கலப்பட தங்கம்!
தங்க நகை மேலுள்ள மோகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. விலையேற்றத்தைப் போலவே. ஒரு சவரன் நகை சேதாரம் சேர்த்த விலை 23,500. ஏற்றம் பற்றி மணமகன் சமூகத்திற்கு கவலையில்லை. மணப்பெண்களுக்கும் ஆசை குறையப்போவதில்லை. மாட்டிக் கொண்டு விழிப்பவர்கள் பெண்ணின் தாய், தந்தையர்.
தங்க நகை பக்கம் பார்வை திருப்பாமல் குஜராத் போரா முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களது ஆபரணம் வெள்ளி நகை மட்டுமே. அச்சமூகத்தில் வரதட்சணை, முதிர் கன்னிகள் பிரச்சினையில்லை.
தமிழக முஸ்லிம் சமூகமும் வெள்ளி நகைக்கு மாறவேண்டும். வெள்ளியில் நகை செய்து தேவைப்பட்டால் தங்க முலாம் பூசிக் கொள்ளலாம். ஒரு சவரனுக்கு 2,000த்துக்கும் மேல் லாபம் ஈட்டப்படுவதாகக் கூறப்படும் தங்க ஆபரணங்களில் பல நுணுக்கங்கள் உள்ளன. அவை அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடியவையல்ல.
ஹால்மார்க் முத்திரை என்பது அரசு தருவது. தரம் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. 916 ரிஞிவி ஹால்மார்க் என்பதன் பொருள் ‘‘அரசு அனுமதித்த அளவுக்குத் தக்கவாறு செம்புகலக்கப்பட்ட நகை’’ இவ்வாறான ஆபரணங்கள். 99% டச் உள்ள ஒரிஜினல். 91.60 என்பதுதான் 916 எனக் கூறப்படுகிறது.
100 சதத்தில் 8.40 பாயிண்ட் செம்பு, வெள்ளி கலந்து தயாரிக்கப்படுகிறது. ஹால்மார்க் இல்லாத ரிஞிவி 95% வரை டச் உள்ளவை என வியாபாரிகள் கூறுகின்றனர். ஹால்மார்க் ரிஞிவி இரண்டுமில்லாத நகைகள் 85% டச் உள்ளவை. விற்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும். நகைகள் சில கடைகளில் வாங்கி அணியும்போது கறுத்துவிடும். செம்பு நிறத்திற்கு மாறும், சூட்டுடம்பு கலர் மாற்றிவிட்டது.
உப்பு காற்றுப்பட்டதால், உப்பு தண்ணீரில் குளித்ததால் நிறம் கருத்திருக்கிறது இவ்வாறு சமாதானம் கூறப்படும். இவையனைத்தையும் மறுக்கிறார் இவ்வியாபாரத்திலுள்ள அனுபவஸ்தர் குஜராத் பிரவீன்பட். காப்பர் கலப்பு அதிகமே நிறம் மாற்றத்திற்கான காரணாமென்கிறார்.
நகைகளில் எத்தனை சதம் செம்பு கலக்கப்பட்டுள்ளது? ரகம் பிரித்து அறிய வியாபாரிகளுக்கென்று டச்சிங் பார்த்துக் கொடுக்கும் அரசு அனுமதி பெற்ற சில கடைகள் சௌகார் பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளன. அங்கு சென்று அறிந்து கொள்ளலாம். ஆபரண நகைகளில் வளையலில் செம்பு கலப்பு அதிகமிருக்கும். பெங்களூர், ராஜ்கோட் தங்க நகைகளுக்கு சந்தையில் மறுமதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
-கரீம்கனி, செப்டம்பர் 2011 முஸ்லிம் முரசு.
source: http://jahangeer.in/?paged=2