வைத்துக் கொள்வதில்லை, மேலும், பெண்களுக்கு எதிராக இளைக் கப்படும் கொடுமைகளை யாரும் கண்டு கொள்ளா மலேயே இருந்து வந்தனர்.
2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :
இஸ்லாமிய மார்க்கம் அவர்களிடத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெண்களுக்கு இளைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப் பட்டன. பெண்ணும் மனித இனத்தின் ஓர் அங்கம்தான் என்ற நிலையை இஸ்லாம் அவளுக்கு மீட்டிக் கொடுத்தது.
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.” (அல்குர்ஆன் 49:13)
மனித இனம் என்ற அடிப்படையில் பெண் ஆணுக் குச் சமமானவள். அவள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலி யைப் பெறுவதிலும் ஆணுக்குச் சமமாகவே இருக்கிறாள் என இஸ்லாம் கூறுகிறது.
”இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) தூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.” (அல்குர்ஆன் 16:97)
”நயவஞ்சகத்தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ் சகத்தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.” (அல்குர்ஆன் 33:73)
இறந்துபோன கணவன் விட்டுச் செல்லும் அனந்தரச் சொத்துக்களில் பெண்ணும் ஒன்று எனக் கருதப்பட்டு வந்ததை அல்லாஹ் தடை செய்துவிட்டான்.
”இறைநம்பிக்கையாளர்களே! பெண்களை (அவர்களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்க ளுக்குக் கூடாது.” (அல்குர்ஆன் 4:19)
ஒரு பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல் படுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. சொத்துரிமையில் அவளைப் பங்குதாரராக இஸ்லாம் ஆக்கியுள்ளது; அவளை வாரிசுப் பொருளாகக் கருதவில்லை. தன் உறவினர் விட்டுச்செல்லும் சொத்திலும் அவளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ”பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவி னரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந் தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.” (அல்குர்ஆன் 4:7)
(சொத்துப்பங்கீட்டில்) ”உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.” (அல்குர்ஆன் 4:11)
ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் நிலையில் வாரிசாம், சொத்தில் பங்கு பெறக்கூடியவள் என இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண் அதிகப் பட்சமாக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மனைவியரிடையில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும். மனைவியரிடத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
”நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 4:19)
பெண்ணுக்கு மஹர் என்ற ஜீவனாம்சத்தை (மணக் கொடையை)க் கொடுத்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். மணமகன் வாக்களித்த ஜீவனாம்சத்தை மணப்பெண் தானாக முன் வந்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அதை முழுமையாகவே அவளுக்கு வழங்கி விடவேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
”நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)” (அல்குர்ஆன் 4:4)
ஒரு பெண், தன் கணவன் வீட்டில் பொறுப்புள்ள வளாக, ஆலோசனைகளை வழங்குபவளாக, தீயவற்றிலிருந்து வீட்டாரை விலக்கக் கூடியவளாக, தன் குழந்தை களை வழிநடத்திச் செல்லும் குடும்பத்தலைவியாக இருக்கவேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.
”ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புடையவளாவாள். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கணவன் தன் மனைவிக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.
இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.
”தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.” (அல்குர்ஆன் 4:27)
இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ் லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல் படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங் களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத் திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளி யிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ் தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன் படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் ‘ஷோகேஸ்’ பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத் தில்தான் அமைத்துள்ளனர்.
பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ”நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்” என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின் கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன.
4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.
1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந் தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப் பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.
2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.
3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலை களை அமைத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண் களுக்காக மட்டும் நர்ஸாக பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.
4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது
பெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங் களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாச லுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.
பிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது :
1. பெண்ணின் உடல் அலங்காரம் :
பெண்களின் இயற்கையான பண்புகளோடு தொடர் புள்ளவற்றையே அவளிடமிருந்து எதிர்பார்க்கவேண்டும். நகம் வெட்டுவதும் அதை வழக்கமாக தொடர்ந்து செய்து வருவதும் நபிவழியாக இருக்கிறது. இவை ஹதீஸில் வந்துள்ள மனிதன் இயல்பாகவே செய்யக்கூடிய விஷயங் களாக உள்ளன. நகத்தைக் களைவதால் சுத்தம் ஏற்படு கிறது. அழகு கிடைக்கிறது. அது நீண்டதாக வளர்ந் திருப்பதில் அவலட்சனம் இருக்கின்றது. நகத்தைக் களையாமல் விட்டு விடுவதால் மிகப்பெரிய (தொல்லைகள்) ஏற்படுகின்றன. கோரப் பிராணிகளுக்கு ஒப்பாக (விரல்கள்) ஆம்விடு கிறது. அதற்கு கீழாக அழுக்கு சேர்ந்து விடுகிறது. அதில் தண்
அக்குள்முடி, மர்மஸ்தான முடியைக்களைவதும் பெண்களுக்கும் சுன்னத்தாக உள்ளது. அதில் அழகும் இருக்கிறது. வாரம் ஒரு முறைக்களைய வேண்டும். முடியாவிட்டால் நாற்பது நாட்களுக்கு ஒரு முறையாவது களைதல் சிறந்ததாகும்.
2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :
அ. முஸ்லிம் பெண் தன் தலைமுடியை நீளமாக விட வேண்டும். காரணமின்றி தலையை மொட்டையடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
ச¥தி அரேபியாவின் மார்க்க தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷேக் அவர்கள் கூறுகிறார்கள்.
”பெண்கள் தங்கள் தலைமுடியை மளித்தல் கூடாது.”
”பெண் தன் தலைமுடியை மளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்” என அலீ ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். (நூற்கள்: நஸயீ, பஸ்ஸார் மற்றும் இப்னுஜரீர்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளதாக ஹதீஸில் ஒரு விஷயம் வருமானால் அது விலக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் குறிக்கும். அதற்கு மாற்றமமான இன்னொரு விஷயம் வந்தாலே தவிர.
முல்லா அலிகாரி அவர்கள் ‘மிஷ்காத்’ என்ற நூலின் விரிவுரையான தன்னுடைய ‘மிர்காத்’ என்ற நூலில் கூறுகிறார். ”பெண் தன் தலைமுடியை மளிப்பது கூடாது என்பது எதற்காகவென்றால் பெண்கள் கூந்தலை விடுவது தோற்றத்திலும் அழம்லும் ஆண்கள் தாடி விடுவதற்கு ஒப்பானதாகும்.” (ஷேக் முஹம்மதுபின் இப்ராஹீம் ஃபத்வா தொகுப்பு 2- 49)
ஒரு பெண் தன் தலைமுடியை நீளமாக விடுவது சிரமமானதாகவோ, அதைப் பராமரிப்பதற்கானச் செலவை மேற்கொள்வது அவளுக்கு முடியாமலோ இருக்குமானால் தேவையான அளவு அலங்காரத்தை நோக்கமாகக் கொள்ளாது. தலைமுடியை குறைத்துக் கொள்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் சில மனைவிமார்கள், அலங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட முடி வளர்க்கும் தேவையற்று இருந்ததாலும் தங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டார்கள்.
அதேநேரத்தில் இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயவர் களுக்கு ஒப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, ஆண்களுக்கு ஒப்பாக தோற்றமளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு பெண் தன் தலைமுடியைக் குறைப் பாளானால் அது தடை செய்யப்பட்டதாகும். பொதுவா கவே இதைத் தடை செய்வதற்குண்டான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அலங்காரத் திற்காக அவ்வாறு செய்வாளானால் நாம் அறிந்தவரை அது அனுமதிக்கப் படாததாகும்.
முஹம்மத் அமீன் சின்கீதீ ‘அள்வாஉல் பயான்’ எனும் குர்ஆன் விளக்கவுரை நூலில் குறிப்பிடுகிறார்.
”தற்போது அதிமான நாடுகளில் பழக்கத்தில் காணப்படுகின்ற பெண்கள் தங்கள் தலைமுடியை முழுமையாக வெட்டிக் கொள்வது என்பது இஸ்லாமிய பெண்களும் இஸ்லாத்திற்கு முற்காலத்திலுள்ள அரபியப் பெண்களும் செய்துவந்த பழக்கத்திற்கு நேர் மாற்றமான கலாச்சாரமாகும். இது மார்க்கத்திலும் பண்பாட்டிலும் பரந்து விட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் தங்கள் தலை முடியைக் குறைத்து குட்டையாக ஆக்கிக் கொள்வார்கள். என ஹதீஸில் வந்ததன் விளக்கம் என்னவென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர் களின் மனைவிமார்கள் அவர்களுக்காக தங்களை அலங்க ரித்துக் கொள்வார்கள். அவர்களின் தலை முடிதான் மிக வும் அழகானதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர் களின் மனைவிமார்களுக்கென தனிச்சட்டங்கள் உள் ளன. இந்த சட்டங்களில் ப+மியில் உள்ள எந்த ஒருபெண் ணும் கூட்டாக முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத் திற்குப்பின் அவர்களின் மனைவிமார்களை வேறு யாரும் திருமணம் செய்யமுடியாது. ஆசையில்லாத அளவிற்கு அவர்கள் திருமணத்திலிருந்து நிராசையாகிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என்ற காரணத்தினால் அப்பெண்களின் மரணம் வரை இத்தாவில் இருக்கின்ற பெண்களைப் போன்றிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு உகந்ததல்ல, மேலும் அவருடைய மனைவி களை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமான காரியமாகும்.” (அல்குர்ஆன் 33:53)
ஆண்களிலிருந்து முழுமையாகவே அவர்கள் நிரா சையாகிவிட்டதால் மற்ற பெண்களுக்கு அனுமதிக்கப் படாத சில விஷயங்கள் இவர்களுக்கு சலுகை வழங்கப் படுவதற்கு காரணமாக இருக்கலாம். (அல்வாஉல் பயான் 5: 598 – 601)
பெண்கள் தன் தலை முடியைப் பாதுகாக்க வேண்டும், அதை கண்காணிக்கவேண்டும் அதை கோர்வையாகப் பிண்ணிப்போடவேண்டும். முடியை தலைக்கு மேலோ அல்லது தலைக்குப் பின் பக்கமோ கொண்டை போன்று குவித்து வைப்பது கூடாது.
மேலும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் கூறுகிறார்கள். சில மோசமான பெண்கள் தங்கள் தலைமுடியை ஒன்றாகச் சேர்த்து ஒரே கூந்தலாக்கி தங்கள் இரண்டு புஜத்திற்கிடையில் தொங்கவிடுகின்றனர். (பக்கம் 22ழூ ழூ பக்கம் 145)
ச¥தி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் அவர்கள் கூறுகிறார்கள்: இக்காலத்தில் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடியை ஒரு ஓரத்திலிருந்து சீவி முடியை ஒன்று சேர்த்து தலைக்குப் பின் பக்கமாக விடுவதும் அல்லது தலைக்கு மேலே சேர்த்துவைப்பதும் ஃபிரஞ்ச் கலாச்சாரமாகும், இவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு செய்வது இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
”என் சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தினர் நரக வாசிகளாக இருக்கின்றனர். அவர்களை நான் பார்த்ததில்லை (அதாவது அவர்கள் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்). ஒரு சாரார் மாட்டு வாலைப் போன்ற சாட்டையை தங்களின் கையில் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமானவர்களாகக் காட்சியளிக்கும் பெண்கள்; அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள் பிறரையும் அவர்கள் பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை சாய்ந்த ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும் அவர்கள் சுவர்க்கம் செல்லவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் நீண்ட தூரத் திலிருந்து வீசும்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் றார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
ஆடிஆடி நடப்பார்கள் என்பதன் பொருள், தவறான விபச்சாரிகள் தங்கள் தலையை சீவிக் கொள்வது போன்று இவர்கள் தங்கள் தலையைச் சீவிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றபெண்களுக்கும் அவ்வாறு சீவிவிடுவார்கள். இவ்வாறு செய்வது ஃபிரஞ்ச்காரர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களின் கலாச்சாரமாகும்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை மொட் டை அடிப்பது எவ்வாறு கூடாதோ அவ்வாறே காரண மின்றி தலைமுடியைக் குறைத்துக் கொள்வதும் கூடாது. ‘விக்’ மற்றும் ‘சவுரி’ போன்ற ஒட்டு முடிகள் வைத்துக் கொள்வதும் கூடாது.
”பிறருக்கு தன் முடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பவள், தன் முடியுடன் வேறு முடியை சேர்க்கும் படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு செய்வதனால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு கள் ஏற்படுகின்றன. ‘டோப்பா’ மற்றும் ‘விக்’ இந்த வகை யைச் சார்ந்ததுதான்.
”முஆவியா ரளியல்லாஹு அன்ஹு ஒரு முறை மதீனாவிற்கு வந்தபோது மக்களுக்கு பிரசங்கம் செய்தார்கள். அப்போது முடிக் கற்றை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, ‘உங்கள் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இதுபோன்ற முடிகளை எல்லாம் அவர்கள் தங்கள் தலையில் இணைக்கின்றனர்.’ ‘எந்த ஒரு பெண்ணாவது தன் தலைமுடியுடன் வேறு முடி யைச் சேர்த்து வைப்பாளானால் அது ஏமாற்றம், மோசடி செய்யக்கூடியதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” எனக் கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஆ. ஒரு முஸ்லிம் பெண் தன் புருவ முடிகள் முழுவதுமாக வோ, கொஞ்சமாகவோ களைவது தடை செய்யப்பட்டுள்ளது. கத்தியால் மளிப்பதோ, கத்திரி யால் வெட்டுவதோ கூடாது.
”புருவ முடியை முழுவதுமாகவோ, கொஞ்சமாக வோ நீக்கக்கூடியவளையும், தனக்கு நீக்கிவிடும் படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.”
இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாகும். மனிதர்களிடத்தில் இவ்வாறு மாற்றங்களைத் தான் செய்யப்போவதாக ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளான். அதையே இன்று அவன் செயல்படுத்தியும் வருகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும் அல்லாஹ்வுடைய படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி (மனிதர்களை) ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்.” (அல்குர்ஆன் 4:119)
”பச்சைக் குத்திக்கொள்ளக்கூடியவளையும், பிறருக்கு பச்சைக் குத்துபவளையும், புருவமுடியை எடுப்பவ ளையும், பிறருக்கு எடுத்து விடுபவளையும், அழகிற்காக பற்களுக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி அல்லாஹ் வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள், என அப்துல் லாஹ் இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு, ‘இறைத் தூதர் சபித்தவர்களை நானும் சபிக்கக்கூடாதா? இது அல்லாஹ்வின் வேதத்திலும் உள்ளதே’ என்றும் அவர்கள் கூறிவிட்டு, ‘இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக் கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் அவர் உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டும் நீங்கள் விலம்க் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 59:7) என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதினார்கள். (நூல்: திர்மிதி)
இறைவனின் சாபத்தை உண்டாக்கும் பெரும் பாவங் களில் ஒன்றான இவ்விஷயத்தில் அதிகமான பெண்கள் இன்று சிக்கியுள்ளனர். புருவமுடியை நீக்குவது அன்றாட முக்கிய வேலைகளில் ஒன்றாம்விட்டது. ஒரு பெண்ணை இவ்வாறு செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவன் தூண்டினாலும் அவள் அவனுக்குக் கட்டுப்படக்கூடாது. ஏனெனில் பாவமான காரியங்களில் கட்டுப்படுதல் மார்க்கமாக இல்லை.
இ. அழகுக்காக ஒரு பெண் தன் பற்களைத் தீட்டி அவற்றிற்கு இடையில் இடைவெளி ஏற்படுத்துவதும் தடுக்கப்பட்டதாகும். அதே நேரத்தில் பற்களுக்கிடை யில் இயற்கையாகவே குறை இருக்குமானால் அதைப் போக்கிக் கொள்வதற்காக ஒழுங்குபடுத்திக் கொள் வதும், பற்களில் வேறு ஏதேனும் புளு அரித்திருந்தால் அவற்றைச் சீர்செய்து கொள்வதும் தவறாகாது. இது, பற்களில் காணப்படும் குறைகளைப் போக்குவதற்காக பல் மருத்துவ நிபுணர்கள் செய்யும் சிம்ச்சையாகும்.
ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
‘தன் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவ ளையும், பச்சை குத்தும்படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.
பச்சைக்குத்துவது என்பது ஊசி போன்ற பொருளால் கை அல்லது முகம் போன்ற உறுப்பில் கூறை ஏற்ப டுத்தி அந்த இடத்தில் சுர்மா, மை போன்றவற்றை வைத்து அடையாளமிடுவது, இது விலக்கப்பட்டதும், பெரும்பா வங்களில் ஒன்றுமாகும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித் துள்ளார்கள் என்றால் அது பெரும் பாவமாகத்தான் இருக்கவேண்டும்.
2. பெண்கள் முடிக்கு சாயமடிப்பது, நகை அணிவது பற்றிய சட்டம் :
1. பெண்கள் முடிக்கு சாயமடிப்பதும், நகை ஆபரணம், அணிவதும், திருமணமான பெண்கள் கைகளிலும் கால்களிலும் மைலாஞ்சி இடுவதும் அனுமதிக்கப் பட்டதாகும். இது குறித்து பிரபலமாhன ஹதீஸ்கள் உள்ளன. என இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 1ழூ ழூ324 குறிப்பிடுகிறார்கள்.
ஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் வந்து மைலாஞ்சி இடுவதைப் பற்றிக்கேட்டாள். அதில் எந்த தவறுமில்லை, ஆனால் நான் அதை விரும்பவில்லை, காரணம் என் அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் வாடையை வெறுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்: நஸயீ)
மேலும்,ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார், ”ஒரு பெண் திரைக்கு அப்பால் நின்று கொண்டு தன் கையில் ஒரு கடிதத்தை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நீட்டினாள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கையை மூடிக் கொண்டு அது ஆணுடைய கையா அல்லது பெண்ணின் கையா என்பது எனக்குத் தெரியாது, என்றார்கள், அது பெண்ணுடைய கைதான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அப்போது ‘நான் பெண்ணாக இருந்திருந் தால் உன்னுடைய நகங்களை மைலாஞ்சியால் சாயமிட்டி ருப்பேன்’ என அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். (ஆதாரம்: அபூ தாவூத, நஸயீ)
ஆனால் தண்¡ர் செல்லமுடியாத அளவிற்கு தடையாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது.
2. பெண்கள் நரைத்த தலைமுடியை கருப்பு அல்லாத நிறங்களைக் கொண்டு சாயமிடுவது அனுமதிக்கப் பட்டுள்ளது. கருப்புசாயமிடுவதை பொதுவாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.
இமாம் நவவீ குறிப்பிடுகிறார்கள்: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் முடிக்கு கருப்பு சாயமிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாகுபாடு கிடையாது. (ரியாலுஸ்ஸாலிஹீன், மஜ்மூவு)
ஒரு பெண் தன் கருத்த தலைமுடியை வேறு நிறமாக மாற்றுவதற்கு சாயத்தைப் பயன்படுத்துவதும் கூடாது, அதற்கு எந்தத் தேவையும் இல்லை, காரணம் முடியைப் பொறுத்தவரையில் கருப்பாக இருப்பது தான் அழகு, கருப்பாக இருக்கும் முடியை வேறு நிறமாக மாற்றுவது நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
3. பெண் தங்கம் வெள்ளிபோன்ற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்வது அனுமதிக்கப்பட் டுள்ளது. இது அறிஞர்களின் ஏதோபித்த முடிவாகும். ஆனால் அன்னிய ஆடவர்களுக்கு தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவது கூடாது, மறைக்கவேண்டும். குறிப்பாக வீட்டின் வெயியே செல்லும்போதும், ஆண்களின் பார்வைபடும் போதும் அதை மறைத்துக் கொள்ளவேண்டும், காரணம் அது தவறுகள் நடக்கக் காரணமாகிறது. ஆடைகளில் அடியில் உள்ள காலின் நகைகளின் சப்தத்தையே ஆண்கள் கேட்கும் அளவிற்கு வெளிப்படுத்துவது கூடாது என்று இருக்கும்போது, வெளிப்படையாக அணியும் ஆபரணங்களையும் (வெளியாக்குவது) கூடாது தான்.
அல்லாஹ் கூறுகிறான்: பெண்கள் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து ஏதேனும் வெளிப் படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டிதட்டி நடக்கவேண்டாம்.” (அல்குர்ஆன் 24:31)
பிரிவு 3 – மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவம் பற்றியது :
1. மாதவிடாய்
பெண்களின் கற்பப் பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண் களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள்.
2. மாதவிடாய்க்கான வயது
பொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது.
”மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது
பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.” (அல்குர்ஆன்: 65:4)
இந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மாணித்துக் கொள்ளலாம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்