Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (3)

Posted on September 6, 2011 by admin

  பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்

  பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்

  பிரிவு 4 – பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் :

இஸ்லாமியப் பெண்களின் ஆடை :

1. இஸ்லாமிய ஆடையைப் பொறுத்தவரை திருமணம் செய்வது தடையில்லாத அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் மறைக்கும் விதத்தில் உடம்பு முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பெண் தனக்கு திருமணம் செய்யத்தடை செய்யப் பட்டவர்கள் முன் இரண்டு கைகள், முகம், கால் (பாதம் வரை) ஆகியவற்றைத்தவிர மற்ற உறுப்புக் களை திறந்துவைப்பது கூடாது.

2. ஆடை உடம்பை நன்றாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உடலின் நிறம் வெளிப்படும் விதத்தில் மெல்லிய ஆடையாக இருக்கக்கூடாது.

3. உடலின் அங்க அவயங்கள் வெளிப்படும் விதத்தில் இறுக்கமான ஆடையாகவும் இருக்கக்கூடாது.

”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஹதீஸில் வந்துள்ள நிர்வாண ஆடை என்பது பெண் தன் உடம்பு முழுவதும் மறைக்காத ஆடையை அணியும்போது அவள் நிர்வாணமானவளாகவே கருதப்படுவாள். உடம்பு தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையை அணிவது அல்லது உடற்கட்டு தெரியும் விதத்தில் இறுக்கமான ஆடையை அணிவது, இடுப்பு, கை தோள்புஜம் போன்றவற்றின் உடற்கட்டு வெளியில் காணப்படும் விதத்தில் ஆடைகள் அமைவதைத்தான் இந்தஹதீஸ் குறிப்பிடுகிறது.

பெண்களின் ஆடை என்பது அவளுடைய மேனி முழுவதும் மறைக்கக் கூடியதாகவும், உடலின் உட்பகுதி யையும், உடலின் கனமான பகுதியை வெளிப்படுத்தாதது மாகவும், விசாலமான ஆடையாக இருக்கவேண்டும். (ஃபத்வா தொ.22ழூ ழூ146)

4. ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ”ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 22ழூ ழூ148ல் கூறுகிறார்: ஆண்களுக்குத் தகுதியான ஆடையையும், பெண்களுக்கத் தகுதியான ஆடையையும் வைத்துத்தான் ஆண், பெண் ஆடை களைப் பிரித்துக் காட்டமுடியும். ஆண்களும் பெண் களும் அவரவருக்குக் கட்டளையிடப்பட்ட ஆடையை அணிவதுதான் அவர்களுக்குப் பொருத்தமானதாகும். பெண்கள் தங்கள் மேனியை வெளியே காட்டாமல் மறைத்து பர்தா அணிந்து வெளியில் செல்வதுதான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளையாகும். எனவே தான் பெண்கள் சப்தத்தை உயர்த்தி பாங்கு, தல்பியா சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளில் ஏறுவதும், ஆண் களைப்போன்று இரண்டு துண்டு துணிகளை மட்டும் அணிந்திருப்பதும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஹஜ்ஜின்போது ஆண்கள் தலையை திறந்திருப்ப தும், வழக்கமான ஆடையை அணியாமலிருப்பதும் அவர்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பைஜாமா, தொப்பி, காலுறை போன்றவற்றை அணிவது கூடாது. அதே நேரத்தில் பெண்கள் அவர் களின் வழக்கமான ஆடையில் எதையும் அணிவது தடை செய்யப்படவில்லை. காரணம் அவள் தன் உடல் முழுவ தையும் மறைத்து பர்தா அணியுமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள். அதற்கு மாற்றம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படாது.

ஆனால், அவள் தன் முகத்தை திரையால் மறைப் பதும் உறுப்புகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள காலுறைகளை அணிவதும் அவளுக்கு அவசியமில்லை. என்று கூறிவிட்டு அவள் அன்னிய ஆண்களை விட்டும் தன் முகத்தை முகமூடி அல்லாததைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். ஆண்களிலிருந்து பெண்களும், பெண் களிலிருந்து ஆண்களும் பிரித்தறியக்கூடிய விதத்தில் ஆடை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டால் பெண்கள் தங்கள் உடம்பை முழுவதுமாக மறைத்து பர்தா அணியவேண்டும் என்ற உண்மை புரிந்துவிடும்.

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமா கவும் ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந் தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5. பெண்கள் வெளியில் செல்லும்போது அணிகின்ற ஆடைகள் பார்வையைக் கவரக்கூடிய அலங்காரங் களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதன் மூலம் அவள் தன் அலங்காரத்தை வெளிப் படுத்திச்செல்லும் பெண்களின் பட்டியலில் இடம் பெற நேரிடும்.

 பர்தாவின் பலன்கள் :

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்: 33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.

அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அப+உபைதா போன்றோர் கூறுகின்றனர்.

ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)

பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) :

பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்த கங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!

1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)

2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)

3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் துவைஜிரி)

4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.

பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்துவிட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்துவிட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.

எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலம்க்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்ததில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும்போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொது வான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனை களுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கை களைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.

இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ள வர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற் றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களி லிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக் கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப் பார்த்து விடாதே!

”தங்களின் கீழ்த்தரமான இச்செய்கைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.” (அல்குர்ஆன்: 4:27)

 பிரிவு 5 – பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள் :

இஸ்லாமியப் பெண்ணே! தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்று. தொழுகையின் சட்டதிட்டங்கள், அதன் நிபந்தனைகள் ஆகியவற்றை தெரிந்து அதை முழுமையாகச் செயல்படுத்திக் கொள்!.

மூமின்களின் தாய்மார்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்:

”நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் பெண்கள் திரிந்து கொண்டிருந்தது

போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதி யுடன் கடைபிடித்துத் தொழுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்.” (அல்குர்ஆன்: 33:33)

இது பொதுவாக எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். தொழுகை இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் இரண்டாவது இடம் வம்க் கிறது. அது இஸ்லாத்தின் தூண். தொழுகையை விடுவது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எவரிடம் தொழுகை இல்லையோ அவர் இஸ்லாத்தில் இல்லை. எவ்வித காரணமுமின்றி தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது தொழுகையை வீணடிப்பதாகும்.

”ஆனால் இவர்களுக்குப்பின் (வழிகெட்ட) சந்ததியினர் இவர்களின் இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள். அவர்கள் மறுமையில் பெரும் கெடுதியை உண்டாக்கும் நரகத்தையே சந்திப்பார்கள். பாவமன்னிப்புக் கோரி பாவங் களிலிருந்து விலம் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் களைச் செய்பவர்களைத் தவிர, அத்தகையோர் சுவர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களுக்கு எதிலும் குறை ஏதும் செய்யப் படாது.” (அல்குர்ஆன் 19:59,60)

குர்ஆன் விளக்கவுரையாளர்களில் ஒருசாரார் மேற் கண்ட வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கத்தைப் பற்றி இமாம் இப்னுஹஜர் அவர்கள் குறிப்பிடும்போது தொழு கையை வீணாக்குவதென்பது அதனுடைய நேரத்தை சரியாகக் கடைபிடிக்காது இருப்பதாகும். ஒரு தொழு கைக்கான நேரம் கடந்தபின் அதைத் தொழுவதுமாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘கய்யு’ என்பது நரகத் தில் உள்ள ஒரு ஓடையாகும் என்று குறிப்பிடுகின்றனர்.

தொழுகையில் பெண்களுக்கென சில சட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.

1. பெண்களுக்கு ஆண்களைப்போன்று சப்தமிட்டு பாங்கு இகாமத் சொல்லவேண்டியதில்லை. காரணம் பாங்கிற்கு சப்தத்தை உயர்த்திச் சொல்ல வேண்டு மென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.

2. பெண்ணின் முகத்தைத் தவிர இதர உறுப்புக்களை எல்லாம் தொழும்போது மறைத்தாக வேண்டும். முன் இரண்டு கரங்களையும் பாதத்தையும் மறைக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இவை யாவும் பிற ஆண்கள் பார்க்காமல் இருக்கும் போதுதான். அவர்கள் பார்க்கும் நிலை ஏற்படும்போது உறுப்புக்கள் அனைத்தையும் அவசியம் மறைத்தாக வேண்டும். தொழுகைக்கு வெளியே மறைப்பது எவ் வாறு கடமையாக உள்ளதோ அவ்வாறே தொழுகை யிலும் தலை, கழுத்து, பாதம் ஆகிய எல்லாவற்றையும் மறைத் தாக வேண்டும்.

”பருவமான பெண்கள் தலை, பிடறியை மறைத்தால் தவிர அவர்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: ,அஹ்மது, அபூ தாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மதி)

ஒரு பெண் கீழங்கி அணியாமல் தலையையும், பிடறியையும் மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து தொழுவது கூடுமா என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதற்கு, ‘அவர்களின் பாதத்தையும் மறைக்கும் விதத்தில் அந்த ஆடை இருக்குமானால் அதை அணிந்து தொழலாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அப+தா¥த்)

தொழுகையில் பெண் தனது தலையையும் பிடறியையும் அவசியம் மறைத்தாக வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழியி லிந்து விளங்கமுடிகிறது.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீஸிலி ருந்து பாதம் உட்பட எல்லா உறுப்புக்களையும் மறைக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

பிற ஆண்கள் பார்க்காத விதத்தில் முகத்தை திறந்து வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அறிஞர் கள் இதை ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வாத் தொகுப்பு 22ழூ ழூ113,114 ல் குறிப்பிடுகிறார்கள்.

”ஒரு பெண் தனியாகத் தொழும்போது தலையை மறைத்திருக்க வேண்டும். தொழுகை அல்லாத நேரங்க ளில் வீட்டிலிருக்கும் போது தலை திறந்து இருப்பது அவளுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். தொழுகையின் போது அலங்கரித்துக் கொள்வது அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமையாகும். இரவு நேரத்தில் ஒருவர் தனிமையில் இருந்தாலும் அவர் நிர்வாணமாக கஅபாவை வலம் வருவது கூடாது. தனிமையில் இருக்கும்போது நிர்வாணமாகத் தொழுவதும் கூடாது. தொழுகையில் உடலை மறைப்பதென்பது அடுத்தவர்களின் பார்வை யோடு தொடர்புடையது அல்ல.

முக்னி என்ற நூலில் 2ழூ ழூ328 ல் கூறப்பட்டுள்ளது.

”சுதந்திரமான ஒருபெண் தன் உடல் முழுவதையும் தொழுகையின்போது மறைத்துக் கொள்வது கடமை யாகும். அதில் ஏதாவது வெளிப்படுமாயின் தொழுகை கூடாது.” இவ்வாறே மாலிக், ஷாஃபி, அவ்ஸாயீ போன்ற இமாம்களும் கூறியுள்ளனர்.

3. முக்னி என்ற நூலில் 2ழூ ழூ258 ல் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் தொழும்போது ருகூஃ மற்றும் ஸுஜூத் நிலை யில் தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அமரும் போது கால்களை மடக்கி வைத்து அமரவேண்டும். அல்லது இரண்டு கால்களையும் வலப்புறமாகக் கொண்டு வந்து இருக்கையைத் தரை யில் வைத்து அமர வேண்டும். கால்களை முன்பக்கம் மடக்கி வைத்து அமரவும் கூடாது. வலது காலை நட்டி புட்டியை தரையில் வைத்து அமர்வது அல்லது வலதுகாலை நட்டி இடதுகாலின் மீது அமர்வதை விட இது அவளுக்கு மிக மறைவானதாகும்.

மஜ்மூவு என்ற நூலில் 3ழூ ழூ455 ல் நவவி அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் ஷாஃபியீ அவர்கள் முக்தஸர் என்ற நூலில் கூறும்போது தொழுகையின் செயல்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் ஸுஜூதுச் செய்யும் போது தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தன் வயிற்றை தொடையோடு சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் அவளின் உடலை மறைப்பதற்கு அவளுக்குச் சிறந்த வழியாகும். இந்த விதம் தான் ருகூவு, மற்றும் ஏனைய நிலைகளிலும் அவளுக்கு மிகவும் சிறந்தது.

4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் :

இது விஷயத்தில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளதுஇவ்வாறு தொழுவதில் தவறில்லை என அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முவரகா என்ற பெண் தன் வீட்டாருக்கு இமாமத் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். (நூல்: அபூ தாவூது)

சிலர் இது அனுமதிக்கப்படாதது என்று கூறு கின்றனர். இன்னும் சிலர் வெறுக்கப்பட்டது என் கின்றனர். வேறுசிலர் உபரியான (நஃபிலான) தொழுகை களை நடத்துவது கூடும்; கடமையான தொழுகைகளில் கூடாது என்று கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஒரு பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும்.

இதைத் நன்கு அறிந்து கொள்வதற்கு முக்னி நூலில் 2ழூ ழூ202 லும் மஜ்மூவு என்ற நூலில் 4ழூ ழூ84,85 லும் பார்க்க!

பிற ஆண்கள் இல்லாதபோது தொழுகையில் இமாமத் செய்யும் பெண் சப்தமிட்டு ஓதலாம்.

5. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஆண்களுடன் ஜமாஅத்தாகத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது அவர்களுக்குச் சிறந்ததாகும்.

”பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூது)

”பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தடுக்கா தீர்கள். ஆனால் அவர்களின் வீடு அவர்களுக்குச் சிறந்த தாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)

ஒரு பெண் தன்னை மறைத்துக் கொள்வதற்கு வீட்டிலிருந்து தொழுவதுதான் அவளுக்குச் சிறந்ததாகும்.

ஒரு பெண் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது பின்வரும் ஒழுங்கு முறைகளைப் பேணிக்கொள்வது கடமையாகும்.

1. முழுமையாகப் பர்தா அணிந்திருக்க வேண்டும்.

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பெண்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும்போது தங்களை முழுமை யாக ஆடையால் மறைத்திருப்பார்கள். அப்போது அவர்கள் யார் என்பதை குறைந்த வெளிச்சத்தில் கண்டு பிடிக்க முடியாது.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

2. வெளியில் செல்லும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்வது கூடாது.

”அல்லாஹ்வின் பள்ளிவாசலுக்குச் செல்லும் பெண் களை தடுக்காதீர்கள் அவர்கள் வெளியில் செல்லும் போது நறுமணம் ப+சாமல் செல்லட்டும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அப+தா¥த்)

”எந்தவொரு பெண் நறுமனத்தைப் பயன்படுத்து கிறாளோ அவள் நம்முடன் இஷா தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வரவேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், அபூ தாவூது மற்றும் நஸயீ)

”பள்ளிவாசலுக்கு வரக்கூடிய பெண்களில் யாரும் நறுமணம் பூசாது இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த் அவர்களின் மனைவி ஜைனப் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 3ழூ ழூ140,141 ல் குறிப்பிடுகிறார்.

இந்த ஹதீஸின் மூலம் விளங்குவது என்னவென்றால் தவறான காரியங்களுக்கு இடம் அளிக்கின்ற விஷயங்கள் இடம் பெறாத போதுதான் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம். தவற்றைத் தூண்டுகின்ற விதத்தில் உள்ளவற் றில் ஒன்றுதான் நறுமணம் பூசுவதும். பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்குக் கொடுத்த அனுமதி அவர்கள் நறு மணம் ஆபரணம் போன்ற தவறுகளின்பால் ஈர்க்கின்றவை இல்லாத போதுதான்.

3. வெளியில் செல்லும்போது…

ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.

”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல் வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களை யும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.

இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டா லும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதை களிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.

4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நிலை ஏற்பட்டால் ஆண்களுக்குப்பின்னால் தனியாக வரிசையில நிற்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தொழும்போது நானும் ஓர் அநாதையும் வரிசையில் நின்றோம் எங்களுக்குப் பின்னால் வயது முதிர்ந்த பெண் நின்றாள்” என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

”எங்களுடைய வீட்டில் நானும், ஓர் அநாதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். எங்களுடைய தாயார் உம்முசுலைம் எங்களுக்குப் பின்னால் நின்றார்” என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

”ஜமாஅத் தொழுகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கள் வருவார்களானால் ஆண்களுக்குப்பின்னால் வரிசையாக நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வருசைப்படுத்தும் போது ஆண்களை முன் வரிசையிலும் அவர்களுக்குப் பின்னால் சிறுவர் களையும் அவர்களுக்குப் பின்னால் பெண்களையும் நிறுத்துவார்கள்” (நூல்: அஹ்மத்)

”ஆண்களின் வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையா கும், அதில் சிறப்புக் குறைந்தது கடைசி வரிசையாகும். பெண்களின் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும். அதில் சிறப்பு குறைந்தது முதல் வரிசையாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் பின்வரும் விஷயங்களை அறிவிக்கின்றன. பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் வரிசையாக நிற்கவேண்டும். கடமையான தொழுகையானாலும் ரமளானில் தொழும் இரவுத் தொழுகையானாலும் தொழும்போது சிதறியவர்களாகத் தொழக் கூடாது.

5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் தங்கள் ஒரு கையின் மேல் மற்றொரு கையை தட்டி ஞாபகமூட்ட வேண்டும்.

”தொழுகையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமாயின் ஆண்கள் ‘தஸ்பீஹ்’ சொல்லட்டும். பெண்கள் ஒரு கையின் மேல் இன்னொரு கையை அடிக்க வேண்டும், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

ஜமாஅத் தொழுகையில் ஏதாவது தவறு நிகழும் போது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியாகும். காரணம் பெண்களின் குரல் ஆண்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியதாகும். எனவே கையில் அடிக்கும்படியும், பேசமால் இருக்கும் படியும் ஏவப்பட்டுள்ளாள்.

இமாம் ஸலாம் சொல்லி விடுவாரானால் பெண்கள் ஸலாம் கொடுத்துவிட்டு விரைவாக பள்ளியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்

ஆண்கள் அமர்ந்திருக்க வேண்டும் திரும்பிச் செல்லும் பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஏற்படாதிருக்க இவ்வாறு செய்ய வேண்டும். உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.

கடமையான தொழுகைகளிலிருந்து பெண்கள் ஸலாம் கொடுத்துவிடுவார்களானால் அவர்கள் எழுந்து சென்றுவிடுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆண்களும் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்த பின்னர் மற்றவர்களும் எழுந்து செல்வார்கள்.

இமாம் சுஹரி அவர்கள் அறிவிக்கிறார்கள். பெண் கள் திரும்பிச் செல்லவேண்டும் என்பதற்காகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிது நேரம் அமர்வார்கள். (நூல்: அஷ்ஷரஹுல் கபீர் அல் முகனி பக்கம் 1ழூ ழூ422)

இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் என்ற நூலில் 2ழூ ழூ326 ல் குறிப்பிடுகிறார்கள்.

தொழுகை நடத்தும் இமாம் தம் பின்னால் நின்று தொழுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தடுக்கப்பட்ட விஷயங்களுக்கு இழுத்துச் செல்கின்ற காரியங்களை விட்டும் தூரமாக இருக்கவேண்டும். வீடு ஒரு புறமிருக்க பாதைகளில் கூட அந்நியப் பெண்களும், ஆணும் கலந்திருப்பதை வெறுக்க வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழி அறிவிக்கிறது.

இமாம் நவவி அவர்கள் மஜ்மூவு என்ற நூலில்3ழூ ழூ455ல் குறிப்பிடுகிறார்.

6. ஜமாஅத்தாகத் தொழும்போது பெண்கள் ஆண்களிலிருந்து பல விஷயங்களில் வேறுபடுகிறார்கள்.

1. ஜமாஅத் தொழுகை ஆண்களுக்கு கடமையானது போன்று பெண்களுக்குக் கடமையாக இல்லை.

2. பெண்களுக்கு, பெண் இமாமாக நின்று தொழும்போது வரிசையின் நடுவில் நிற்கவேண்டும்.

3. ஒரு பெண் தனியாக ஜமாஅத் தொழுகைக்கு வருவாளா னால் தனியாக பின் வரிசையில் நிற்கவேண்டும். ஆண் கள் அவ்வாறு நிற்கக் கூடாது.

4. ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் பல வரிசைகளாக நின்று தொழும்போது கடைசி வரிசையே அவர்களுக் குச் சிறந்ததாகும்.

ஆண்களும் பெண்களும் கலந்திருப்பது கூடாது என்பதைத்தான் மேற்கண்ட விஷயங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

7. பெருநாள் தொழுகைக்கு பெண்கள் செல்லுதல்.

”ஹஜ்பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைக்காக மாதவிடாய்ப் பெண்களையும் கன்னிப் பெண்களையும் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளி யேற ஏவும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள். மாதவிடாய்ப்பெண்கள் தொழாமல் இருக்க வேண்டும் நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்” என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகிறார்கள்.

கன்னி, என்றும் கன்னித்தன்மை அற்றவள் என்றும் வாலிபம் என்றும் வயோதிகம் என்றும் மாதவிடாய்காரி என்றும் பாகுபடுத்தாமல் எல்லா பெண்களும் பெருநாள் தொழுகைக்காக வெளியே செல்ல வேண்டும். என்பதைத் தான் இதுபோன்ற ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

இத்தாவில் இருக்கின்ற பெண், அல்லது அவள் வெளியே வருவதினால் ஏதாவது குழப்பம் ஏற்படும் என்று கருதும் பெண், அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ள பெண் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார். (நைலுல் அவ்தார் பக்கம் 3ழூ ழூ306)

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் 6ழூ ழூ458-459ல் குறிப்பிடுகிறார்கள்.

பெருநாளைத் தவிர மற்ற ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வதை விட வீட்டில் தொழுவதே பெண்களுக்குச் சிறந்ததாக இருக்கிறது.

பெருநாளைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே செல்லக் கட்டளையிடப்பட்டுள்ளனர். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை,

1. பெருநாள் தொழுகை ஒரு ஆண்டில் இரண்டு முறைதான் நடக்கிறது. ஆனால் ஜும்ஆ தொழுகையும் ஜமாஅத் தொழுகையும் அவ்வாறல்ல.

2. ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைக்குப் பகரமாக தம் வீட்டில் லுஹர் தொழுது கொள்வதுதான் அவளுக்கு ஜும்ஆவாகும். பெருநாள் தொழுகையைப் பொறுத்த வரை அதற்குப் பகரமாக வேறு தொழுகை ஏதும் தொழ முடியாது.

3. பெருநாள் தொழுகைக்காக அல்லாஹ்வைத் தொழுது ஞாபகப்படுத்துவதற்காக எல்லோரும் மைதானத் திற்குச் செல்கின்றனர். சில விதத்தில் இது ஹஜ்ஜிற்கு ஒப்பான தாக உள்ளது. எனவே தான் பெரிய பெருநாள் ஹாஜி களுக்கு ஒத்தார்போல் ஹஜ்ஜுடைய காலத்தில் வருகிறது. ஹாஜிகளைப் பொறுத்தவரையில் அரபா மைதானத்தில நிற்கும் நாள்தான் அவர்களுக்குப் பெருநாளாகும்.

(உடல் பருமனில்லாத உடல் அமைப்பு வெளியில் தெரியாத) அழகில் குறைந்த பெண்கள்தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்ல வேண்டும் என இமாம் ஷாஃபியீ குறிப்பிடுகிறார்.

இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 5ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்.

இமாம் ஷாஃபீயும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள்: தன் உடற்கட்டு வெளியே தெரியாத பெண்கள் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. உடல்கட்டு வெளியே தெரியும் படியான பெண்கள் வெளியில் செல்வது வெறுக்கப்படுகிறது. அப்படியே அவர்கள் வெளியே செல்வதானால் இறுக்கமில்லாத ஆடையை அணிந்து செல்லவேண்டும. தங்களை வெளிப்படுத்திக் காட்டும் எந்த ஆடையையும் அணிவது கூடாது.

தண்¡ரால் சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது. நறுமணமுள்ள பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது. இவையெல்லாம் வயது முதிர்ந்த பெண்களுக்குத் தான், அதே நேரத்தில் இளம்பெண், அழகுள்ள பெண், ஆசையைத் தூண்டுகின்ற பெண் ஆகியோர் வெளியில் செல்வது வெறுக்கப்பட்டுள்ளது. காரணம் அப்பெண்கள் மீதோ, அப்பெண்களாலோ தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

இது உம்முஅதிய்யா அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளதே என்று வினவப்பட்டால் இதற்கு பதில் ஆயிஷா (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸாகும்.

இக்காலத்தில் பெண்கள் புதுமையாக ஏற்படுத்தியுள்ள பழக்க வழக்கங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்ப்பார் களானால் இஸ்ரவேலப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இவர்களும் தடுக்கப் பட்டிருப்பார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

காரணம் ஆரம்பகாலம் போல் அல்லாமல் இக்காலத்தில் தீமைக்குரிய காரணங்களும், குழப்பங் களும் அதிகரித்துவிட்டன. இக்காலத்தில் இவை மிகக் கடுமையாகவே உள்ளன.

இமாம் இப்னுல் ஜவ்ஸி ‘அஹ்காமுன்னிஸா’ என்ற நூலின் பக்கம் 38 ல் குறிப்பிடுகிறார்.

பெண்கள் வெளியில் செல்வது அனுமதிக்கப் பட்டதுதான். ஆனால் அவள் மீதோ, அவளினாலோ குழப்பங்கள் ஏற்படும் என்று அஞ்சப்படுமானால் வெளியில் செல்லாமலிருப்பதே சிறந்தது, காரணம் ஆரம்பகால பெண்கள் வாழ்ந்த சூழ்நிலை இக்காலத்து பெண்கள் வாழும் சூழ்நிலையைப் போன்றதல்ல, இவ்வாறே ஆண்களும் அன்று காணப்பட்டனர். ஆரம்ப கால மக்கள் மிகவும் பேனுதலுடையவர்களாக இருந்தனர்.

இஸ்லாமியப் பெண்ணே! மேலே கூறப்பட்டுள்ள இமாம்களின் கூற்றிலிருந்து, குறிப்பிடப்பட்ட நிபந்தனை களுடனும். அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேட வேண்டும் என்ற எண்ணத்துடனும் முஸ்லிம்களுடன் (அழைப்புப் பணியிலும்), பிரார்த்தனையிலும் பங்கு பெறவேண்டுமென்ற எண்ணத்திலும் தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்லவேண்டும் என்பதை புரிந்து கொள்வாய், பெருநாளைக்கு வெளியில் செல்ல அனுமதி கிடைத்திருப்பது அலங்காரத்தை வெளிப் படுத்தவோ, குழப்பம் ஏற்படுத்தவோ அல்ல என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

55 + = 56

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb